Home
News

ஜூன் 30 முதல் எல்லாமே மாறுது.. நீங்கள் கூகுள் பே, போன் பே மூலம் பணம் செலுத்துபவரா? இதை தெரிஞ்சுக்கோங்க..

இந்தியா முழுவதும் கூகுள் பே (Google Pay), போன் பே (PhonePe), பேடிஎம் (paytm) போன்ற யுபிஐ (UPI) செயலிகளை மக்கள் அதிகம் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். அதுவும் இந்த யுபிஐ செயலிகள் மூலம் ஒருவருக்கொருவர் பணம் பரிமாற்றம் செய்வது, கடைக்குச் சென்று வாங்கும் சிறிய ரக பொருட்களுக்கும் ஸ்கேன் செய்து பணம் வழங்கும் முறை இப்போது அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் மக்கள் அதிகம் பயன்படுத்தும் இந்த யுபிஐ செயலிகளில் ஒரு முக்கிய மாற்றம் வர உள்ளது. இது குறித்த தகவல்களை இப்போது பார்க்கலாம். அதாவது நமது ஸ்மார்ட்போன்களில் இருக்கும் யுபிஐ செயலிகளில் கட்டண முறையின் ஒரு முக்கிய அங்கமாகிவிட்டன. அதேசமயம் ஆன்லைன் மோசடிகளைத் தவிர்க்க யுபிஐ விதிகள் அவ்வப்போது மாற்றப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.

நீங்கள் கூகுள் பே, போன் பே மூலம் பணம் செலுத்துபவரா?

அந்தவகையில் இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) இந்த UPI சிஸ்டமில் ஒரு மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த தயாராக உள்ளது. குறிப்பாக இந்த மாற்றம் வரும் ஜூன் 30ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 2025 ஜூன் 30-ம் தேதி முதல் கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற அனைத்து யுபிஐ ஆப்களும் இனி பரிவர்த்தனைகளின்போது பெறுநரின் அதிகாரப்பூர்வ பேங்க் அக்கவுன்ட் பெயரை மட்டுமே காண்பிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது யூசர்களின் ஸ்மார்ட்போனில் உள்ள யுபிஐ செயலிகளில் பணம் பெறுவோரின் பெயர் அல்லது புனைப்பெயர் போன்றவை தெரியும். ஆனால் புதிய விதிகளின் கீழ் இனி புனைப்பெயர் (nickname) தெரியாது. மொத்தமாக வரும் ஜூன் 30-க்குப் பிறகு, பணம் மாற்றப்படுவதற்கு முன்பு, பணம் பெறும் நபரின் அதிகாரப்பூர்வ வங்கி பதிவு செய்யப்பட்ட பெயரை UPI சிஸ்டம் தானாகவே காண்பிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக மோசடி செய்பவர்கள் தங்கள் அடையாளத்தை மறைக்க புனைப் பெயர்களை பயன்படுத்துகின்றனர் என்றும், இந்த புதிய விதி மாற்றத்தால் UPI மூலம் நடைபெறும் மோசடி தடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அதுவும் வரவிருக்கும் இந்த புதிய அப்டேட் சைபர் கிரிமினல்கள் செய்யும் மோசடிகளை தடுக்க மற்றும் பரிவர்த்தனையில் வெளிப்படைத் தன்மையை மேம்படுத்தவும் உதவும் நேரடி முயற்சியாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதேபோல் யூசர்கள் மொபைல் நம்பர், யுபிஐ ஐடி அல்லது QR கோட் ஸ்கேன் செய்வதன் மூலம் பணம் அனுப்பினாலும், பணம் செலுத்துவதை உறுதிப்படுத்துவதற்கு முன் ஸ்கிரீனில் தோன்றும் பெயர், பெறுநரின் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட பெயரை மட்டுமே காட்டும். அதுவும் இந்த மாற்றம் பியர் டு பியர் (Peer to Peer - P2P) மற்றும் பியர் டு பியர் மெர்ச்சன்ட் (Peer to Peer Merchant - P2PM) பரிவர்த்தனைகள் ஆகிய இரண்டிற்குமே பொருந்தும்.

ஆனாலும் யுபிஐ மூலம் பணம் செலுத்தும் முறை அப்படியே மாறாமல் தான் உள்ளது. யூசர்கள் பரிவர்த்தனைகளைத் தொடங்க மொபைல் எண்கள், UPI ஹேண்டில்ஸ் அல்லது QR கோட்ஸ்களைப் பயன்படுத்தலாம். ஆனால் Send என்பதை கிளிக் செய்வதற்கு முன்பு பார்ப்பது வித்தியாசமாக இருக்கும். இந்த நடவடிக்கை அதிகரித்துவரும் யுபிஐ தொடர்பான மோசடிகளை தடுக்க இது ஒரு புதிய முயற்சி ஆகும்.

எனவே இனிமேல் யுபிஐ செயலிகள் வங்கிப் பதிவுகளிலிருந்து வேறுபடும் தனிப் பயனாக்கப்பட்ட அல்லது யூசர்கள் செட் செய்த பெயர்களைக் காட்ட முடியாது. பின்பு இந்த மாற்றம் பிரபலமான பிளாட்ஃபார்ம்கள் உட்பட இந்தியா முழுவதும் பயன்படுத்தப்படும் அனைத்து UPI பேமென்ட் ஆப்ஸ்களுக்கும் பொருந்தும்.

அதேபோல் பணம் அனுப்புவதற்கு முன்பு பெறுநரின் அடையாளத்தை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்த யூசர்களுக்கு முன்பைவிட இனி சிறப்பான வாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
New UPI rule from June 30, 2025: NPCI to bring major update - check full details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X