புதிய ரூ.30,000 UPI சேவை முதல் பள்ளிகளுக்கான பிராட்பேண்ட் வரை.. 2025 பட்ஜெட்டின் 5 முக்கிய அறிவிப்புகள்!
2025 யூனியன் பட்ஜெட்டின் ஒரு பகுதியாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பல புதிய நடவடிக்கைகளை அறிவித்தார். இதில் ரூ.30,000 வரம்பிலான கிரெடிட் கார்டு அறிமுகம் தொடங்கி அரசுப் பள்ளிகளுக்கு பிராட்பேண்ட் இணைப்பை விரிவுபடுத்துவது வரையிலாக, தொழில்நுட்பம் தொடர்பான சில முக்கிய அறிவிப்புகளும் அடங்கும். அப்படியாக இந்த பட்ஜெட்டில், தொழில்நுட்பம் தொடர்பான 5 முக்கிய அறிவிப்புகள் இதோ:
01. நேஷனல் சென்டர்ஸ் ஆப் எக்ஸலென்ஸ் பார் ஸ்கில்லிங் (National Centres of Excellence for Skilling) என்று அழைக்கப்படும் 5 சிறப்பு மையங்களை இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.மேலும் சென்டர் ஆப் எக்ஸலென்ஸ் பார் ஏஐ ஏஜூகேஷன் (Centre of Excellence for AI in Education) என்கிற சிறப்பு மையமும் அமைக்கப்படும்.

சென்டர்ஸ் ஆப் எக்ஸலென்ஸ் பார் ஏஐ ஏஜூகேஷன்-க்காக ரூ.500 கோடி ஒத்துக்கப்படும் என நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், புதிய கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்கு 6,500 இடங்களை சேர்க்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, 2014 க்கு பிறகு நிறுவப்பட்ட ஐஐடிகளில் புதிய உள்கட்டமைப்புகள் சேர்க்கப்படும்.
02. பாரத் நெட் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள அனைத்து இடைநிலை பள்ளிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் பிராட்பேண்ட் கனெக்டிவிட்டி விரிவுபடுத்தப்படும். இதற்கிடையில், அரசாங்கத்தால் நடத்தப்படும் பள்ளிகளில் 50,000 க்கும் மேற்பட்ட அடல் திங்கிங் லேப்ரட்டீஸ் (ATL) வரும் ஐந்து ஆண்டுகளில் நிறுவப்படும்.
03. ரிசர்ச் மற்றும் டெவெலப்மென்ட்டை மேம்படுத்துவதற்காக, இந்திய அரசாங்கமானது புதிய டீப்டெக் ஃபண்ட் ஆஃப் ஃபண்ட்ஸ்-ஐ ஆராயந்து வருகிறது. இதன்கீழ் பிஎம் கதி சக்தி முன்முயற்சியின் தரவுகள் தனியார் துறையுடன் பகிர்ந்து கொள்ளப்படும், அதே நேரத்தில் சர்வதேச வர்த்தகத்தை எளிதாக்க பாரத் ட்ரேட் நெட் பிளாட்பார்ம் அமைக்கப்படும். மேலும் இந்திய தபால் துறை அதன் தளவாட திறன்களை மேம்படுத்தும் வகையில் புதுப்பிக்கப்படும் எனவும் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
04. மேக் இன் இந்தியாவின் கீழ். உதிரிபாகங்களின் உள்ளூர் உற்பத்திக்கான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்கும் புதிய உற்பத்தி பணி விரிவுபடுத்தப்படும். இதன்கீழ் கிரிட் அளவிலான பேட்டரிகள், சோலார் ஃபோட்டோவோல்டாயிக் (பிவி) செல்கள் மற்றும் எலக்ட்ரோலைசர்கள் போன்ற கூறுகளின் உள்ளூர் உற்பத்திக்கான சுற்றுச்சூழல் அமைப்பு உருவாக்கப்படும்
மேலும் ஓப்பன் செல்கள் மற்றும் கேரியர்-கிரேடு மீதான அடிப்படை சுங்க வரியையும் (Basic customs duty - BCD) அரசாங்கம் குறைத்துள்ளது. ஈத்தர்நெட் சுவிட்சுகள், அதே சமயம் பிளாட் பேனல் டிஸ்ப்ளேக்களின் அடிப்படை சுங்க வரி ஆண்டு 10 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக இரட்டிப்பாகி உள்ளது.
05. இ-ஷ்ரம் பதிவு மற்றும் அடையாள அட்டையின் கீழ் 1 கோடிக்கும் அதிகமான கிக் தொழிலாளர்கள் அரசாங்கத்தால் நிதியளிக்கப்படும் காப்பீட்டிற்கு தகுதி பெறுவார்கள். இதேபோல யுபிஐ (UPI) உடன் இணைக்கப்பட்ட கிரெடிட் கார்டையும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இதன்கீழ் பிரதமர் ஸ்வாநிதி திட்டத்தின் கீழ் தெரு வியாபாரிகள் ரூ.30,000 வரம்பிலான கிரெடிட் கார்டை பெறுவார்கள்.
யூனியன் பட்ஜெட் 2025 ஆனது நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தித் துறை உட்பட தொழில்துறைக்கு நல்ல செய்தியை கொண்டுவருகிறது. முக்கிய கூறுகளுக்கான பேட்டரிகள் மற்றும் டிஸ்பிளேக்கள் போன்ற பாகங்களின் மீதான பிசிடி குறைப்புக்கள் ஆனது உள்ளூர்மயமாக்கலை அதிகரிக்கும்" என்று கவுண்டர்பாயின்ட் ஆராய்ச்சி இயக்குனர் தருண் பதக் கூறியுள்ளதாக கேஜெட்ஸ் 360 செய்தி வெளியிட்டுள்ளது.
இதேபோல சைபர்மீடியா ஆராய்ச்சியின், இண்டஸ்ட்ரி ரிசர்ச் க்ரூபபில் விபி ஆன பிரபு ராம், அரசாங்கத்தின் அடிப்படை சுங்க வரி திருத்தமானது உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும், இது பிரதமர் நரேந்திர மோடியின் லட்சியமான 500 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.43,32,500 கோடி) எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி இலக்கை நெருங்க வைக்கும் என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications