Home
News

புதிய UPI சார்ஜ்பேக் ரூல்ஸ் அமலுக்கு வந்தன.. இனி இந்த 5 விஷயங்களை செய்யும் போது ஜாக்கிரதை!

என்பிசிஐ (NPCI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (National Payments Corporation of India) ஆனது யுபிஐ பரிவர்த்தனைகள் (UPI Transactions) தொடர்பான புதிய விதிகளை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த புதிய விதிகள் இன்று முதல், அதாவது 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தன.

2025 பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் யுபிஐ பணப்பரிமாற்ற சேவையில் என்னென்ன மாறும்? என்பிசிஐ அறிவித்துள்ள இந்த புதிய விதிகள் முழுக்க முழுக்க.. ஆட்டோ அக்செப்ட்ன்ஸ் (Auto acceptance) மற்றும் சார்ஜ்பேக்குகளை நிராகரிப்பது (Rejection of chargebacks) தொடர்பான விதிகள் ஆகும்.

புதிய UPI சார்ஜ்பேக் ரூல்ஸ் அமலுக்கு வந்தன!

2025 ஆம் ஆண்டு பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் பரிவர்த்தனை கிரெடிட் உறுதிப்படுத்தல் (Transaction Credit Confirmation - TCC) மற்றும் ரிட்டர்ன் கோரிக்கைகள் (Return requests - RET) ஆகியவற்றின் அடிப்படையில் சார்ஜ்பேக் ஆனது தானாக ஏற்கப்படும் அல்லது நிராகரிக்கப்படும்.
சார்ஜ்பேக் என்றால் என்ன? பொதுவாக சார்ஜ்பேக் நிகழ்வுகள் எப்போதெல்லாம் நடக்கும்? சார்ஜ்பேக் VS ரீபண்ட் ஆகியவற்றுக்கு இடையே உள்ள வேறுபாடு என்ன ? இதோ விவரங்கள்:

சார்ஜ்பேக் என்றால் என்ன (What is UPI Chargeback)? தகராறுகள், மோசடிகள் அல்லது தொழில்நுட்பப் பிழைகள் காரணமாக, பூர்த்தி செய்யப்பட்ட யுபிஐ பரிவர்த்தனையை திருப்பி செலுத்துதலே சார்ஜ்பேக் என்று அழைக்கப்படுகிறது. பணம் செலுத்துபவரின் வங்கி இதற்கான செயல்முறையை தொடங்கும், பின்னர் அது அங்கீகரிக்கப்பட்டால், பணம் செலுத்துபவர் பணத்தை திரும்பப் பெறுவார்.

இனிமேல் என்ன ஆகும்? முன்னதாக ​​பணம் அனுப்பும் வங்கிகள் ஆனது சிக்கல் ஏற்பட்ட அதே நாளில் பணத்தை திருப்பி கொடுப்பதற்காகவும் கூட கட்டணம் வசூலிக்கும்படி இருந்தது. பயனாளிகளுக்கான வங்கிகள் ஆனது பரிவர்த்தனைகளை சீர்செய்ய நேரம் கிடைப்பதற்கு முன்பாகவே இது அடிக்கடி நிகழ்கிறது. இது நிராகரிக்கப்பட்ட ரிட்டர்ன் கோரிக்கைகளுக்கு வழிவகுக்கும்.

சில சமயங்களில், ரிசர்வ் வங்கி (Reserve Bank of India - RBI) மூலம் அபராதம் விதிக்கப்படுவதன் காரணமாக, ஏற்றுக்கொள்ளப்பட்ட கட்டணங்கள் தானாகவே மூடப்படும். இந்த சிக்கல்களைச் சரிசெய்ய, என்பிசிஐ ஆனது இந்த செயல்முறையை மாற்றியுள்ளது. இப்போது, ​​அடுத்த செட்டில்மென்ட் சுழற்சியில் பயனாளி வங்கி எழுப்பிய டிசிசி / ஆர்இடி அடிப்படையில் தான் கட்டணம் வசூலிக்கப்படும்.

பொதுவாக சார்ஜ்பேக் நிகழ்வுகள் எப்போதெல்லாம் நடக்கும் (When do chargebacks occur)?
01. வாடிக்கையாளர் பணம் செலுத்துவதை அங்கீகரிக்கவில்லை என்றால்..
02. சம்பந்தப்பட்ட பரிவர்த்தனை தொடர்பாக வாடிக்கையாளர் வங்கி உடனான சர்ச்சையை எழுப்பினால்..
03. வழங்கப்படாத பொருட்களுக்கு வாடிக்கையாளரிடம் கட்டணம் விதிக்கப்பட்டால்..
04. பரிவர்த்தனை செயலாக்கத்தில் பிழை ஏற்பட்டால்.. (உதாரணத்திற்கு ஒரே பரிவர்த்தனை இரண்டு முறை செயலாக்கப்படுவது)
05. ஒரு வணிகர் அதே பரிவர்த்தனைக்கு டூப்ளிகேட் கட்டணம் விதித்தால்..

சார்ஜ்பேக் - ரீபண்ட் ஆகியவற்றுக்கு இடையே உள்ள வேறுபாடு என்ன (Difference between chargeback and refund)? யுபிஐ பேமெண்ட் போர்ட்டல்கள் போன்ற சேவை வழங்குனரிடம் அல்லது வணிகரிடம் வாடிக்கையாளர் கோரிக்கையை எழுப்பினால், பணத்தை திரும்பப்பெறுதல் (ரீபண்ட்) செயலாக்கப்படும். அதுவே வாடிக்கையாளர் வங்கியிடம் ஒரு கோரிக்கையை எழுப்பும்போது, ​​அந்த வங்கி, குறிப்பிட்ட கோரிக்கையை விசாரித்து செயலாக்கும் போது கட்டணம் வசூலிக்கப்படுவது - சார்ஜிபேக் ஆகும்.

இந்த மாற்றங்கள் எவ்வாறு பிரச்சினைகளை சரி செய்யும் தீர்க்கும்? மொத்த பதிவேற்ற விருப்பம் (Bulk upload option) மற்றும் ஒருங்கிணைந்த தகராறு மற்றும் சிக்கல் தீர்வு (Unified Dispute and Issue Resolution - UDIR) ஆகியவற்றில் இந்த மாற்றங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும், ஆனால் ப்ர்ண்ட-எண்ட் விருப்பத்தில் (front-end option) பயனுள்ளதாக இருக்காது. அதாவது இது, வாடிக்கையாளர்களின் பேங்க் ஆப்களில் நேரடியாக காணப்படாது.

More from GizBot

Best Mobiles in India

English summary
New UPI Chargeback NPCI Rules Came to Effect What is Chargebacks 5 Possible Situations It Occurs
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X