Home
News

பேங்க் அக்கவுண்ட், லிமிட், பின் நம்பர்.. UPI வழியாக PF பணம் எடுக்க.. 5 முக்கியமான விஷயங்கள்!

இபிஎப் (EPF) மெம்பர்கள், மிகவும் பிரபலமான மற்றும் பொதுவான டிஜிட்டல் கட்டண முறை ஆன யுபிஐ (UPI) மூலம் தங்களுடைய நிதியை (அதாவது அவர்களின் வருங்கால வைப்பு நிதி சேமிப்பின் ஒரு பகுதியை) திரும்ப பெற முடியும் வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இதன் மூலம் இபிஎப் மெம்பர்கள்களின் "இணைக்கப்பட்ட" வங்கி கணக்குகளில் (Linked bank accounts) நேரடியாக நிதி வரவு வைக்கப்படும். சிஎன்பிசி-டிவி 18-இன் முந்தைய அறிக்கையின்படி, இபிஎப்ஓ (EPFO) என்கிற ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) ஆனது இந்த புதிய வசதியை மிக விரைவில் தொடங்கத் தயாராகி வருகிறது.

UPI வழியாக PF பணம் எடுக்க.. 5 முக்கியமான விஷயங்கள்!

தொழில்நுட்ப சிக்கல்களை தீர்க்கவும், பொது வெளியீட்டிற்கு முன்னதாக சிஸ்டம் ஸ்டெபிலிட்டியை உறுதிப்படுத்தவும் இபிஎப்ஓ ஆனது ​​தற்போது சுமார் 100 போலியான கணக்குகளை பயன்படுத்தி இந்த புதிய வசதியை சோதித்து வருவதாகவும் கூறப்படுகிறது. யுஏஎன் (UAN) போர்டல் மற்றும் யுமாங் (UMANG) ஆப் உள்ளிட்ட தற்போதைய அணுகல் கட்டமைப்புடன் யுபிஐ விருப்பம் (UPI Option) செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய வசதியால் என்னென்ன மாறும்?

1) யுபிஐ வழியிலான இபிஎப் என்கிற புதிய முன்மொழியப்பட்ட அமைப்பின் கீழ், உறுப்பினர்கள் தங்கள் இபிஎப் இருப்பில் 75% வரை யுபிஐ மூலம் உடனடியாக எடுக்கலாம். இந்த சேவை 2026 ஏப்ரல் மாதத்தில் ஒரு புதிய மொபைல் ஆப் மற்றும் இபிஎப்ஓ (EPFO) ​​போர்ட்டலில் ஒரு பிரத்யேக விண்டோ மூலம் அறிமுகப்படுத்தப்படும் என்று சிஎன்பிசி-டிவி 18 அறிக்கை கூறுகிறது.

2) சந்தாதாரர்கள் தங்கள் இருப்பை காண லாக்இன் செய்து - நோய், கல்வி, திருமணம் அல்லது வீட்டுவசதி போன்ற செல்லுபடியாகும் காரணத்தைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் பணம் எடுக்க தொடங்கலாம். பின்னர் தகுதியான தொகை பிஎப் கணக்குடன் இணைக்கப்பட்ட சேமிப்பு வங்கி கணக்கிற்கு நேரடியாக மாற்றப்படும்.

3) பணப்பரிவர்த்தனை ஆனது சந்தாதாரரின் யுபிஐ பின் (UPI PIN) நம்பரை பயன்படுத்தி அங்கீகரிக்கப்பட்டு, யுபிஐ கட்டண நுழைவாயில் வழியாக அனுப்பப்படும். இது கிட்டத்தட்ட உடனடியாக செயல்படும். குறிப்பிடத்தக்க வகையில் தற்போது இபிஎப்ஓ-வின் தானியங்கி தீர்வு முறை ஆனது 3 நாட்களுக்குள் ரூ.5 லட்சம் வரையிலான கோரிக்கைகளை தீர்க்கிறது. புதிய யுபிஐ அடிப்படையிலான அமைப்பு ஆனது குறிப்பிட்ட காலக்கெடுவை கணிசமாக குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

4) தற்போதுள்ள இபிஎப் விதிகளின்படி, உறுப்பினர்கள் கிடைக்கக்கூடிய இருப்பில் 75% வரை உடனடியாக எடுக்கலாம், அதே நேரத்தில் சந்தாதாரர் குறைந்தபட்சம் ஒரு வருடமாக வேலையில்லாமல் இருந்தால் மட்டுமே 100% திரும்ப பெற அனுமதிக்கப்படுகிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

5) பணம் எடுப்பதை தவிர, இந்த புதிய இன்டர்பேஸ் ஆனது பயனர்கள் தங்கள் இபிஎப் பாஸ்புக் இருப்பை சரிபார்க்கவும் கணக்கு தொடர்பான பிற சேவைகளை அணுகவும் அனுமதிக்கும்.

இபிஎப்ஓ (EPFO) என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (Employees' Provident Fund Organisation) ஆனது ஆண்டுதோறும் 5 கோடிக்கும் மேற்பட்ட பணம் எடுக்கும் கோரிக்கைகளை செயல்படுத்துகிறது. அவற்றில் பெரும்பாலானவை பகுதியளவு பணம் எடுப்பவை ஆகும். யுபிஐ வழியாக இயக்கப்பட்ட புதிய அமைப்பு ஆனது நிர்வாக அழுத்தத்தைக் குறைக்கும் அதே வேளையில் மில்லியன் கணக்கான சந்தாதாரர்களுக்கான அணுகலை மேம்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
New UPI PF Withdrawal System 5 Things Every EPFO Members Should Know
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X