Home
News

புது UPI ரூல்ஸ்.. இனிமேல் 1 நாளுக்கு 5 முறை தான்.. NPCI அமல் படுத்திய முக்கிய மாற்றம்!

என்பிசிஐ (NPCI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தேசிய கொடுப்பனவு கழகமானது, கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe), பேடிஎம் (Paytm) போன்ற யுபிஐ ஆப்களுக்கான புதிய விதிகளை அறிவித்து, அவைகளை நவ.1 முதல் அமலுக்கும் கொண்டுவந்தது. இதன்கீழ் யுபிஐ லைட் சேவையில் 3 முக்கியமான மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. அதிலொரு மாற்றத்திற்கு தினமும் 5 முறை மட்டுமே என்கிற வரம்பு இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது.

நவம்பர் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்த புதிய விதிகளின் கீழ். யுபிஐ லைட் சேவைக்கான பரிவர்த்தனை வரம்பு ரூ.500 இல் இருந்து ரூ.1000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் யுபிஐ லைட் வாலட்டுக்கான வரம்பும் ரூ.2000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. கூடவே யுபிஐ லைட் வாலட்டுக்கான ஆட்டோ டாப் அப் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

புது UPI ரூல்ஸ்.. இனிமேல் 1 நாளுக்கு 5 முறை தான்!

இந்த ஆட்டோ டாப் அப் வசதியானது - யுபிஐ லைட் பேலன்ஸ் (UPI Lite Balance) ஆனது ஒரு குறிப்பிட்ட வரம்பிற்கு கீழே செல்லும் போது அதில் ஆட்டோமெட்டிக் ஆக மீண்டும் பணம் சேர்க்கும் ஒரு வசதியாகும். அறியாதோர்களுக்கு - யுபிஐ லைட் சேவையின் கீழ் மிகவும் குறைவான பணத்தை மட்டுமே அனுப்ப முடியும். இந்த சேவையும் அதற்காகவே தான உருவாக்கப்பட்டுள்ளது.

ஆகையால் தான் யுபிஐ லைட் சேவையின் கீழ் பின் நம்பர் மற்றும் பாஸ்வேர்ட் இல்லாமலேயே யுபிஐ வழியாக பணம் செலுத்தும் வசதியும் உள்ளது. அதாவது யுபிஐ க்யூஆ கோட்-ஐ ஸ்கேன் செய்த வேகத்தில் (பின் நம்பர் அல்லது பாஸ்வேர்ட்-ஐ டைப் செய்ய வேண்டிய அவசியமே இல்லாமல்) உடனே பணம் செலுத்த முடியும். சுருக்கமாக யுபிஐ லைட் வழியாக சிறிய-சிறிய தொகைகளை மட்டுமே அனுப்ப முடியும்.

எனவே யுபிஐ லைட் வாலட் பேலன்ஸ் ஆனது அடிக்கடி தீர்ந்து போகும் வாய்ப்புகள் அதிகம். இந்த சிக்கலை சரி செய்யம் நோக்கத்தின் கீழ் தான் - ஆட்டோ டாப் அப் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது ஒவ்வொரு முறையும் யுபிஐ லைட் வாலட்டின் பேலன்ஸை மேனுவல் ஆக டாப்-அப் செய்ய வேண்டிய, அதாவது கைமுறையாக அதில் பணம் சேர்க்க வேண்டிய அவசியத்தை நீக்குகிறது.

ஆனால் இப்படி செய்வதற்கும் ஒரு டெய்லி லிமிட் உள்ளது. உங்களுடைய யுபிஐ லைட் அக்கவுண்டின் பேலன்ஸ் குறைந்தவுடன், ஆட்டோ டாப் அப் வசதி மூலம் தானாகவே உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து டாப்-அப் செய்யப்படும். ஆனால இதன்கீழ் பயனர்கள் தங்கள் அக்கவுண்ட்டை ஒரு நாளைக்கு அதிகபட்சம் 5 முறை மட்டுமே டாப்-அப் செய்யலாம்.

அதாவது ரூ.2000 என்கிற யுபிஐ லைட் வாலட் வரம்பில் கீழ் மொத்தம் ரூ.10,000 மட்டுமே டாப்-அப் செய்ய முடியும். இந்த இடத்தில் - பயனர்கள் தங்கள் யுபிஐ லைட் வாலட்டில் மினிமம் பேலன்ஸை செட் செய்யலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த தொகைக்கு கீழே பேலன்ஸ் குறையும் போது, ​​பயனரின் வங்கி கணக்கிலிருந்து தானாகவே டாப்-அப் ஆகும். மேலும் பயனர்கள் எந்த நேரத்திலும் இந்த ஆட்டோ டாப்-அப் அம்சத்தை 'ஆப்' செய்யலாம்!

கூகுள் பே, போன்பே அல்லது பேடிஎம் போன்ற ஆப்களில் யுபிஐ லைட் சேவையை பயன்படுத்துவது எப்படி? இதற்காக நீங்கள் உங்கள் போனில் உள்ள கூகுள் பே, போன்பே அல்லது பேடிஎம் ஆப்பில் யுபிஐ லைட்-ஐ எனேபிள் செய்ய வேண்டும்; இது மிகவும் எளிதான செயல்முறையாகும். நீங்கள் பயன்படுத்தும் யுபிஐ ஆப்பை திறந்து உங்கள் ப்ரொபைல் போட்டோ ஐகானை கிளிக் செய்யவும்

ப்ரொபைல் போட்டோவுடன் கூடிய ஐகானை கிளிக் செய்தவுடன், அதன் கீழ் பின் ப்ரீ யுபிஐ லைட் (PIN free UPI Lite) என்கிற விருப்பத்தை காண்பீர்கள். அதன் பிறகு, உங்கள் போன் ஸ்க்ரீனில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி யுபிஐ லைட் சேவையை இயக்கவும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
New UPI Lite Auto Top Up Feature Users Can Refill their UPI Lite Wallet balance only 5 times a day
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X