Home
News

புது UPI ரூல்ஸ்.. இனிமே QR பேமெண்ட் இல்ல.. ரூ.2000-க்கு மேல‌ இல்ல.. GPay, PhonePe மட்டுமில்ல.. என்ன மாறுது?

கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe), பேடிஎம் (Paytem) மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த யுபிஐ ஆப்களுக்கும் (UPI Apps) என்பிசிஐ (NPCI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (National Payments Corporation of India) ஆனது புதிய விதிகளை கொண்டுவந்துள்ளது. இந்த விதிகள் ஒட்டுமொத்த யுபிஐ கஸ்டமர்களுக்கும் பொருந்தும். ஆனால், குறிப்பிட்ட பேமெண்ட் முறைகளுக்கு மட்டுமே விதிக்கப்பட்டுள்ளன. இதனால், பணம் அனுப்புவதில் சிக்கல் ஏற்படலாம். இதனால் யாருக்கு சிரமம் இருக்கும் என்பதை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

யுபிஐ ஆப்கள் மூலம் நேரடியாக மொபைல் நம்பர் மூலம் பணம் அனுப்பலாம் அல்லது கியூஆர் கோட் ஸ்கேனிங் மூலமும் பணம் அனுப்பலாம். இந்த கியூஆர் கோட் ஸ்கேனிங் முறையிலேயே இப்போது புதிய விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதாவது, கியூஆர் ஷேர் & பே (QR Share & Pay) மூலம் செய்யப்படும் யுபிஐ பரிவர்த்தனைகள் (UPI Transactions) நிறுத்தப்பட்டுள்ளன.

புது UPI ரூல்ஸ்.. இனிமே QR பேமெண்ட் இல்ல.. ரூ.2000-க்கு மேல‌ இல்ல!

ஆனால், இது சர்வதேச பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே பொருந்தும். உள்நாட்டு பரிவர்த்தனைகளுக்கு பொருந்தாது. இருப்பினும், உள்நாட்டு பரிவர்த்தனைகளுக்கு லிமிட் இருக்கிறது. இந்தியா மட்டுமல்லாமல், பிரான்ஸ், மொரிஷியஸ், நேபாளம், சிங்கப்பூர், இலங்கை மற்றும் யுஏஐ போன்ற நாடுகளிலும் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு அனுமதி கொடுக்கப்படுகிறது.

இதனால், அங்கு செல்லும் இந்தியர்கள் கூகுள் பே, போன்பே போன்ற யுபிஐ ஆப்கள் மூலம் பரிவர்த்தனைகளை செய்துவருகின்றனர். அதேபோல அங்கு இருக்கும் வணிகர்களிடம் இந்தியர்கள் பொருட்களை வாங்கிவிட்டு, அதற்கு கியூஆர் கோட் மூலம் பணம் செலுத்தியும் வந்தனர். ஆகவே, இந்த கியூஆர் கோட் யுபிஐ பரிவர்த்தனைகள் வணிக ரீதியாக செய்யப்படுகின்றன.

ஆனால், அங்கு இருக்கும் வணிகர்கள் இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்தின் கட்டுப்பாடுகள் மற்றும் அனுமதிக்கு உடன்பட்டவர்களாக இருக்க மாட்டார்கள். இதனாலேயே கியூஆர் ஷேர் & பே மூலம் செய்யப்படும் சர்வதேச யுபிஐ பரிவர்த்தனைகள் நிறுத்தப்பட்டுள்ளன. ஆகவே, இனிமேல் மற்ற நாடுகளில் கியூஆர் ஷேர் & பே மூலம் பரிவர்த்தனைகளை செய்ய முடியாது.

இதனால், சிங்கப்பூர், இலங்கை மற்றும் யுஏஐ போன்ற நாடுகளில் அதிகமாக இருக்கும் இந்தியர்களுக்கு இது சிரமத்தை கொண்டுவர வாய்ப்புள்ளது. இந்தியாவிலும் வணிகர்களிடம் செய்யும் பரிவர்த்தனைகளுக்கு கட்டுப்பாடுகள் இருக்கின்றன. அதாவது, கியூஆர் ஷேர் & பே மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு அதிகபட்சம் ரூ.2000 வரம்பு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

இது இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்திடம் பதிவு செய்யப்படாத வணிகர்களுக்கு மட்டுமே பொருந்தும். இல்லையென்றால், யுபிஐ ஆப்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட அதிகப்படியான தொகை வரையில் அனுப்பி கொள்ளலாம். ஆகவே, பதிவு செய்யப்படாத வணிகர்களுக்கு ரூ.2000-க்கு மேல் அனுப்ப முடியாது. இந்த விதியானது ஏற்கனவே அமலில் இருக்கிறது.

ஆனால், சர்வதேச பரிவர்த்தனைகளுக்கான விதிகள் புதிதாக அமல் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற ஆப்களில் கொடுக்கப்பட்ட மொபைல் நம்பர்களை நீக்கும்படியான விதிகளை இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் அமலுக்கு கொண்டுவந்தது. இந்த விதிகள் மூலம் செயலற்ற / மறுசுழற்சி செய்யப்பட்ட மொபைல் நம்பர்கள் நீக்கப்படுகின்றன.

அதாவது, பேங்குகள் அல்லது யுபிஐ ஆப்களில் கொடுக்கப்பட்ட மொபைல் நம்பர்கள் ரீசார்ஜ் செய்யப்படாமல் செயலற்று போனாலோ அல்லது அந்த நம்பர் வேறுவருக்கு ஒதுக்கப்பட்டாலோ அதை பழைய பேங்க் அக்கவுண்ட் மற்றும் யுபிஐ ஆப்களில் இருந்து நீக்குமாறு இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் உத்தரவிட்டது. இதன்படி மொபைல் நம்பர்கள் நீக்கப்படுகின்றன.

ஆகவே, யுபிஐ ஐடிகளை ஓப்பன் செய்யும்போது அதில் கொடுக்கப்பட்ட மொபைல் நம்பர்களை தொடர்ந்து ஆக்டிவாக வைத்திருக்க வேண்டி இருக்கிறது. இல்லையென்றால், அதன் மூலம் எந்தவித பணப் பரிவர்தனைகளையும் செய்ய முடியாமல் போகும் என்பது தெரிகிறது. இதுபோன்ற பல்வேறு விதிகள் யுபிஐ பரிவர்த்தனைகளில் அமல் செய்யப்பட்டு வருகின்றன.

Best Mobiles in India

English summary
New UPI Rules For QR Share And Pay International Payments Discontinued Domestic Limit Rs 2000
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X