Google Pay, PhonePe கதை முடிஞ்சது.. இனி UPI Amount-ஐ மறைக்கலாம்.. புது QR கோட்.. Paytm-ல் 5 அதிரடி மாற்றங்கள்!
யுபிஐ (UPI) சேவையில் இருந்து திடீரென தடை செய்யப்பட்டு, மீண்டு வந்து பல மாதங்கள் ஆகியும் கூட.. பேடிஎம் (Paytm) நிறுவனத்தால்.. கூகுள் பே (Google Pay) மற்றும் போன்பே (PhoePe) ஆகிய 2 யுபிஐ பிளாட்ஃபாரம்களிடம் தான் "இழந்த" வாடிக்கையாளர்களை மீண்டும் "பிடிக்க" முடியவில்லை.
இந்த போக்கை மாற்றும் நோக்கத்தின் பேடிஎம் நிறுவனம் ஆனது தனது யுபிஐ ஆப்பில் ஒரே நேரத்தில் 5 முக்கியமான மாற்றங்களை / புதிய அம்சங்களை (New UPI Features) அறிமுகம் செய்துள்ளது. பேடிஎம்-ன் இந்த நடவடிக்கை கூகுள் பே மற்றும் போன்பே ஆப்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களை மீண்டும் பேடிஎம் பக்கம் ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1. இனி பரிவர்த்தனைகளை மறைக்கலாம்: பேடிஎம் அறிமுகம் செய்துள்ள முதல் மற்றும் முக்கியமான அம்சம் இதுதான். இந்த அம்சத்தின் கீழ், பேடிஎம் பயனர்களால் தங்கள் பேமண்ட் ஹிஸ்டரியில் (Payment History) இருந்து குறிப்பிட்ட யுபிஐ பரிவர்த்தனைகளை மறைக்கவும் அல்லது மீண்டும் அதை காட்சிப்படுத்தவும் (Hide or Unhide) முடியும்.
அதாவது தனிப்பட்ட செலவுகள் அல்லது ரகசிய பரிமாற்றங்கள் (Personal expenses or Confidential transfers) போன்ற முக்கியமான பேமண்ட்கள் மீது இப்போது பயனர்களுக்கு அதிக கட்டுப்பாடு கிடைக்கிறது. இப்படியாக மறைக்கப்பட்ட பேமண்ட்கள் ஆனது "பேலன்ஸ் & ஹிஸ்டரி" பிரிவில் இருந்து அகற்றப்பட்டு. மிகவும் பாதுகாப்பான "வியூ ஹிட்டன் பேமன்ட்ஸ்" (View Hidden Payments) என்கிற பிரிவுக்கு நகர்த்தப்படுகின்றன. யூஸர் ஆத்தென்டிகேஷன், அதாவது பயனர்களின் அங்கீகாரம் வழியாக மட்டுமே இந்த பிரிவை அணுக முடியும்!
2. இனி பிடிஎஃப் மற்றும் எக்ஸ்செல் ஃபார்மெட்டில் கிடைக்கும்: பேடிஎம் ஆப்பில் இப்போது யுபிஐ பரிவர்த்தனை அறிக்கைகளை (UPI transaction statements) பிடிஎஃப் மற்றும் எக்ஸ்செல் (PDF and Excel) ஃபார்மெட்களில் டவுன்லோட் (Download) செய்யலாம். இதனால் செலவுகளை கண்காணிப்பது, பட்ஜெட்டுகளை நிர்வகிப்பது, கணக்கியல் மற்றும் நிதி தொடர்பான பதிவுகளை பராமரிப்பது இன்னும் எளிதாக்கப்பட்டுள்ளது
3. மொபைல் நம்பர்களை பிரைவேட் ஆக வைத்திருக்க பெர்சனலைஸ்டு யுபிஐ ஐடி: பேடிஎம் ஆப் ஆனது தற்போது தனிப்பயனாக்கப்பட்ட யுபிஐ ஐடிகளை (Personalise UPI ID) உருவாக்க அனுமதிக்கிறது. அதாவது name@ptyes அல்லது name@ptaxis போன்ற ஹேண்டில்களை பயன்படுத்தி பாதுகாப்பான பணபரிவர்தனைகளை செய்ய வழிவகுக்கிறது. இந்த அம்சம் மொபைல் நம்பர்ளை பகிர வேண்டிய அவசியத்தை முற்றிலுமாக நீக்குகிறது.

4. யுபிஐ இதன் இணைக்கப்பட்ட வங்கி கணக்குகளில் பேலன்ஸ் செக் செய்யலாம்: பேடிஎம் ஆப் ஆனது இப்போது யுபிஐ உடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கின் (UPI-Linked Bank Accounts) பேலன்ஸ்-ஐ சரிபார்க்கவும், அதே போல பேடிஎம் தளத்தில் உருவாக்கப்பட்ட யுபிஐ ஹேண்டில்கள் உடன் இணைக்கப்பட்ட அனைத்து வங்கி கணக்குகளிலும் உள்ள மொத்த பேலன்ஸ்-ஐ சரிபார்க்கவும் அனுமதிக்கிறது.
5. ஸ்மார்ட்போன் ஹாம் ஸ்க்ரீனில் 'பணத்தைப் பெறு' என்கிற புதிய க்யூஆர் விட்ஜெட்: பேடிஎம் ஆப் ஆனது ரிஸீவ் மணி க்யூஆர் விட்ஜெட்டை (Receive Money QR Widget) அறிமுகப்படுத்துகிறது. இது கேப் ஓட்டுநர்கள், டெலிவரி பெர்சன்கள் மற்றும் ஃப்ரீலான்ஸர்கள் தங்கள் பேடிஎம் க்யூஆர் கோட்-ஐ நேரடியாக ஸ்மார்ட்போனின் ஹோம் ஸ்க்ரீனில் வைக்க அனுமதிக்கிறது. இது பேடிஎம் ஆப்பை திறக்காமலேயே விரைவான மற்றும் எளிதான கட்டண சேகரிப்பை செயல்படுத்த உதவுகிறது; மேலும் பரிவர்த்தனைகள் வேகமாகவும் வசதியாகவும் நடக்க வழிவகுக்கிறது.
இதோடு சேர்த்து பேடிஎம் பிளாட்ஃபார்ம் ஆனது பேடிஎம் யுபிஐ லைட் (Paytm UPI Lite) சேவையில் ஆட்டோ டாப்-அப் (Auto Top-Up) அம்சத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இது யுபிஐ பேலன்ஸ் ஆனது குறைவாக இருக்கும் போது, இணைக்கப்பட்ட பேங்க் அக்கவுண்ட் வழியாக தானாகவே பேலன்ஸ்-ஐ நிரப்பும்.


Click it and Unblock the Notifications








