புது ரூல்ஸ்.. 2 பேருக்கு 1 பேங்க் அக்கவுண்ட்.. இனி பணம் அனுப்ப இதை பண்ணுங்க.. UPI-க்கு வருது பேமெண்ட் ரூல்ஸ்!
பேங்க் அக்கவுண்ட் மூலம் யுபிஐ பணப் பரிவர்த்தனை செய்யும் ஒவ்வொரு கஸ்டமர்களுக்கும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா - ஆர்பிஐ (Reserve Bank of India - RBI) புதிய யுபிஐ விதிகளை (New UPI Rules) கொண்டுவந்துள்ளது. இனிமேல் ஒரு பேங்க் அக்கவுண்ட்டில் பிரைமரி மற்றும் செகண்டரி என்று இரண்டாக பிரித்து பயன்படுத்த முடியும். கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற யுபிஐ ஆப்களை வைத்திருக்கும் அனைத்து கஸ்டமர்களும் இந்த விதிகளை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும்.
கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe), பேடிஎம் (Paytm) போன்ற யுபிஐ ஆப்கள் (UPI Apps) மூலம் பணப் பரிவர்த்தனைகளை செய்யாத பேங்க் கஸ்டமர்களை இப்போது பார்க்க முடியாது. முக்கால்வாசி பேங்க் கஸ்டமர்கள் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாறிவிட்டனர். ஆகவே, யுபிஐ பேமெண்ட்களில் ஏதாவது புதிய விதிகள் வந்தால், பேங்க் கஸ்டமர்கள் அதை தவிர்த்துவிட்டு செல்ல முடியாது.

இப்போது வந்திருக்கும் விதிகளும் அப்படித்தான். பேங்க் அக்கவுண்ட் மூலம் யுபிஐ அக்கவுண்ட்டை தொடங்கினால், ஒரேவொரு அக்கவுண்ட்டை மட்டுமே ஓப்பன் செய்ய முடியும். அதிலும் ஒரே பேங்கில் 2 அக்கவுண்ட்கள் வைத்திருந்தாலும் கூட அவற்றில் ஒரே மொபைல் நம்பரை கொடுத்திருந்தால், யுபிஐ அக்கவுண்ட் ஓப்பன் செய்வது இயலாத காரியமாகும்.
ஆனால், இப்போது வந்துள்ள விதிகள் மூலம் ஒரே பேங்க் அக்கவுண்ட் மூலம் 2 யுபிஐ அக்கவுண்ட்களை ஓப்பன் செய்து கொள்ளலாம். அதிலும், 2ஆவதாக ஓப்பன் செய்யப்படும் யுபிஐ அக்கவுண்ட்டில் எவ்வளவு பணம் அனுப்பப்பட வேண்டும் என்பதையும் பேங்க் கஸ்டமர்களே முடிவு செய்து கொள்ளலாம். இந்த 2ஆவது அக்கவுண்ட்டுக்கு யுபிஐ ஆப் மட்டுமே போதும், பேங்க் அக்கவுண்ட் வேண்டாம்.
அதாவது, ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவின் ஒதுக்கப்பட்ட பரிவர்த்தனைகள் (Delegated Payments) விதிகளின்படி, பேங்க் அக்கவுண்ட் வைத்திருக்கும் கஸ்டமர்கள் முதலில் ஓப்பன் செய்யும் யுபிஐ அக்கவுண்ட் பிரைமரி பயனர் (Primary User) அக்கவுண்ட்டாக எடுத்து கொள்ளப்படும். இதில் வழக்கமான கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற ஆப்களை பயன்படுத்தி கொள்ளலாம்.

இப்போது, அதே பேங்க் அக்கவுண்ட் மூலம் 2ஆவது முறையாக செகண்டரி பயனர் (Secondary User) அக்கவுண்ட்டை ஓப்பன் செய்து கொள்ள புதிய விதிகள் அனுமதிக்கிறது. இதன் மூலமும் கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற யுபிஐ ஆப்களை பயன்படுத்தி கொள்ள முடியும். அதேநேரத்தில், இதற்கு பிரைமரி பயனர் லிமிடெ் செய்து வைத்து கொள்ள முடியும். ஆகவே, செகண்டரி பயனர் குறிப்பிட்ட தொகையை மட்டுமே பயன்படுத்துவார்.
இதன் மூலம் யுபிஐ ஆப்களை பயன்படுத்தும் பயனர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். அதே போல டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை பல மடங்கு உயர்த்தவும் முடியும். மேலும், ஒரே பேங்க் அக்கவுண்ட் வைத்து குடும்ப உறுப்பினர்களும் 2 யுபிஐ அக்கவுண்ட்களை பயன்படுத்தி கொள்ளலாம். இப்படி பல்வேறு வகையில் இந்த புது யுபிஐ விதிகள் பேங்க் கஸ்டமர்களுக்கு உதவியாக இருக்கப்போகிறது.
இந்த விதிகள் குறித்த விரிவான வழிமுறைகள் விரைவில் வெளியிட போவதாக ஆர்பிஐ தெரிவித்துள்ளது. ஓரிரு மாதங்களில் நடைமுறைக்க கொண்டுவரப்பட வாய்ப்புள்ளது. ஆகவே, வரும் நாட்களில் கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற யுபிஐ ஆப்களில் செகண்டரி பயனருக்கான அப்டேட்கள் சேர்க்கப்படலாம். அதற்கு பிறகு பிரைமரி பயனர்கள் செகண்டரி அக்கவுண்ட்டை ஓப்பன் செய்யலாம் அல்லது அனுமதிக்கலாம்.

முன்னதாக ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவானது, பேங்க் அக்கவுண்ட் மூலம் டிஜிட்டல் பேமெண்ட்களை செய்ய ஓடிபி (OTP) அங்கீகாரம் மட்டுமல்லாமல், கூடுதல் காரணி அங்கீகாரத்தை - ஏஎப்ஏ (Additional Factor of Authentication - AFA) கொண்டுவரப்போவதாக தெரிவித்திருந்தது. ஆதாரில் வரும் பயோமெட்ரிக், ஃபிங்கர்பிரிண்ட் போன்றவை இதில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








