Home
News

பிப். 1 முதல் புது ரூல்ஸ்.. LPG, UPI, வங்கி சேவையில் மாற்றங்கள்.. எதிர்கொள்ள நீங்கள் தயாரா? மக்களே கவனியுங்க..

பிப்ரவரி 1 ஆம் தேதியான இன்று முதல் பல புதிய மாற்றங்களை (New rules from February 1, 2025) இந்திய மக்கள் சந்திக்க வேண்டியதுள்ளது. புது மாதம் பிறந்தால், புது ரூல்ஸ் நடைமுறை என்ற நிலை உருவாகியுள்ளது போல தெரிகிறது. அப்படி, இந்த பிப்ரவரி 1, 2025 முதல் யுபிஐ சேவை (UPI), எல்பிஜி கேஸ் சிலிண்டர் (LPG gas cylinder) சேவை மற்றும் வங்கி சேவையில் (Banking service) நடைபெறப்போகும் மாற்றங்களை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.

புது மாதம் பிறந்தால் புது நம்பிக்கை என்ற காலம் மாறி, இப்போது புது மாதம் பிறந்தாலே ஏதேவொரு புது மாற்றத்தை நாம் சந்திக்க வேண்டுமென்ற நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இந்த புதிய மாற்றங்கள் அணைத்தும் மக்களின் நன்மைக்கானது என்பதனால், மக்களும் ஒவ்வொரு புது-புது விதிமாற்றங்களுக்கு (new rules february 1st) ஏற்றவாறு தங்களை மாற்றிக்கொண்டு தயாறிக்கொள்கின்றனர். குறிப்பாக, புது மாதம் பிறந்தால் புது ரூல்ஸ்கள் (new month new rules) நடைமுறைக்கு வரும்பொழுது இவை எளிதாக நடக்கிறது.

பிப். 1 முதல் புது ரூல்ஸ்.. LPG, UPI, வங்கி சேவையில் மாற்றங்கள்..

பிப். 1 முதல் புது ரூல்ஸ்.. LPG, UPI, வங்கி சேவையில் மாற்றங்கள்:

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (Finance Minister Nirmala Sitharaman) பிப்ரவரி 1 ஆம் தேதி நாட்டின் பட்ஜெட்டை தாக்கல் செய்யும் வேளையில், புதிய மாதத்துடன் சில புதிய மாற்றங்களும் நிகழ உள்ளன. இந்த மாற்றம் நிதி தொடர்பானது. இது சாதாரண மக்களின் பாக்கெட்டில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று கூறப்படுகிறது. பிப்.1 ஆம் தேதி முதல், எல்பிஜி எரிவாயு சிலிண்டர் (LPG gas cylinder) விலை மற்றும் யுபிஐ (UPI) தொடர்பான விதிகளில் மீண்டும் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டடுள்ளதை நம்மால் பார்க்க முடிகிறது.

1. எல்பிஜி கேஸ் சிலிண்டர் புது விலை மாற்றம்:
ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில், நாடு முழுவதும் எல்பிஜி விலைகள் திருத்தப்படுகின்றன. எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் எல்பிஜி சிலிண்டர்களின் விலைகளைப் (LPG cylinder price) புதுப்பிக்கின்றன. இதுபோன்ற சூழ்நிலையில், பட்ஜெட் நாளில் எல்பிஜி சிலிண்டர்களின் விலைகள் குறைக்கப்படுமா அல்லது அதிகரிக்கப்படுமா என்ற குழப்பம் இருந்தது. இந்த மாதம் முதல் LPG கேஸ் சிலிண்டர் விலை ரூ.7 குறைக்கப்பட்டுள்ளது. இது ஒரு சிறிய குட் நியூஸ் ஆக அமைந்துள்ளது.

2. UPI தொடர்பான நியூ ரூல்ஸ்:
UPI தொடர்பான விதிகளில் மீண்டும் ஒரு பெரிய மாற்றம் நடந்துள்ளது. இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (National Payments Corporation of India) சில UPI பரிவர்த்தனைகளைத் தடுக்க முடிவு செய்துள்ளது. புதிய விதிகளின் படி, பிப்ரவரி 1, 2025 முதல் சிறப்பு எழுத்துக்களால் ஆன UPI ID-களைக் கொண்ட பரிவர்த்தனைகள் இனி ஏற்றுக்கொள்ளப்படாது என்று கூறப்பட்டுள்ளது. அதாவது, உங்கள் UPI ID தகவலில் @,#, $, *, ! போன்ற சிறப்பு எழுத்துக்கள் (special characters) இருந்தால் அவற்றை உடனே மாற்ற வேண்டும்.

NPCI இன் படி, பிப்ரவரி 1 முதல், பரிவர்த்தனை ஐடியில் எண்ணெழுத்து எழுத்துக்கள் (எழுத்துக்கள் மற்றும் எண்கள்) மட்டுமே பயன்படுத்தப்படும். அதாவது உங்கள் பெயருக்கு இடையில் எழுத்துக்களுடன் நம்பர்களை சேர்த்துக்கொள்ளலாம். ஆனால், இனி ஸ்பெஷல் கேரக்டர்ஸ் என்றழைக்கப்படும் சிறப்பு எழுத்துக்கள் இருக்கவே கூடாது என்ற புது விதிமுறை நடைமுறைக்கு வந்துள்ளது. உங்கள் பணப்பரிவர்த்தனை சீராக நடைபெறவில்லை என்றால் உங்கள் UPI ID விபரங்களை செக் செய்யுங்கள்.

3. வங்கி விதிகளில் புது மாற்றங்கள்:
கோடக் மஹிந்திரா வங்கி அதன் வாடிக்கையாளர்களுக்கு அதன் பொது வசதிகள் மற்றும் கட்டணங்களில் வரவிருக்கும் மாற்றங்கள் குறித்து அறிவித்துள்ளது, இது பிப்ரவரி 1, 2025 முதல் அமலுக்கு வருகிறது. இதில் இலவச ஏடிஎம் பரிவர்த்தனை வரம்பில் திருத்தங்கள் மற்றும் பல்வேறு வங்கி சேவைகளுக்கான புதுப்பிக்கப்பட்ட கட்டணங்கள் (banking service charges) போன்ற புதிய மாற்றங்களை வங்கி நடைமுறைப்படுத்தியுள்ளது. கூடுதல் விபரங்களுக்கு வங்கியின் ஆன்லைன் போரட்டலை பார்வையிடுங்கள்.

Best Mobiles in India

English summary
New UPI ID LPG Gas Cylinder Banking Rules From February 1 2025 Check Now Immediately
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X