Home
News

Google Pay, PhonePe-க்கு குட்பை! இனி ஒருமுறை ரூ.500, அதிகபட்சம் ரூ.2000.. Paytm-க்கு மாறும் நேரம் வந்திடுச்சு!

பல மாதங்கள் கழித்து மீண்டும் யுபிஐ சந்தைக்கு வந்துள்ள பேடிஎம் (Paytm) நிறுவனமானது.. தான் இல்லாத காலத்தில் மிகவும் பலமான அடித்தளங்களை போட்ட கூகுள் பே (Google Pay) மற்றும் போன்பே (PhonePe) ஆகியவைகளை காலி செய்ய, மீண்டும் அவைகளுடன் போட்டிபோட பேடிஎம் நிறுவனமானது தொடர்ச்சியான முறையில் பல புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது.

அந்த வரிசையில் பேடிஎம் நிறுவனமானது, தனது யுபிஐ லைட் (UPI Lite) சேவையில் முக்கிய மாற்றத்தை கொண்டுவந்துள்ளது. தற்போது ரூ.500 க்கு கீழான டெய்லி பேமண்ட்களை செய்ய உதவும் யுபிஐ லைட் சேவையில்.. அதாவது மிகவும் குறைவான தொகைகளை யுபிஐ பின் நம்பர் போடாமலே பரிமாற்ற உதவும் யுபிஐ லைட் சேவையில் ஆட்டோமேட்டிக் டாப்-அப் வசதியை (Auto Top Up Feature) அறிமுகப்படுத்தியுள்ளது.

இனி ஒருமுறை ரூ.500.. அதிகபட்சம் ரூ.2000.. Paytm-க்கு ஜம்ப்!

பேடிஎம் கொண்டுவந்துள்ள இந்த அம்சம், பயனர்களுடைய தங்கள் யுபிஐ லைட் பேலன்ஸ் ஆனது அவர்கள் நிர்ணயித்த வரம்பை விட குறைவாக இருந்தால், அது தானாகவே ரீசார்ஜ் ஆகும். பேடிஎம் யுபிஐ லைட் சேவையின் கீழ், ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.500 வரை பணம் செலுத்தலாம், இதற்கான தினசரி வரம்பு ரூ.2,000 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது

தற்போது வரையிலாக தேர்ந்தெடுக்கப்பட்ட பேடிஎம் பயனர்களுக்கு யெஸ் பேங்க் வங்கி மற்றும் ஆக்சிஸ் பேங்க் வழியிலான யுபிஐ அக்கவுண்ட்களுக்கு இந்த அம்சம் அணுக கிடைக்கிறது. மேலும் இது கூடிய விரைவில் அனைத்து பேடிஎம் பயனர்களுக்கும் மற்றும் மீதமுள்ள பார்ட்னர் பேங்க்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று பேடிஎம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சில தினங்களுக்கு முன்னர், இழந்த பயனர்களை மீண்டும் சேர்க்கும் நோக்கத்தின் கீழ் பேடிஎம் நிறுவனமானது அதன் ஆப்பில் யுபிஐ ஸ்டேட்மென்ட் டவுன்லோட் (UPI Statement Download) மற்றும் யுபிஐ இன்டர்நேஷனல் (UPI International) என்கிற 2 புதிய அம்சங்களை அறிமுகம் செய்த்தும் இங்க குறிப்பிடத்தக்கது .

பேடிஎம் ஆப்பிற்கு வந்துள்ள யுபிஐ ஸ்டேட்மென்ட் டவுன்லோட் வசதியை பொறுத்தவரை, இதன் கீழ் பயனர்கள் தங்கள் யுபிஐ பரிவர்த்தனை ஸ்டேட்மென்ட்கைகளை நேரடியாக பேடிஎம் ஆப்பில் இருந்து டவுன்லோட் செய்யலாம். இந்த வசதி பயனர்கள் தத்தம் செலவுகளை கண்காணிப்பது, வரவு செலவு திட்டங்களை நிர்வகிப்பது மற்றும் வரி தாக்கல் செய்வதற்கு தயாராவதை எளிதாக்கும் என்று பேடிஎம் கூறுகிறது.

அடுத்ததாக அறிமுகமான பேடிஎம் யுபிஐ இன்டர்நேஷனல் வசதியை பொறுத்தவரை இது இந்திய பயணிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட உலகளாவிய இடங்களில் யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் பரிவர்த்தனைகளை செய்ய அனுமதிக்கும். இந்த வசதியின் கீழ் யுஏஇ, பிரான்ஸ், மொரிஷியஸ், சிங்கப்பூர், பூட்டான் மற்றும் நேபாளம் பொன்னர் நாடுகளில் பேடிஎம் ஆப்பை பயன்படுத்தி பணப்பரிமாற்றம் செய்யலாம்.

பேடிஎம் ஆப்பில் பேடிஎம் யுபிஐ இன்டர்நேஷனல் வசதியை ஆக்டிவேட் செய்வது எப்படி? பேடிஎம் ஆப்பில் இந்த வசதி டீபால்ட் ஆக முடக்கப்பட்டு இருக்கும் என்பதால், முதலில் இதை ஆக்ட்வேட் செய்ய வேண்டும். இதை செய்ய விரும்புபவர்கள், பேடிஎம் ஆப்பிற்குள் சென்று மேலே உள்ள சேர்ச் பாரில் "International UPI" என்று டைப் செய்து தேடவும்.

பின்னர் சர்வீசஸ் டேப்பின் (Services Tab) கீழ் கிடைக்கும் ரிசல்ட்டை கிளிக் செய்யவும். இப்போது ஸ்க்ரீனில், இந்தியாவிற்கு வெளியே பணம் செலுத்த உங்கள் யுபிஐ ஐடியை இணைக்குமாறு பேடிஎம் கேட்கும்; அதை ஏற்றுக்கொள்ளவும். பேடிஎம் ஆப்பின் இந்த யுபிஐ இன்டர்நேஷனல் வசதிடீயின் கீழ், உங்களுடைய வெளிநாட்டு பயண காலத்தை பொறுத்துமாறுபடும் .

அதாவது உங்களால் 1 நாள் முதல் 90 நாட்கள் வரையிலான பயன்பாட்டு காலத்தைத் தேர்வுசெய்ய முடியும். அதன் பிறகு பாதுகாப்பு நோக்கங்களுக்காக இந்த சேவை முடக்கப்படும் என்று பேடிஎம் நிறுவனம் கூறுகிறது. குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு (அதாவது யுபிஐ இன்டர்நேஷனல் வசதியை நீங்கள் எதனை நாட்களுக்கு பயன்படுத்த விரும்புகிறீர்கள் என்பதில் நீங்கள் தேர்வு செய்துள்ள காலத்திற்கு பிறகு) யுபிஐ இன்டர்நேஷனல் செயல்பாட்டை தானாகவே முடக்கும் நடவடிக்கையானது, தற்செயலான பரிவர்த்தனைகளை தடுப்பது மட்டுமல்லாமல், மோசடி செய்பவர்களிடம் இருந்தும் உங்கள் பணத்தை காப்பாற்றும் என்றும் பேடிஎம் நம்புகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
New UPI Lite Auto Top Up Feature Now Available in Paytm For Daily Payments Under Rs 500
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X