Home
News

பேங்க் அக்கவுண்ட் வைத்து இருப்பவர்களுக்கு புது ரூல்ஸ்.. Google Pay, PhonePe, Paytm-க்கு ஜூன் 1 ஆம் தேதி அமல்?

என்பிசிஐ (NPCI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (National Payments Corporation of India) ஆனது கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe), பேடிஎம் (Paytm) போன்ற யுபிஐ ஆப்கள் வழியாக பணம் அனுப்புபவர்களுக்கு புதிய விதிகளை அமலுக்கு கொண்டுவந்துள்ளது.

யுபிஐ (UPI) பேமெண்ட்களில் நேரடியாக மாற்றத்தை ஏற்படுத்தும், இந்த விதிகள் 2025ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதியே அமலுக்கு வந்துவிட்டது. இருப்பினும், ஜூன் 1ஆம் தேதி அமலுக்கு வந்திருப்பதாக கூறப்படுகிறது. முதலில் இந்த விதிகள் என்ன சொல்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். பிறகு அமல் குறித்த விவரங்களை பார்க்கலாம்.

பேங்க் அக்கவுண்ட் வைத்து இருப்பவர்களுக்கு புது ரூல்ஸ்.. ஜூன் 1 அமல்?

பேங்க் அக்கவுண்ட் மற்றும் அதனுடன் மொபைல் நம்பர் இணைக்கப்பட்டிருந்தால் போதும், கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற யுபிஐ ஆப்கள் வழியாக பரிவர்த்தனைகளை செய்து கொள்ளலாம். ஆனால், மொபைல் நம்பரை கொடுத்தால், யுபிஐ ஐடி உருவாக்கப்பட்டபோது கொடுத்த பெயர் மட்டுமே இடம்பெறும். இதனால், யாருக்கு பணம் அனுப்புகிறோம் என்பதை அறிய முடியாது.

இதை மாற்றி பேங்க் அக்கவுண்ட் ஓப்பன் செய்யப்பட்டபோது எந்த பெயர் கொடுக்கப்பட்டோ அதே பெயரையே யுபிஐ வழியாக பணம் அனுப்பும்போது காண்பிக்க கூகுள் பே, போன்பே, பேடிஎம், அமேசான் பே, பீம் உள்ளிட்ட ஆப்களுக்கு உத்தரவிடப்பட்டது. இதன்படி பணம் அனுப்பும் முன்பாக பேங்க் அக்கவுண்ட்டில் எந்த பெயர் இருக்கிறதோ அதே பெயர் காண்பிக்கப்படும்.

ஆகவே, யுபிஐ ஐடி உருவாக்கப்பட்ட போது எந்த பெயர் கொடுத்திருந்தாலும், பேங்க் அக்கவுண்ட்டில் இருக்கும் பெயர் மட்டுமே பணம் அனுப்பும்போது காண்பிக்கப்படும். இதனால், தவறாக பணம் அனுப்பப்படுவதை முற்றிலும் தவிர்க்க முடியும். யுபிஐ ஐடி, மொபைல் நம்பர் மட்டுமல்லாமல், பெயரையும் தெரிந்து கொண்ட பிறகே பணத்தை அனுப்புவதால், பாதுகாப்பும் அதிகமாகும்.

இந்த விதிகளை 2025ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதியே அமல் செய்ய கூகுள் பே, போன்பே, பேடிஎம் உள்ளிட்ட யுபிஐ ஆப்களுக்கு என்பிசிஐ உத்தரவிட்டது. இதன்படியே பரிவர்த்தனைகளும் செய்யப்பட்டு வருகின்றன. ஆனால், இந்த ஜூன் 1ஆம் தேதி முதல் இந்த விதி அமலுக்கு வந்துள்ளதாக கூறப்பட்டுவருகிறது. இதை சற்று விரிவாக பார்க்க வேண்டி இருக்கிறது.

யுபிஐ ஆப்களில் ஆதிக்கம் செலுத்தும் கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற ஆப்களில் இந்த விதிகள் ஏற்கனவே அமலாகிவிட்டன. ஏனென்றால், பேங்க் விவரங்களை அணுக இவற்றுக்கு அனுமதி கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஆப்களை தவிர மற்ற சில ஆப்களில் பேங்க் விவரங்கள் மற்றும் அமல் செய்வதில் ஏற்படும் தொழில்நுட்ப சிக்கல்களால் தாமதம் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது.

இதனாலேயே படிப்படியாக இந்த விதிகள் அமலுக்கு வந்திருக்கவும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இதனாலேயே, இந்த ஜூன் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக கூறப்பட்டு வருகிறது. கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற ஆப்களின் பல மாதங்களாகவே பேங்குடன் இணைக்கப்பட்ட பெயர் மட்டுமே பணத்தை அனுப்பும் காண்பிக்கப்பட்டு வருகிறது.

ஆகவே, இது ஏற்கனவே அமலுக்கு வந்த விதிகளாக இருப்பதை மறுக்க முடியாது. இது எப்படி வேலை செய்கிறது என்பதை பார்க்கையில், இது யுபிஐ ஐடி ஓப்பன் செய்யப்பட்ட அக்கவுண்ட்களுக்கு மட்டுமே பொருந்துகிறது. கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற ஏதாவது ஒரு ஆப்பை ஓப்பன் செய்து கொள்ளுங்கள். பணம் அனுப்ப விரும்பும் யுபிஐ ஐடிக்கு செல்லுங்கள்.

இப்போது, அந்த யுபிஐ ஐடி ஓப்பன் செய்யப்பட்டபோது கொடுக்கப்பட்ட பெயர் மேலே இடம்பெற்றிருக்கும். ஆனால், பே (Pay) ஆப்ஷனை ஓப்பன் செய்தால், வங்கிப் பெயர் (Banking Name) தோன்றும். இதில் பேங்க் அக்கவுண்ட்டில் குறிப்பிடப்பட்ட பெயர் மட்டுமே காண்பிக்கப்படும். அதோடு மொபைல் நம்பரும் காண்பிக்கப்படும். இதனால் சரியான நபருக்கு பணத்தை அனுப்பலாம்.

Best Mobiles in India

English summary
New UPI Norms For GPay PhonePe Paytm Name Verification Implemented on June 1 2026 Or June 30 2025
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X