UPI-க்கு புது லிமிட்.. செப்.15 முதல் அமல்.. PhonePe, GPay-க்கு எவ்ளோ.. 24 மணி நேரமோ.. 1 தடவையோ.. என்ன மாறுது?
கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe), பேடிஎம் (Paytm) உள்ளிட்டவை மூலம் பரிவர்த்தனை செய்யும் கஸ்டமர்களுக்கு செப்டம்பர் 15ஆம் தேதி முதல் புதிய யுபிஐ லிமிட் (New UPI Limit) அமலுக்கு வர இருக்கிறது. ஒரு பரிவர்த்தனைக்கு இவ்வளவு லிமிட் மற்றும் 24 மணிநேரத்துக்கு மொத்தமாக இவ்வளவு லிமிட் என்று என்பிசிஐ (NPCI) கொடுத்துள்ளது. இது ஒட்டுமொத்த பரிவர்த்தனைகளுக்கும் பொருந்தாது. குறிப்பிட்ட பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே பொருந்தும். ஆகவே, முழு லிமிட் விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
பேங்க் அக்கவுண்ட்களை யுபிஐ ஆப்களுடன் இணைத்து பணப்பரிவர்த்தனை செய்தாலும், அதையும் இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (National Payments Corporation of India) கட்டுப்படுத்துகிறது. ஏற்கனவே, ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையில் குறிப்பிட்ட பரிவர்த்தனைகளுக்கு லிமிட் வைத்திருத்தது. இது இப்போது அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.

கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற ஆப்கள் மூலம் பர்சன் டூ பர்சன் (Person to Person) பரிவர்த்தனைகளை செய்யும்போது அதிகபட்சம் ரூ.1 லட்சம் வரையில் அனுப்பி கொள்ளலாம். இந்த லிமிட்டில் எந்த மாற்றமும் கிடையாது. ஆனால், இப்போது வந்துள்ள புதிய லிமிட்டானது பர்சன் டூ மெர்ச்சன்ட் (Person to Merchant) பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே பொருந்துகிறது.
புது லிமிட் என்ன?
யுபிஐ ஆப்கள் மூலமாக கேப்பிடல் மார்கெட்டில் (Capital Market) மூதலீடு செய்யும்போது ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.5 லட்சமாக லிமிட் அதிகரிக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரத்துக்கு அதிகபட்சம் ரூ.10 லட்சம் வரையில் முதலீடு செய்து கொள்ளலாம். இது முன்னதாக ரூ.2 லட்சம் லிமிட்டில் இருந்தது. செப்டம்பர் 15ஆம் தேதிக்கு பிறகு ரூ.10 லட்சமாக மாற இருக்கிறது.
அரசுக்கு சொந்தமான ஈ-மார்கெட்களில் ஈஎம்டி பேமெண்ட்கள் (EMD Payment) செய்யும்போது, ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.5 லட்சமாக லிமிட் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல 24 மணி நேரத்துக்கு அதிகபட்சம் ரூ.10 லட்சம் வரையில் ஈஎம்டி பேமெண்ட்களை செய்து கொள்ளலாம். டெண்டர் எடுத்தல் போன்றவற்றில் முன் வைப்புத்தொகை செலுத்த இது பயன்படுகிறது.
டிராவல் செய்யும்போது, டிக்கெட் புக்கிங், ஹோட்டல் புக்கிங் உள்ளிட்டவற்றுக்கு யுபிஐ ஆப்கள் மூலம் பணம் அனுப்பும்போது அதற்கான ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.5 லட்சமாக லிமிட் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல முன்பு பார்த்ததை போலவே 24 மணி நேரத்தில் அதிகபட்சம் ரூ.10 லட்சம் வரையில் பரிவர்த்தனைகளை கஸ்டமர்கள் செய்து கொள்ளலாம்.
கிரெட் கார்டு பில் லிமிட்
யுபிஐ ஆப்கள் மூலம் கிரெடிட் கார்டுக்கு பில் செலுத்தும்போது இனிமேல் ஒரு பரிவர்த்தனைக்கு அதிகபட்சம் ரூ.5 லட்சம் செலுத்தி கொள்ளலாம். அதேபோல 24 மணி நேரத்தில் அதிகபட்சம் ரூ.6 லட்சம் வரையில் கிரெடிட் கார்டுக்கு பில்களை செலுத்தி கொள்ளலாம். இந்த பரிவர்த்தனைக்கு கட்டணம் இல்லாததால், கூடுதல் செலவு இல்லாமல் பில் செலுத்தலாம்.
தங்க நகைக்கடைகளுக்கு சென்று தங்கம் அல்லது வெள்ளி உள்ளிட்ட ஆபரண பொருட்களை வாங்கும்போது, செப்டம்பர் 15ஆம் தேதிக்கு பிறகு ரூ.2 லட்சம் ஒரே பரிவர்த்தனை மூலம் அனுப்பிக் கொள்ளலாம். இதுபோக 24 மணி நேரத்தில் அதிகபட்சம் ரூ.6 லட்சம் வரையில் யுபிஐ ஆப்கள் மூலம் பரிவர்த்தனைகளை செய்து கொள்ளலாம்.
இதேபோல டிஜிட்டல் அக்கவுண்ட் ஓப்பன் செய்யும்போது, அதில் டெபாசிட் செய்துகொள்ள யுபிஐ ஆப்கள் மூலம் ஒரு பரிவர்த்தனைக்கு அதிகபட்சம் ரூ.5 லட்சம் செலுத்தலாம். அதேபோல 24 மணி நேர லிமிட்டும் ரூ.5 லட்சமாக இருக்கிறது. ஆகவே, டெபாசிட், பில் செலுத்துதல், ஆபரணங்கள் வாங்குதல் உள்ளிட்டவற்றின் லிமிட் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆகவே, செப்டம்பர் 15ஆம் தேதிக்கு பிறகு யுபிஐ கஸ்டமர்கள் கூடுதல் தொகையை பரிமாற்றம் செய்யலாம்.


Click it and Unblock the Notifications