இனி அன்லிமிடெட்.. 12 திட்டங்களில் அதிரடி மாற்றம்.. Jio, Airtel-ஐ ஓரங்கட்ட Vodafone-வின் அடேங்கப்பா ஐடியா!
வோடாபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனமானது ஒரு முடிவோடு தான் 2025 ஆம் ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளது போல் தெரிகிறது. இந்தியாவில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டங்களில் அதன் 5ஜி நெட்வொர்க்கை அறிமுகம் செய்த சில வாரங்களுக்குப் பிறகு, இந்த டெலிகாம் நிறுவனம் இன்னொரு அட்டகாசமான வேலையை செய்துள்ளது.
வோடபோன் ஐடியாவானது தனது 12 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களில் முக்கிய மாற்றம் ஒன்றை செய்துள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட 12 திட்டங்களில் அன்லிமிடெட் 4ஜி டேட்டா (Unlimited 4G Data) நன்மையை சேர்த்துள்ளது. அதாவது ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் வழங்கும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா நன்மையை போல வோடபோன் ஐடியா 4ஜி டேட்டா நன்மையை அறிவித்துள்ளது.

இவைகள் அனைத்தும் முற்றிலும் புதிய திட்டங்கள் அல்ல என்றாலும் கூட, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ் ஆகிய முக்கிய நன்மைகளுடன் அன்லிமிடெட் 4ஜி டேட்டாவை சேர்த்துள்ளது, நிச்சயமாக வோடபோன் ஐடியாவின் வளர்ச்சிக்கு (நிதி மற்றும் புதிய வாடிக்கையாளர்களின் வளர்ச்சிக்கு) வழிவகுக்கலாம் என்பதில் சந்தேகமே வேண்டாம்.
வோடாபோன் ஐடியா அறிவித்துள்ள இந்த அன்லிமிடெட் 4ஜி டேட்டா நன்மையின் கீழ், வாடிக்கையாளர்கள் இருக்கும் வட்டத்தை பொறுத்து அன்லிமிடெட் 4ஜி டேட்டா கிடைக்கும். மகாராஷ்டிரா, டெல்லி மற்றும் கோவா போன்ற வட்டங்களில் அரை நாள் (நள்ளிரவு முதல் மதியம் வரை) அன்லிமிடெட் 4ஜி டேட்டா கிடைக்கும். அதுவே கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேசம் போன்ற வட்டங்களில் நாள் முழுவதும் அன்லிமிடெட் 4ஜி டேட்டா கிடைக்கும்.
எந்தெந்த திட்டங்களின் கீழ் வோடபோன் ஐடியாவின் அன்லிமிடெட் 4ஜி டேட்டா கிடைக்கும்?
01. வோடபோன் ஐடியா ரூ.365 திட்டம்: 28 நாட்கள் செல்லுபடியாகும் இந்த திட்டத்தின் கீழ் இனி அன்லிமிடெட் 4ஜி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் மற்றும் டெய்லி 100 இலவச எஸ்எம்எஸ்கள் ஆகிய நன்மைகள் கிடைக்கும்..
02. வோடபோன் ஐடியா ரூ.379 திட்டம்: 1 மாதம் என்கிற வேலிடிட்டியின் கீழ் அன்லிமிடெட் 4ஜி டேட்டா, வாய்ஸ் மற்றும் டெய்லி 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும்.
03. வோடபோன் ஐடியா ரூ.407 திட்டம்: 28 நாட்கள் வேலிடிட்டியின் கீழ் அன்லிமிடெட் 4ஜி டேட்டா, வாய்ஸ், டெய்லி 100 எஸ்எம்எஸ்கள், இலவச சன்நெக்ஸ்ட் சந்தா கிடைக்கும்.
04. வோடபோன் ஐடியா ரூ.408 திட்டம்: 28 நாட்கள் வேலிடிட்டியின் கீழ் அன்லிமிடெட் 4ஜி டேட்டா, வாய்ஸ், டெய்லி 100 எஸ்எம்எஸ்கள், இலவச சோனிலைவ் சந்தா கிடைக்கும்.
05. வோடபோன் ஐடியா ரூ.449 திட்டம்: 28 நாட்கள் வேலிடிட்டியின் கீழ் அன்லிமிடெட் 4ஜி டேட்டா, வாய்ஸ், டெய்லி 100 எஸ்எம்எஸ்கள், விஐ மூவீஸ் அன்ட் & டிவி சந்தா கிடைக்கும்.
06. வோடபோன் ஐடியா ரூ.469 திட்டம்: 28 நாட்கள் வேலிடிட்டியின் கீழ் அன்லிமிடெட் 4ஜி டேட்டா, வாய்ஸ், டெய்லி 100 எஸ்எம்எஸ்கள், இலவச டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா கிடைக்கும்.
07. வோடபோன் ஐடியா ரூ.979 திட்டம்: 84 நாட்கள் வேலிடிட்டியின் கீழ் அன்லிமிடெட் 4ஜி டேட்டா, வாய்ஸ், டெய்லி 100 எஸ்எம்எஸ்கள், விஐ மூவீஸ் அன்ட் & டிவி சந்தா கிடைக்கும்.
08. வோடபோன் ஐடியா ரூ.994 திட்டம்: 84 நாட்கள் வேலிடிட்டியின் கீழ் அன்லிமிடெட் 4ஜி டேட்டா, வாய்ஸ், டெய்லி 100 எஸ்எம்எஸ்கள், இலவச டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா கிடைக்கும்.
09. வோடபோன் ஐடியா ரூ.996 திட்டம்: 84 நாட்கள் வேலிடிட்டியின் கீழ் அன்லிமிடெட் 4ஜி டேட்டா, வாய்ஸ், டெய்லி 100 எஸ்எம்எஸ்கள், இலவச அமேசான் ப்ரைம் சந்தா கிடைக்கும்.
10. வோடபோன் ஐடியா ரூ.997 திட்டம்: 84 நாட்கள் வேலிடிட்டியின் கீழ் அன்லிமிடெட் 4ஜி டேட்டா, வாய்ஸ், டெய்லி 100 எஸ்எம்எஸ்கள், இலவச சன்நெக்ஸ்ட் சந்தா கிடைக்கும்.
11. வோடபோன் ஐடியா ரூ.998 திட்டம்: 84 நாட்கள் வேலிடிட்டியின் கீழ் அன்லிமிடெட் 4ஜி டேட்டா, வாய்ஸ், டெய்லி 100 எஸ்எம்எஸ்கள், இலவச சோனி லைவ் சந்தா கிடைக்கும்.
12. வோடபோன் ஐடியா ரூ.1198 திட்டம்: 70 நாட்கள் வேலிடிட்டியின் கீழ் அன்லிமிடெட் 4ஜி டேட்டா, வாய்ஸ், டெய்லி 100 எஸ்எம்எஸ்கள், இலவச நெட்பிளிக்ஸ் சந்தா கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








