Home
News

புது UPI ரூல்ஸ்.. மேலும் 3 புதிய மாற்றங்கள்.. காலை 10 மணி முதல்.. இரவு 11.30 வரை.. எப்போது அமல்?

2025 ஜூன் 16 முதல் அமலுக்கு வந்துள்ள யுபிஐ விதிகள் (New UPI Rules) ஆனது வெறும் ஆரம்பம் தான். இனிமேல் தான் உண்மையான மாற்றங்கள் மற்றும் சில கடுமையான விதிகள் அமலுக்கு வரவுள்ளன. அதென்ன விதிகள்? எப்போது முதல் அமலுக்கு வரும்? இதோ விவரங்கள்:

முதலில் 2025 ஜூன் 16 முதல் அமலுக்கு வந்த மாற்றங்களை பற்றி மேலோட்டமாக பார்த்துவிடலாம்: யுபிஐ சேவையை மேற்பார்வையிடும் இந்திய தேசிய கட்டணக் கழகம் (NPCI) ஆனது யுபிஐ சேவையின் செயல்திறனை மேம்படுத்த யுபிஐ பரிவர்த்தனைகளின் ரெஸ்பான்ஸ் டைமை (UPI Transactions Response Time) குறைத்துள்ளது.

புது UPI ரூல்ஸ்.. மேலும் 3 புதிய மாற்றங்கள்.. எப்போது அமல்?

இந்த மாற்றங்கள் - பணம் அனுப்பும் வங்கிகள் (Remitter banks), பயனாளி வங்கிகள் (Beneficiary banks) மற்றும் போன்பே (PhonePe), கூகுள் பே (Google Pay) மற்றும் பேடிஎம் (Paytm) போன்ற கட்டண சேவை வழங்குநர்கள் ஆகிய அனைத்திலும் அமலுக்கு வந்துள்ளது.

இதன்கீழ் (சமீபத்திய என்பிசிஐ சுற்றறிக்கையின்படி) பணப் பரிமாற்றம் (Money Transfer), ஸ்டேட்டஸ் செக்ஸ் (Status Checks) & ரிவர்சல்ஸ் (Reversals) உள்ளிட்ட பரிவர்த்தனைகள் இப்போது 30 வினாடிகளில் இருந்து 10 முதல் 15 வினாடிகளில் முடிக்கப்படும். மேலும் 2025 ஜூன் 16 முதல், முகவரியைச் சரிபார்க்க (Address Validation யுபிஐ கட்டணத்தில் எடுக்கும் நேரம் 15 வினாடிகளில் இருந்து 10 வினாடிகள் ஆக குறைக்கப்பட்டுள்ளது.

புது UPI ரூல்ஸ்.. மேலும் 3 புதிய மாற்றங்கள்.. எப்போது அமல்?

சரி இப்போது விரைவில் அமலுக்கு வரவுள்ள மற்ற புதிய யுபிஐ விதிகளை பற்றி பார்க்கலாம் (New Upcoming Rules and changes in UPI Service Soon): யுபிஐ சேவையில் மற்றொரு புதிய மாற்றமாக, பயனர்கள் ஒரு நாளைக்கு 50 முறை வரை மட்டுமே யுபிஐ ஆப்கள் மூலம் தங்கள் பேங்க் பேலன்ஸ்-ஐ சரிபார்க்க (Account balance Check - 50 times per day through UPI apps) அனுமதிக்கப்படுவார்கள். முன்னதாக பேலன்ஸ் செக்ஸ் எண்ணிக்கையில் எந்த விதமான தினசரி வரம்பும் இருந்தது இல்லை.

சில அறிக்கைகள் இந்த புதிய லிமிட் அமலுக்கு வந்துவிட்டது என்கிறன; சில அறிக்கைகள் ஆகஸ்ட் 2025 முதல் அமலுக்கு வரும் என்கிறன. ஆக எப்படி பார்த்தாலும் இது வருவது உறுதி. பெரும்பாலும் ஒரு நாளைக்கு 10 முறைக்கு மேல் யாருமே தத்தம் பேங்க் பேலன்ஸ்-ஐ யுபிஐ ஆப் வழியாக செக் செய்ய மாட்டார்கள் என்பதால், இது அவ்வளவு பெரிய சிக்கலை ஏற்படுத்தாது.

இதேபோல கடந்த மே 21, 2025 தேதியிட்ட சுற்றறிக்கையில், 2025 ஆகஸ்ட் மாதத்திலிருந்து யுபிஐ சேவையில் / அமைப்பில் சில முக்கிய மாற்றங்கள் செயல்படுத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. அதன்படி யுபிஐ சேவையில் லிஸ்ட் அக்கவுண்ட் (List Account) வசதி மேம்படுத்தப்பட உள்ளது. இது வாடிக்கையாளர்கள் ஒரு குறிப்பிட்ட அக்கவுண்ட் வழங்குநரால், தங்கள் மொபைலுடன் இணைக்கப்பட்ட கணக்குகளின் பட்டியலை (List of accounts linked to their mobile) கண்டறிய அனுமதிக்கிறது. ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் ஒரு நாளில் ஒரு ஆப்பிற்கு 25 கிடைக்கும் என்று என்பிசிஐ தெரிவித்துள்ளது.

கடைசியாக ஆட்டோபே மேன்டேட் எக்சிக்யூஷன் (Autopay mandate execution) செயல்முறையில் மாற்றங்கள் கொண்டுவரப்பட உள்ளன. நெரிசல் இல்லாத நேரங்களில் (Non-peak hours), மேன்டேட்டிற்கு (வரிசை எண்ணுக்கு) அதிகபட்சமாக 1 முயற்சி மற்றும் 3 மறு முயற்சிகள் அனுமதிக்கப்படும்.

புது UPI ரூல்ஸ்.. மேலும் 3 புதிய மாற்றங்கள்.. எப்போது அமல்?

ஒரு நாளில் யுபிஐ நிதி பரிவர்த்தனைகள் வினாடிக்கு அதிகபட்ச பரிவர்த்தனைகளை எப்போது அடைகிறதோ அதுவே நெரிசலான நேரங்கள் வரையறுக்கப்படும் பொதுவாக இது காலை 10:00 மணி முதல் பிற்பகல் 13:00 மணி வரையிலும், மாலை 17:00 மணி முதல் இரவு 21:30 மணி வரையிலும் இருக்கும். இதுவும் ஆகஸ்ட் 2025 முதல் அமலுக்கு வரவுள்ளது. Source: NDTV.COM

Best Mobiles in India

English summary
New UPI Rules Changes in Balance Check List Account Autopay Mandate Execution Will Implemented Soon
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X