Home
News

அடுத்த மாற்றம்! டிஜிட்டல் பேமெண்ட்.. UPI பரிவர்த்தனைகள்.. நாடு முழுவதும் இதுதான்.. NPCI-யின் கேஷ்லெஸ் திட்டம்!

கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற டிஜிட்டல் பேமெண்ட் ஆப்களுக்கு ஒட்டுமொத்தமாக மாறிவரும் நேரத்தில், பழைய பேமெண்ட் முறைகளில் மத்திய அரசின் கீழ் செயல்படும் இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் - என்பிசிஐ (National Payments Corporation of India - NPCI) புது மாற்றத்தை செய்துள்ளது. யுபிஐ ஒன் வேர்ல்டு (UPI One World) சேவையை அறிமுகம் செய்துள்ளது. இந்த சேவையால் என்னென்ன மாற்றங்கள் வரும்? அனைவருக்கும் இந்த சேவை கிடைக்குமா? உள்ளிட்ட விவரங்கள் இதோ.

டிஜிட்டல் பேமெண்ட் பற்றி யாருக்கும் சொல்லி தெரிய வேண்டியது கிடையாது. பெட்டிக்கடை முதல் சூப்பர் மார்கெட் வரையில் அதன் வளர்ச்சியை பார்த்து வருகிறோம். கிட்டத்தட்ட முக்கால்வாசி பேங்க் கஸ்டமர்கள் டிஜிட்டல் முறைக்கு மாறிவிட்டனர். இதனால், என்பிசிஐ டிஜிட்டல் பேமெண்ட்களில் புதுப்புது மாற்றங்களை செய்து வருகிறது.

அடுத்த மாற்றம்! டிஜிட்டல் பேமெண்ட்.. UPI பரிவர்த்தனை.. நாடு முழுவதும்!

இப்போது, யுபிஐ ஒன் வேர்ல்டு என்னும் புதிய வாலெட் சேவையை அறிமுகம் செய்துள்ளது. ஏற்கனவே, யுபிஐ லைட் என்னும் வாலெட் சேவையை என்பிசிஐ வழங்கி வருகிறது. ஆனால், அது இந்தியர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. ஆகவே, சர்வதேச பயணிகள் இந்தியாவுக்கு வந்தால், அவர்களுக்கான பரிவர்த்தனைகளுக்கு இந்த யுபிஐ ஒன் வேர்ல்டு சேவை வழங்கப்படுகிறது.

இந்தியாவின் டிஜிட்டல் பேமெண்ட் வளர்ச்சியை சர்வதேச அளவில் கொண்டு சேர்க்க இந்த புது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த சேவையானது, ப்ரீபெய்ட் பேமெண்ட் இன்ஸ்ட்ரூமென்ட்- பிபிஐ (Prepaid Payment Instrument - PPI) மூலம் வழங்கப்படுகிறது. ஆகவே, நேரடியாக பேங்க் அக்கவுண்ட்டில் இருந்து பணம் அனுப்புவதை தவிர்க்கலாம்.

இந்தியாவுக்கு வரும் சர்வதேச பயணிகள் ஏர்போர்ட், ஹோட்டல்கள், பண பரிமாற்ற இடங்கள் போன்ற பல்வேறு இடங்களில் இந்த யுபிஐ ஒன் வேர்ல்டு வாலெட்டை பயன்படுத்தலாம். இந்த வாலெட்டை பயன்படுத்தும் பயணிகள் கேஒய்சி (KYC) செய்ய வேண்டி இருக்கும். இதை, பாஸ்போர்ட் மற்றும் விசா விவரங்களை வைத்து முடிக்கலாம்.

அதேபோல பாரின் கரன்சி பரிமாற்றத்தின் (Foreign Currency Exchange) போது, யுபிஐ ஒன் வேர்ல்டு வாலெட்டில் பணத்தை மாற்றிக் கொள்ளலாம். சர்வதேச கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் இந்த சேவையை பெற்று கொள்ளலாம். இந்த வாலெட் மூலம் கிஆர் கோட் ஸ்கேனிங் செய்து இந்தியாவில் பரிவர்த்தனைகளை செய்து கொள்ள முடியும்.

இந்த வாலெட் தொகையில் மீதம் இருக்கும் பணத்தை ஃபாரின் பரிமாற்ற ஒழுங்குமுறைகளின் (Foreign Exchange Regulations) படி ரீபண்ட் செய்து கொள்ளலாம். இதற்கு அந்தந்த நாடுகளின் கரன்சியின் மதிப்பிலேயே ரீபண்ட் செய்யப்படும். ஆகவே, எளிதாகவும் பாதுகாப்பாகவும் இந்த பேமெண்ட் முறைகளை சர்வதேச பயணிகள் செய்து முடிக்கலாம்.

இந்த யுபிஐ ஒன் வேர்ல்டு வாலெட் சேவையானது, ரிசர்வ் வங்கியின் (Reserve Bank of India) மேற்பார்வையில் என்பிசிஐ, ஐடிஎப்சி ஃபர்ஸ்ட் பேங்க் (IDFC First Bank) மற்றும் டிரான்கார்ப் இன்டர்நேஷனல் லிமிடெட் (Transcorp International Limited) ஆகியவற்றின் ஒத்துழைப்பு மூலம் வழங்கப்படுகிறது. இந்த வாலெட் ஜி20 மாநாட்டின் போது அறிமுகப்படுத்தப்பட்டது.

இப்போது, நாடு முழுவதும் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த யுபிஐ ஒன் வேர்ல்டு வாலெட் சேவையானது குறிப்பிட்ட நாடுகளுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. ஜி20 மாநாட்டில் வெளியானதால், இதில் சம்பந்தப்பட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு இந்த சேவை கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆகவே, 20 நாடுகளுக்கும் மேல் சேவைகள் வழங்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
New UPI One World Service Introduced in India For Travelers Check NPCI Next Digital Payment Wallet
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X