Home
News

யுபிஐ சேவையில் புதுவரவு.. Mony என்கிற புதிய UPI App அறிமுகம்.. பேங்க் அக்கவுண்ட் வேணாம்.. யாருக்கு பொருந்தும்?

ஆர்பிஐ (RBI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய ரிசர்வ் வங்கியால் (Reserve Bank of India) ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனமான ஸ்மார்ட் பேமென்ட் சொல்யூஷன்ஸ் (Smart Payment Solutions) ஆனது மணி / மோனி (Mony) என்கிற புதிய யுபிஐ பேமண்ட் ஆப் (New UPI Payment App) ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

இந்த புதிய ஆப் ஆனது - வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் (Foreign tourists) மற்றும் என்ஆர்ஐ (NRI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் (Non-Resident Indians) இந்தியாவிற்கு வருகை தரும் போது, அவர்களுக்கு இந்திய வங்கிகளில் அக்கவுண்ட் (Indian bank account) இல்லாமலேயே டிஜிட்டல் முறையில் பணம் செலுத்த அனுமதிக்கும்.

யுபிஐ சேவையில் புதுவரவு.. Mony என்கிற புதிய UPI App அறிமுகம்!

இந்த மணி ஆப் ஆனது என்பிசிஐ (NPCI) என்று சுருக்கமாக இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்தின் (National Payments Corporation of India) யுபிஐ ஒன் வேர்ல்ட் (UPI One World) என்கிற முயற்சியின் ஒரு பகுதியாகும். மணி ஆப் வழியாக என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? இந்த ஆப்பை பயன்படுவது எப்படி? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்:

மணி ஆப் வழியாக என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?
- உள்ளூர் விற்பனையாளர்கள் மற்றும் பெரிய சில்லறை விற்பனையாளர்களிடம் யுபிஐ க்யூஆர் கோட் அடிப்படையில் கட்டணங்கள் (UPI QR Code Payments) செலுத்தலாம்
- இதை பயன்படுத்த இந்திய வங்கிக் கணக்கு (Account in Indian Banks) தேவையில்லை

- லோக்கேஷன் அடிப்படையிலான பரிந்துரைகள் (Location-based recommendations) உட்பட ஏஐ அடிப்படையிலான டிராவல் அம்சங்கள் (AI-powered travel features)
- ஆப் வழியாகவே கேஒய்சி அப்பாயிண்ட்மன்ட் (KYC appointment) மூலம் எளிமையான ஆன்போர்டிங் (Easy onboarding)
- முக்கிய இந்திய விமான நிலையங்கள் மற்றும் நகரங்களில் கேஒய்சி சரிபார்ப்பிற்கான அதரவு (KYC verification support)

மணி ஆப்பை எப்படி பயன்படுத்துவது? கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து (Apple App Store) மணி ஆப்பை பதிவிறக்கம் செய்யலாம். முன்னரே குறிப்பிட்டபடி இந்த ஆப் வழியாகவே கேஒய்சி அப்பாயின்மென்ட்டிற்கு முன்பதிவு செய்யலாம் மற்றும் முக்கிய இடங்களில் நிறுத்தப்பட்டுள்ள, ஸ்மார்ட் பேமென்ட் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் ஊழியர்களின் ஆதரவுடன் ஆன்போர்டிங்கை முடிக்கலாம்.

இந்தியா, 2023 ஆம் ஆண்டில் 9.52 மில்லியன் சர்வதேச சுற்றுலா பயணிகளின் வருகையைப் பதிவு செய்து இருந்தது. 2030 ஆம் ஆண்டில் இந்த வருகை எண்ணிக்கை 30 மில்லியனை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்தியாவில் மிகவும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட க்யூஆர் அடிப்படையிலான கட்டண சூழலுடன் (QR-based payment ecosystem) ஒருங்கிணைப்பதன் மூலம், இந்தியாவிற்கு வருபவர்களின் பயணத்தை மணி ஆப் எதித்தாக்குகிறது

"யுபிஐ-ஐ பயன்படுத்தி பரிவர்த்தனை செய்வதற்கான எளிய, பாதுகாப்பான வழியை வழங்குவதன் மூலம் சர்வதேச பயணிகளுக்கு, மணி ஆப் ஆனது ஒரு குறிப்பிடத்தக்க சிக்கலைத் தீர்க்கிறது" என்று ஸ்மார்ட் பேமென்ட் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் ஆன பிரவீன் குமார் தபாய் (Praveen Kumar Dhabhai, Director, Smart Payment Solutions) கூறி உள்ளார்

"இந்தியாவிற்கு வருகை தரும் வெளிநாட்டினருக்கு யுபிஐ கட்டணங்களை வழங்க மணி உடன் கூட்டு சேருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்" என்று என்பிசிஐ செய்தி தொடர்பாளர் கூறி உள்ளார். முன்னரே குறிப்பிட்டபடி "யுபிஐ ஒன் வேர்ல்ட்" முயற்சி ஆனது அனைத்து பயனர்களுக்கும் நிதிகளை லோட் செய்தல் மற்றும் பணத்தை திரும்பப் பெறுதல் ஆகியவற்றை தடையின்றி செய்ய உதவும் முயற்சி ஆகும். மணி ஆப் ஆனது ப்ரீபெய்ட் பேமென்ட் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் கட்டமைப்பின் (Prepaid Payment Instruments framework) கீழ் உருவாக்கப்பட்டுள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
New UPI App Called Mony Launched in India For Foreign tourists and NRI No Indian Bank Account Needed
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X