Home
News

Google Pay-க்கு வருது.. UPI பேமெண்ட்டில் புது ரூல்ஸ்.. ரிசர்வ் பேங்க் வெச்ச வேட்டு.. மாறுது பிபிஐ வாலெட்!

இந்த நிதியாண்டில் பல்வேறு புதிய விதிகளை அமல்படுத்த ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா (Reserve Bank of India) தயாராகிவிட்டது. நிதிக் கொள்கை கூட்டத்துக்கு பிறகு ஒவ்வொன்றாக அறிவிக்கப்பட்டு வருகிறது. இப்போது, பிபிஐ வாலெட் விதிகளை (PPI Wallets Rules) முன்மொழிந்துள்ளது.

இந்த விதிகள் கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe) போன்ற மூன்றாம் தர ஆப்களில் இருந்து பிபிஐ வாலெட் பணப்பரிவர்த்தனைகளை செய்து கொள்ள வழிவகை செய்கிறது. அதாவது, ப்ரீபெய்ட் பேமென்ட் இன்ஸ்ட்ரூமென்ட் (Prepaid Payment Instruments - PPI) மூலம் யுபிஐ (UPI) பரிவர்த்தனைகளை செய்ய கட்டுப்பாடுகள் இருந்தது.

 UPI பேமெண்ட்டில் புது ரூல்ஸ்.. ஆர்பிஐ வெச்ச வேட்டு.. மாறுது பிபிஐ!

அந்தந்த பிபிஐ வாலெட் வழங்குநரின் ஆப் அல்லது வெப்சைட் மூலம் மட்டுமே பரிவர்த்தனைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனால், பிபிஐ வாலெட்களில் இருக்கும் தொகையை பரிமாற்றம் செய்ய முடியாது. ஆனால், ஆர்பிஐ (RBI) முன்மொழிந்துள்ள புதிய விதிகள் மூலம் மூன்றாம் தர ஆப்களுக்கும் பரிமாற்ற அனுமதி வழங்கப்படும்.

ஆகவே, பிபிஐ வாலெட்களில் இருந்து யுபிஐ பரிவர்த்தனைகளை செய்துகொள்ள கூகுள் பே, போன்பே, போன்ற மூன்றாம் தர யுபிஐ ஆப்களை (UPI Apps) பயன்படுத்தி கொள்ளலாம். இது யுபிஐ வாடிக்கையாளர்களின் வசதியை மேம்படுத்துவதோடு சிறிய மதிப்புள்ள தொகைகளை பரிமாற்றம் செய்துகொள்ள அனுமதி வழங்கும்.

இதன் மூலம் சிறிய தொகைகள் எளிதாகவும், விரைவாகவும் அதிகளவில் கையாளப்படும். ஆகவே, வங்கி கணக்குக்கு நிகராக பிபிஐ வாலெட்டுகளில் பணத்தை பறிமாற்றி கொள்ளலாம். அதே நேரத்தில், ரீசார்ஜ், ஆன்லைன் ஷாப்பிங், டிக்கெட் புக்கிங் போன்ற சிறிய பரிவர்த்தனைகளுக்கு பிபிஐ வாலெட்கள் பயன்படுத்தப்படுவது அதிகரிக்கும்.

 UPI பேமெண்ட்டில் புது ரூல்ஸ்.. ஆர்பிஐ வெச்ச வேட்டு.. மாறுது பிபிஐ!

இதன் மூலம் சிறிய பரிவர்த்தனைகளுக்காக நேரடியாக வங்கியில் இருந்து பணத்தை எடுக்கும் நடைமுறை படிப்படியாக குறையவும் வாய்ப்புள்ளது. அதேபோல பிபிஐ வாலெட்டுகளில் யுபிஐ பரிவர்த்தனைகள் நுழைவதால், அதுதொடர்பான போட்டிகளும் பணப்பரிமாற்ற ஆப் நிறுவனங்களுக்கு இடையே அதிகரிக்கும். ஆகவே, பிபிஐ வாலெட்களின் வளர்ச்சி அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இப்போது, பேடிஎம், போன்பே, அமேசான் பே (Amazon Pay) மற்றும் ப்ரீசார்ஜ் (Freecharge) போன்ற நிறுவனங்களில் பிபிஐ வாலெட்டுகளில் முன்னணியில் இருக்கின்றன. ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவின் இந்த புதிய முன்மொழிவு காரணமாக வரும் காலங்களில் மற்ற யுபிஐ ஆப்கள் மட்டுமல்லாமல், கூகுள் வாலெட் போன்ற ஏற்கவே இருக்கும் வாலெட் ஆப்களின் வளர்ச்சி அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இந்த விதிகளை முன்மொழிந்த அதே நேரத்தில் வங்கி கணக்கில் பணம் டெபாசிட் செய்ய கேஷ் டெபாசிட் மெஷின்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கும் புதிய விதிகள் முன்மொழியப்பட்டு இருக்கிறது. இந்த விதிகள் மூலம் டெபிட் கார்டு எடுத்து சென்று பணத்தை டெபாசிட் செய்ய வேண்டியது கிடையாது.

இதற்கு யுபிஐ ஆப்களையே பயன்படுத்தி கொள்ளலாம். ஏடிஎம்களில் பணத்தை எடுக்க டெபிட் கார்டு இல்லாமல், கியூஆர் கோட் மற்றும் யுபிஐ பாஸ்வேர்ட் மூலம் பணத்தை எடுக்கும் நடைமுறை போலவே கேஷ் டெபாசிட் மெஷின்களிலும் இந்த சேவை வர இருக்கிறது. ஆகவே, யுபிஐ ஆப் மட்டுமே வைத்து கொண்டு கேஷ் டெபாசிட் செய்து கொள்ளலாம்.

இப்படி பல்வேறு விதிகள் வரும் மாதங்களில் அமலுக்கு வர இருக்கின்றன. இதன் மூலம் நேரடிப் பணப்பரிவத்தனைகள் முற்றிலும் குறையும். அதே நேரத்தில் பாதுகாப்பும் அதிகரிக்கப்படுகிறது. குறிப்பாக பிபிஐ வாலெட் முன்மொழிவானது, டிஜிட்டல் சில்லறை வர்த்தகத்தில் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
New UPI Rules For PPI Wallets To Make UPI Transactions Through Google Pay PhonePe Third-party Apps
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X