புது ரூல்ஸ்.. Google Pay, PhonePe பேமெண்ட்.. இனிமே ரூ.1000 இருந்தாகூட UPI ஆப் போதும்.. PPI-க்கு வந்த மாற்றம்!
இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) என்றழைக்கப்படும் ஆர்பிஐ (RBI) ஆனது யுபிஐ விதிகளில் (UPI Rules) புதிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe) போன்ற மூன்றாம் தர யுபிஐ ஆப்கள் மூலம் பணம் அனுப்புதல் மற்றும் பெறுதல் சேவைகளில் இந்த விதிகள் வருகின்றன. ப்ரீபெய்ட் பேமெண்ட் இன்ஸ்ட்ருமென்ட்ஸ் - பிபிஐ (Prepaid Payment Instrument - PPI) பணத்தை இனிமேல் யுபிஐ ஆப்கள் மூலமும் அனுப்பலாம்.
கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற யுபிஐ ஆப்கள் நேரடியாக பேங்க் மூலம் இணைக்கப்பட்டிருக்கிறது. ஆகவே, அந்த ஆப்கள் மூலம் பணத்தை அனுப்பினாலோ அல்லது பெற்றாலோ நேரடியாக பேங்க் அக்கவுண்டுக்கு மாற்றப்படும். இந்த பணப் பரிவர்த்தனைகளை மொபைல் நம்பர் (Mobile Number) அல்லது கியூஆர் கோட் (QR Code) மூலம் செய்து கொள்ள முடிகிறது.

கிட்டத்தட்ட இதேபோலத்தான் ப்ரீபெய்ட் பேமெண்ட் இன்ஸ்ட்ருமென்ட்ஸ் மூலமும் பரிவர்த்தனைகளை செய்ய முடியும். ஆனால், அது பேங்குகளுக்கு இடையே பரிவர்த்தனைகளை கொடுக்காது. வாலெட் போல மட்டுமே செயல்படும். அதாவது, குறிப்பிட்ட தொகையை அந்த வாலெட்டில் வைத்து கொண்டு பேமெண்ட்களை செய்யலாம். ஆனால், இது யுபிஐ ஆப்கள் போல் இருக்காது.
அதாவது, ப்ரீபெய்ட் பேமெண்ட் இன்ஸ்ட்ருமென்ட்ஸ் சேவையை வழங்கும் ஆப்களுக்கு இடையே மட்டுமே இந்த பரிவர்த்தனைகளை செய்ய முடியும். இது பாதுகாப்பானதாக இருந்தாலும், பிபிஐ வாலெட்டில் இருக்கும் பணத்தை கூகுள் பே, போன்பே போன்ற மூன்றாம் தர யுபிஐ ஆப்கள் மூலம் அனுப்பவோ பெறவோ முடியாமல் இருந்து வந்தது. ஆனால், ஆர்பிஐ இப்போது புதிய விதிகள் மூலம் அதை கொண்டுவந்துள்ளது.
இந்த யுபிஐ விதிகள் மூலம் ப்ரீபெய்ட் பேமெண்ட் இன்ஸ்ட்ருமென்ட்ஸ் தொகையை பரிமாற்றம் செய்ய அந்த சேவை வழங்குநர்கள் ஆப்கள் மட்டுமல்லாமல், கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற மூன்றாம் தர யுபிஐ ஆப்களையும் பயன்படுத்தி கொள்ள முடியும். இதன் மூலம் நேரடியாக பேங்க் அக்கவுண்ட்டில் இருந்து பணத்தை அனுப்பாமல் பிபிஐ வாலெட்டில் இருந்து அனுப்பி கொள்ளலாம்.
அதேபோல பணத்தை பெற்று கொள்ளலாம். ஆகவே, நேரடியாக பேங்குகள் இதில் பங்கு பெறாது. இதனால் பாதுகாப்பான பேமெண்ட்களை ப்ரீபெய்ட் பேமெண்ட் இன்ஸ்ட்ருமென்ட்ஸ் கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம். இருப்பினும், யுபிஐ ஆப்கள் மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளின் வரம்பைவிட பிபிஐ வாலெட்களில் வரம்பு குறைவாகவே இருக்கும்.
ஆனால், இது பாதுகாப்பான பேமெண்ட்களை உறுதி செய்கிறது. அதேபோல ஒட்டுமொத்த பிபிஐ கஸ்டமர்களும் இப்படி மூன்றாம் தர யுபிஐ ஆப்கள் மூலம் பேமெண்ட்களை செய்துவிட முடியாது. ஃபுல் கேஒய்சி பிபிஐ (Full KYC PPI) முடித்த கஸ்டமர்கள் மட்டுமே இந்த மூன்றாம் தர யுபிஐ ஆப்களின் (Third Party UPI Apps) பரிவர்த்தனைகள் சேவையை பெற்று கொள்ள முடியும்.
ஆகவே, ப்ரீபெய்ட் பேமெண்ட் இன்ஸ்ட்ருமென்ட்ஸ் கஸ்டமர்கள், ஃபுல் கேஒய்சி அப்டேட் செய்த பிறகு மூன்றாம் தர யுபிஐ ஆப்களின் மூலம் பரிவர்த்தனைகள் செய்ய அனுமதி கொடுக்கப்பட இருக்கிறது. இனிமேல் ப்ரீபெய்ட் பேமெண்ட் இன்ஸ்ட்ருமென்ட்ஸ் வாலெட்டில் ரூ.100 இருந்தால்கூட கூகுள் பே, போன்பே போன்ற ஆப்கள் மூலம் அனுப்புதல் மற்றும் பெறுதல்களை செய்யலாம்.
இதேபோல யுபிஐ 123பே விதிகள் வரும் ஜனவரி 1ஆம் தேதியில் இருந்து அமல் செய்யப்படுகின்றன. இதன் மூலம் ரூ.5000ஆக இருந்த வரம்பு இனிமேல் ரூ.10000ஆக மாற இருக்கிறது. ஆகவே, ஜனவரி 1ஆம் தேதிக்கு பிறகு பரிவர்த்தனைகளை செய்யும் யுபிஐ 123பே கஸ்டமர்கள் ரூ.10000 வரையில் பரிவர்த்தனைகளை செய்து கொள்ள முடியும். யுபிஐயில் இந்த மாற்றங்களே அமலுக்கு வருகின்றன.


Click it and Unblock the Notifications








