புது UPI ரூல்ஸ்.. RBI உடனடி அமல்.. இனி ரூ.500 இல்ல ரூ.1000.. மொத்தம் ரூ.5000.. ஒரே நேரத்தில் 2 மாற்றங்கள்!
ஆர்பிஐ (RBI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) ஆனது யுபிஐ சேவையில் மீண்டும் 2 முக்கியமான மாற்றங்களை அமலுக்கு கொண்டு வந்துள்ளது. யுபிஐ லைட் (UPI Lite) சேவையின் பரிவர்த்தனை வரம்புகள் (Transaction limits) அதிகரிக்கபட்டு உள்ளது.
ஆர்பிஐ மூலம் திருத்தப்பட்ட கட்டமைப்பின்படி, சிங்கிள் யுபிஐ லைட் ஆஃப்லைன் பரிவர்த்தனைக்கான (Single UPI Lite offline transaction) அதிகபட்ச வரம்பு ரூ.500 இல் இருந்து ரூ.1,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், யுபிஐ லைட் வாலட்டின் மொத்த வரம்பு (UPI Lite Wallet Total Limit) ரூ.2,000 இல் இருந்து ரூ.5,000 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

யுபிஐ லைட்டின் பயனர்களுக்கு அதிக நெகிழ்வுத்தன்மையை வழங்கும் இந்த புதுப்பிக்கப்பட்ட பரிவர்த்தனை வரம்புகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. அதாவது யுபிஐ லைட் ஆஃப்லைன் சேவை தொடர்பான புதிய பரிவர்த்தனை வரம்புகள் ஏற்கனவே நடைமுறைக்கு வந்துவிட்டன. பயனர்கள் இப்போதில் இருந்த சிங்கிள் பேமண்ட்டில் ரூ.1000 அனுப்ப தொடங்கலாம்.
கடந்த ஜனவரி 2022 இல் அறிமுகப்படுத்தப்பட்டு, ஆகஸ்ட் 2023 இல் புதுப்பிக்கப்பட்ட இந்த ஆஃப்லைன் பயன்முறை ஆனது சிறிய மதிப்புள்ள டிஜிட்டல் கட்டணங்களை எளிதாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது. யுபிஐ லைட் சேவையானது இன்டர்நெட் கனெக்ஷன் இல்லாமலேயே பரிவர்த்தனைகளை செய்ய அனுமதிக்கிறது; வழக்கான யுபிஐ-விட குறைந்த மதிப்புள்ள வாங்குதல்களுக்கு விரைவான மற்றும் வசதியான பேமண்ட்களை செயல்படுத்துகிறது.
யுபிஐ சேவை தொடர்பாக சமீபத்தில் வரும் முதல் மாற்றம் இதுவல்ல என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. கடந்த நவம்பர் மாத இறுதியில் யுபிஐ 123பே (UPI 123Pay) சேவையில் 5 முக்கிய மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டதும் இங்கே குறிப்பிடத்தக்கது. முதல் மற்றும் முக்கிய மாற்றம் யுபிஐ 123பே சேவைக்கான பரிவர்த்தனை வரம்பானது ரூ.5,000 இல் இருந்து ரூ.10,000 ஆக அதிகரிக்கப்பட்டது.
அதாவது இப்போது, இந்தியாவில் உள்ள 400 மில்லியன் ஃபீச்சர் போன் பயனர்களும், தங்களுடைய மொபைல் போன்களில் உள்ள யுபிஐ 123பே ஆப் வழியாக ரூ.10,000 வரை பணப்பரிமாற்றம் செய்ய முடியும். இதுதவிர்த்து யுபிஐ 123பே சேவை மேம்படுத்தும் நோக்கத்தின் கீழ் 4 முக்கிய மாற்றங்களும் செய்யப்பட்டன.
முதலாவதாக - யுபிஐ 123பே சேவையில் தற்போது ஆதார் அட்டை அடிப்படையிலான ஒடிபி அங்கீகாரம் சேர்க்கப்பட்டுள்ளது. இது யுபிஐ 123பே சேவைக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்கும். இரண்டாவதாக - யுபிஐ 123பே சேவையின் டேக்கிங் தரப்படுத்ப்பட்டுள்ளது. இதன்கீழ் ட்ராக்கிங் மற்றும் ரிப்போர்ட்டிங்காக புதிய (86) பர்போஸ் கோட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மூன்றாவதாக - யுபிஐ 123பே சேவையின் இனிஷியேஷன் மோட்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. தற்போது ஐவிஆர், மிஸ்டு கால்கள், ஃபீச்சர் போன் ஆப்கள் மற்றும் சவுண்ட்-பேஸ்டு டெக்னாலஜியின் கீழ் பணபரிமாற்ற செயல்முறையை தொடங்கலாம். நான்காவது மற்றும் கடைசியாக - பணம் செலுத்துவதை இன்னும் எளிதாக்கும் வண்ணம், இந்த சேவையில் யுபிஐ நியூமெரிக் ஐடி மேப்பர் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது
இதெல்லாம் ஒருபக்கம் இருக்க என்பிசிஐ (NPCI - National Payments Corporation of India) ஆனது லோ-டிக்கெட் பேமண்ட்ஸ் (Low-ticket payments) தொடர்பான மாற்றங்களில் ஈடுபட்டு வருகிறது. ரூ.50 அல்லது ரூ.100 க்கும் குறைவான தொகையை செலுத்த யுபிஐ சேவையை பயன்படுத்துவதே.. அதாவது சிறிய அளவிலான தொகையை பணப்பரிமாற்றம் செய்யும் செயல்முறையே லோ-டிக்கெட் பேமண்ட்ஸ் என்று அழைக்கப்படுகிறது.
இப்படிப்பட்ட லோ-டிக்கெட் பேமண்ட்களை யுபிஐ லைட்டிற்கு மாற்றுவதற்கான வேலைகளை என்பிசிஐ செய்து வருகிறது. இப்படி செய்வதன் மூலம் யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் சுற்றுச்சூழல் அமைப்பானது (Unified Payments Interface ecosystem) இன்னும் திறம்பட செயல்படும் என்றும், யுபிஐ சேவையில் ஏற்படும் தொழில் நுட்ப கோளாறுகள் மற்றும் பரிவர்த்தனை தோல்விகள் குறையும் என்றும் என்பிசிஐ நம்புகிறது.


Click it and Unblock the Notifications








