Home
News

UPI.. அக்.1-க்கு அப்புறம்.. இது முடிஞ்சு.. 1,000 ரூபாயோ.. 2,000 ரூபாயோ.. பணம் கேட்க முடியாது.. என்னென்ன வருது?

என்பிசிஐ (NPCI) என்று அழைக்கப்படும் நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (National Payments Corporation of India) ஆனது அக்டோபர் 1ஆம் தேதி முதல் புதிய யுபிஐ விதிகளை (New UPI Rules) அமல் செய்ய இருக்கிறது. இந்த விதிகள் மூலம் தனிநபர் பணம் அனுப்புதலில் முக்கிய மாற்றம் வர இருக்கிறது. அதிகபட்சமாக இருக்கும் ரூ.2,000 பணத்தை நீங்களே அனுப்பி கொள்ள வேண்டும்.

யாரும் உங்களிடம் அனுப்ப சொல்லி யுபிஐ கலெக்ட் ரெக்கொஸ்ட் (UPI Collect Request) அனுப்ப முடியாது. கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe), பேடிஎம் (Paytm) போன்ற ஆப்கள் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த பேங்குகளுக்கும் இந்த விதிகள் அக்டோபர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வர இருக்கின்றன. இந்த விதிகளால் என்னென்ன மாறப்போகிறது, இப்போது பார்க்கலாம்.

UPI.. அக்.1-க்கு அப்புறம்! இது முடிஞ்சு.. 1,000 ரூபாயோ.. 2,000 ரூபாயோ!

யுபிஐ மூலம் பணத்தை நீங்களாக அனுப்பாமல், உங்களிடம் பணத்தை கேட்டு தனிநபர்களோ அல்லது வணிக நிறுவனங்களோ கலெக்ட் ரெக்கொஸ்ட் கொடுக்க முடியும். தனிநபர்களுக்கு வழக்கம்போல பி2பி (P2P) என்று அழைக்கப்படும் பீர்-டு-பீர் (Peer-to-Peer) பரிவர்த்தனைகள் மூலம் இது செய்யப்படுகிறது. வணிக நிறுவனங்களுக்கு பி2எம் (P2M) பரிவர்த்தனைகள் இருக்கிறது.

இதில் பி2பி பரிவர்த்தனைகளுக்கு ரூ.2,000 வரம்பு இருக்கிறது. அதாவது, உங்களிடம் ரூ.1,000 அல்லது ரூ.500 போன்ற ரூ.2,000 தொகைக்குள் எவ்வளவு பணத்தை வேண்டுமானாலும் கேட்டு கலெக்ட் ரெக்கொஸ்ட் கொடுக்க முடியும். இதை பெற்ற பிறகு நீங்கள் பின் நம்பர் (PIN Number) மட்டுமே போட்டால் போதும் பணம் தானாக அக்கவுண்ட்டில் இருந்து டெபிட் செய்யப்பட்டுவிடும்.

இந்த பி2பி பரிவர்த்தனைகளுக்கான யுபிஐ கலெக்ட் ரெக்கொஸ்ட் சேவையே அக்டோபர் 1ஆம் தேதி முதல் நிறுத்தப்பட இருக்கிறது. ஆகவே, உங்களிடம் தனிநபர் யுபிஐ அக்கவுண்ட்டில் இருந்து யாரும் பணம் கேட்டு இந்த யுபிஐ கலெக்ட் ரெக்கொஸ்ட்டை அனுப்ப முடியாது. கால் அல்லது எஸ்எம்எஸ்கள் மூலம் மட்டுமே கேட்க முடியும். அதன்பின் நீங்களாக அனுப்பி கொள்ளலாம்.

UPI.. அக்.1-க்கு அப்புறம்! இது முடிஞ்சு.. 1,000 ரூபாயோ.. 2,000 ரூபாயோ!

இந்த விதிகளை தெரியாத நபரிடம் இருந்து வரும் யுபிஐ கலெக்ட் ரெக்கொஸ்ட்களை கட்டுப்படுத்துவதற்காக நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா அமலுக்கு கொண்டுவர இருக்கிறது. பி2எம் (P2M) பரிவர்த்தனைகளுக்கு பொருந்தாது. ஆகவே, வணிக ரீதியாக உங்களுக்கு கொடுக்கப்படும் யுபிஐ கலெக்ட் ரெக்கொஸ்ட் சேவை தொடர்ந்து கிடைக்கும்.

ஆகவே, அக்டோபர் 1ஆம் தேதி முதல் கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற ஒட்டுமொத்த யுபிஐ ஆப்களிலும் இந்த விதிகள் மூலம் பரிவர்த்தனைகளுக்கு அனுமதி கொடுக்கப்பட இருக்கிறது. முன்னதாக நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, யுபிஐ வரம்புகளில் புதிய விதிகளை அமலுக்கு கொண்டுவந்தது. இது ஏற்கனவே அமலுக்கு வந்துவிட்டன.

அதாவது, செப்டம்பர் 15ஆம் தேதி முதல் இந்த விதிகள் அமலுக்கு வந்துவிட்டன. இதில் கிரெடிட் கார்டு பில் செலுத்துவதற்கான வரம்பு ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.5 லட்சமாக அதிகரிக்கப்பட்டது. அதேபோல 24 மணிநேரத்திற்கான வரம்பை ரூ.6 லட்சமாக அதிகரித்துள்ளது. இருக்கிறது. தங்கம், வைரம் உள்ளிட்ட ஆபரணங்களுக்கான யுபிஐ வரம்பானது ரூ.2 லட்சமாக அதிகரித்துள்ளது.

மேலும், 24 மணிநேரத்திற்கான வரம்பு ரூ.6 லட்சமாக இருக்கிறது. விமான டிக்கெட் புக்கிங், ஹோட்டல் புக்கிங் போன்றவற்றுக்கான யுபிஐ பரிவர்த்தனைகளை பயன்படுத்தும்போது, ஒரு பரிவர்த்தனைக்கான வரம்பு ரூ.5 லட்சமாக அதிகரித்துள்ளது. மேலும், 24 மணிநேரத்திற்கான வரம்பு ரூ.10 லட்சமாக மாறி இருக்கிறது.

டிஜிட்டல் அக்கவுண்ட் தொடங்கும்போது, ஆரம்ப நிதி டெபாசிட் செய்ய ரூ.2 லட்சம் அதிகபட்ச வரம்பாக மாற்றப்பட்டுள்ளது. அதேபோல கால வைப்பு நிதிக்கு ரூ.5 லட்சமாக வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்படி பல்வேறு பரிவர்த்தனைகள் வரம்பு உயர்ந்துள்ளது. ஆனால், தனிநபர்களுக்கான அதிகபட்ச வரம்பு வழக்கம்போல ரூ.1 லட்சமாக இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
New UPI Rules Come into Effect From October 1 UPI P2P Collect Request Transactions Discontinuing For Google Pay, PhonePe, Paytm Users
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X