Home
News

தாத்தா, பாட்டிகளுக்கு ஒரு குட் நியூஸ்.. சீனியர் சிட்டிசன்களுக்கான புதிய UPI சேவை.. இனி ஈஸியா பணம் அனுப்பலாம்!

ஜென்வைஸ் (GenWise) ஆனது, மூத்த குடிமக்களுக்கான யுபிஐ தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக.. வயதானோர்களுக்காகவே சிறப்பாக வடிவமைக்கப்பட்ட யுபிஐ பேமெண்ட்டை அறிமுகப்படுத்தி உள்ளது. இதற்காக சீனியர் சிட்டிசன்களுக்கான இந்தியாவின் முன்னணி ஆப்-பேஸ்டு கிளப் ஆன ஜென்வைஸ், ஆக்சிஸ் வங்கி (Axiz Bank) உ டன் கூட்டு சேர்ந்துள்ளது. இந்த ஜென்வைஸ் யுபிஐ (GenWise UPI) சேவையில் அப்படி என்ன சிறப்பு? இதோ விவரங்கள்:

ஜென்வைஸ் யுபிஐ ஆனது இந்தியாவிலேயே, வயதானவர்களுக்கான பிரத்யேகமாக உருவாக்கப்ட்டுள்ள இண்டஸ்ட்ரி ஃபர்ஸ்ட் யுபிஐ பேமண்ட் சொல்யூஷன் (Industry first UPI payment solution) ஆகும். மேலும் இது வயதானவர்கள் பயன்படுத்தும்படியான மிகவும் எளிமையான யூஸர் இன்டர்பேஸையும் (Simple User Interface) கொண்டு உள்ளது.

சீனியர் சிட்டிசன்களுக்கான புதிய UPI சேவை!

கூடவே இது இது ஜியோ-ஃபென்சிங் (Geo-fencing), பயோமெட்ரிக் அங்கீகாரம் (Biometric authentication) மற்றும் ஆடியோ அடிப்படையிலான நேவிகேஷன் (Audio-based navigation) போன்ற பாதுகாப்பு அம்சங்களையும் கொண்டுள்ளது. இவை அனைத்தும் சேர்ந்து, முதியவர்களை மிகவும் வசதியாகவும் நம்பிக்கையுடனும் டிஜிட்டல் பேமெண்ட்டுகளை செய்ய உதவும்.

இந்தியாவில் யுபிஐ சேவையானது பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் 400 மில்லியனுக்கும் அதிகமான ஆக்டிவ் யூசர்கள் மற்றும் 16.5 பில்லியனுக்கும் அதிகமான பணப்பரிவர்த்தனைகள் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், இந்தியாவில் உள்ள 250 மில்லியன் முதியவர்கள் யுபிஐ சேவையை அதிகம் பயன்படுத்துவது இல்லை.

இதற்கு கூகுள் பே, போன்பே மற்றும் பேடிஎம் போன்ற யுபிஐ பேமண்ட் ஆப்களின் சிக்கலான தன்மை தான் காரணம். அதாவது சீனியர் சிட்டிசன்கள் பேமண்ட் ஆப்களின் வழியாக யுபிஐ சேவையை பயன்படுத்த தயங்குகின்றனர். ஆனால் இந்தியாவில் உள்ள மூத்த குடிமக்களிடையே ஸ்மார்ட்போன் ஊடுருவல் 65% க்கும் அதிகமாக இருக்கிறது.

அதாவது வயதானவர்கள் ஸ்மார்ட்போன் வைத்து இருக்கிறார்கள் அனால் அவர்கள் யுபிஐ சேவையை பயன்படுத்துவதில்லை என்று அர்த்தம். இந்த இடைவெளியை நிரப்பவே ஜென்வைஸ் யுபிஐ வந்துள்ளது. சுவாரசியமாக இதில் யுபிஐ லைட் லைட் மற்றும் மொபைல் எண் மேப்பர் ஆகிய அம்சங்களும் இருக்கிறது. இதன்கீழ் பெரியவர்களின் தனிப்பட்ட வங்கி விவரங்கள் அல்லது முதன்மை தொலைபேசி எண்களை பகிராமல் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும்.

இதெல்லாம் ஒருபக்கம் நாளுக்கு நாள் பரவலாகி வரும் யுபிஐ சேவையின் விளைவாக, அதிக பணப்புழக்கம் இருக்கும் போதிலும் கூட, இந்தியாவில் உள்ள வங்கிகள் தத்தம் ஏடிஎம்-களின் எண்ணிக்கையை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதன்விளைவாக இந்தியாவானது, கூடிய விரைவில் க்ளோபல் மாடலை (Global mode) பின்பற்ற வேண்டியிருக்கும் என்றும் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

அதாவது க்ளோபல் மாடல் என்றால், ஒரு கிளைக்கு 2 ஏடிஎம்கள், ஒரு ஆன்-சைட் மற்றும் ஒரு ஆஃப்-சைட் ஏடிஎம்களை கொண்டிருப்பதாகும். இப்படி செய்வதன் மூலம் வங்கிகளால் பிஸிக்கல் மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பை சமநிலையில் வைத்திருக்க முடியும். ஆர்பிஐ தரவுகளின்படி இந்தியாவில் ஏடிஎம்-களின் எண்ணிக்கை கடந்த செப்டம்பர் 2023 இல் 219,000 இல் இருந்து, இந்த 2024 செப்டம்பரில் 215,000 ஆக குறைந்துள்ளது.

ஆனால் என்பிசிஐ (NPCI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தேசிய கொடுப்பனவு கழகமானது ஏடிஎம் சென்டர்களின் எண்ணிக்கையை பற்றியெல்லாம் கொஞ்சம் கூட கவலைப்படுவதை இல்லை. ஏனென்றால் இது யுபிஐ ஆப்களுக்கான புதிய விதிகள் , புதிய வழிமுறைகள், புதிய கட்டுப்பாடுகள் மற்றும் புதிய அம்சங்கள் என.. யுபிஐ சேவையை தொடர்ச்சியான முறையில் மேம்படுத்திக்கொண்டே வருகிறது

நினைவூட்டும் வண்ணம் கடந்த நவ.1 முதல் யுபிஐ லைட் சேவையில் 3 முக்கியமான மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. இந்த புதிய விதிகளின் கீழ். யுபிஐ லைட் சேவைக்கான பரிவர்த்தனை வரம்பு ரூ.500 இல் இருந்து ரூ.1000 ஆகவும், யுபிஐ லைட் வாலட்டுக்கான வரம்பு ரூ.2000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. கூடவே யுபிஐ லைட் வாலட்டுக்கான ஆட்டோ டாப்-அப் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டது.

Best Mobiles in India

English summary
New UPI Payment Solution For Senior Citizens in India Why GenWise UPI is More Easy Safe To Use
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X