நீங்கள் UPI மூலம் பணம் செலுத்துபவரா? அமலுக்கு வரும் புதிய நடைமுறை.. கட்டாயம் இதை தெரிஞ்சுக்கோங்க..
இந்தியாவில் கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe), பேடிஎம் (Paytm) போன்ற யுபிஐ செயலிகளை அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர். அதுவும் இந்த யுபிஐ செயலிகள் மூலம் விரைவாகவும், பாதுகாப்பாகவும் பணம் அனுப்ப முடிகிறது. எனவேதான் இந்த யுபிஐ செயலிகளை மக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். அதேபோல் யுபிஐ (upi) சேவைகளில் அவ்வப்போது பாதுகாப்பு அம்சங்களும் சேர்க்கப்படுகிறது.
அதன்படி ஏப்ரல் 24 தேதியில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், UPI சிஸ்டமில் ஒரு மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த உள்ளதாக தெரிவித்தது இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI). குறிப்பாக இந்த மாற்றம் இன்று முதல் அதாவது ஜூன் 30ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

இன்று முதல் கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற அனைத்து யுபிஐ ஆப்களும் இனி பரிவர்த்தனைகளின்போது பெறுநரின் அதிகாரப்பூர்வ பேங்க் அக்கவுன்ட் பெயரை மட்டுமே காண்பிக்கும். அதாவது முன்பு போனில் உள்ள யுபிஐ செயலிகளில் பணம் பெறுவோரின் பெயர் அல்லது புனைப்பெயர் போன்றவை தெரியும். ஆனால் இப்போது வந்த புதிய விதிகளின் கீழ் இனி புனைப்பெயர் (nickname) தெரியாது. இன்று முதல், பணம் மாற்றப்படுவதற்கு முன்பு, பணம் பெறும் நபரின் அதிகாரப்பூர்வ வங்கி பதிவு செய்யப்பட்ட பெயரை UPI சிஸ்டம் தானாகவே காண்பிக்கும்
குறிப்பாக மோசடி செய்பவர்கள் சிலர் தங்கள் அடையாளத்தை மறைக்க புனைப் பெயர்களை பயன்படுத்துகின்றனர் என்றும், இப்போது கொண்டுவரப்பட்ட புதிய விதி மாற்றத்தால் UPI மூலம் நடைபெறும் மோசடி தடுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. அதேபோல் யுபிஐ செயலிகளில் வரும் இந்த புது அப்டேட் சைபர் கிரிமனல்கள் செய்யும் மோசடிகளை தடுக்க மற்றும் பரிவர்த்தனையில் வெளிப்படைத் தன்மையை மேம்படுத்தவும் உதவும் நேரடி முயற்சியாக இருக்கும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இனிமேல் யுபிஐ யூசர்கள் மொபைல் நம்பர், யுபிஐ ஐடி அல்லது QR கோட் ஸ்கேன் செய்வதன் மூலம் பணம் அனுப்பினாலும், பணம் செலுத்துவதை உறுதிப்படுத்துவதற்கு முன் ஸ்கிரீனில் தோன்றும் பெயர், பெறுநரின் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட பெயரை மட்டுமே காட்டும்.
அதேபோல் இன்று வந்துள்ள இந்த புதிய மாற்றம்பியர் டு பியர் (Peer to Peer - P2P) மற்றும் பியர் டு பியர் மெர்ச்சன்ட் (Peer to Peer Merchant - P2PM) பரிவர்த்தனைகள் ஆகிய இரண்டிற்குமே பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுவும் யுபிஐ பயனர்கள் பரிவர்த்தனைகளைத் தொடங்க மொபைல் எண்கள், UPI ஹேண்டில்ஸ் அல்லது QR கோட்ஸ்களைப் பயன்படுத்தலாம். ஆனால் Send என்பதை கிளிக் செய்வதற்கு முன்பு பார்ப்பது வித்தியாசமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த நடவடிக்கை அதிகரித்துவரும் யுபிஐ தொடர்பான மோசடிகளை தடுக்க இது ஒரு புதிய முயற்சி ஆகும்.

இன்று முதல் வரும் இந்த புதிய விதிமுறைகள் மூலம் யுபிஐ செயலிகள் வங்கிப் பதிவுகளிலிருந்து வேறுபடும் தனிப் பயனாக்கப்பட்ட அல்லது யூசர்கள் செட் செய்த பெயர்களைக் காட்ட முடியாது. அதேபோல் இந்த மாற்றம் பிரபலமான பிளாட்ஃபார்ம்கள் உட்பட இந்தியா முழுவதும் பயன்படுத்தப்படும் அனைத்து UPI பேமென்ட் ஆப்ஸ்களுக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுபிஐ செயலிகளில் அவ்வப்போது பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டு வருகிறது. குறிப்பாக இதுபோன்ற பாதுகாப்பு அம்சங்கள் அனைத்து யுபிஐ சேவையை மக்களுக்கும் பயனுள்ள வகையில் இருக்கிறது.


Click it and Unblock the Notifications