Home
News

நம்ம சென்னையில் ரிலையன்ஸ் ஜியோ கேப்ஸ் - விரைவில்.!

ரிலையன்ஸ் ஜியோ கேப்ஸ் சேவை முதலில் பெங்களூர் மற்றும் சென்னையில் பின்னர் தான் தில்லி மற்றும் மும்பையில்.!

By Muthuraj

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் எப்படி தொலைத்தொடர்பு துறையில் விலைக்குறைப்பு புரட்சியை நிகழ்த்தியதோ அதே போல் டிடிஎச் சேவையில் களமிறங்கி பிற பிரபல டிடிஎச் சேவைகளின் அதிகப்படியான கட்டண கொள்கைகளை கீழிறக்கும் என்று அனைவரும் நகம் கடிக்காத குறையாய் காத்துக்கொண்டிருக்கிறோம்.

ஆனால் ஆர் ஜியோ நிறுவனமோ டிடிச் சேவையை மட்டுமின்றி எதையுமே விட்டுவைக்காது என்பது போல தெரிகிறது. அதாவது இந்த 2017 ஆம் ஆண்டில் ரிலையன்ஸ் ஜியோ ஒரு பயன்பாட்டு சார்ந்த டாக்ஸி சேவையை தொடங்க திட்டமிட்டுள்ளது.!

ஜியோ கேப்ஸ்

ஜியோ கேப்ஸ்

ரிலையன்ஸ் ஜியோவின் இந்த டாக்ஸி சேவை ஆரம்பத்திலேயே ஒரு கிக்ஸ்டார்ட் சேவையாக இருக்கும் வண்ணம் சுமார் 600 கார்கள் இதில் களம் இறக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சேவை ரிலையன்ஸ் ஜியோ கேப்ஸ் என்று அழைக்கப்பட வாய்ப்பு அதிகம் உள்ளது.

வணிக ரீதியிலான சேவை

வணிக ரீதியிலான சேவை

இந்த டாக்ஸி சேவையின் வெளியீடானது ஜியோ தொலைத் தொடர்பு சேவையின் வர்த்தக ரீதியான துவக்க நாளில் அறிவிக்கப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. இப்போது இந்த திட்டம் ஏப்ரல் மாதத்திற்கு பின்னர் தொடங்கலாம் ஆனால் அடுத்த ஆறு மாதங்கள் வரை பொறுத்த பின்பே இதன் வணிக ரீதியிலான சேவை தொடங்கும் என்றும் வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன.

போட்டியிட வாய்ப்பு

போட்டியிட வாய்ப்பு

கடுமையான விலை கொண்ட டாக்ஸி சேவை பிரிவில் இந்த ஜியோவின் புதிய சேவை போட்டியிட வாய்ப்பு உள்ளது மற்றும் இது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் அம்பானியின் "சந்தை பங்கு பெற அனைத்திற்கும் செல்ல வேண்டும்" என்ற திட்டங்களில் ஒன்று என்பதில் சந்தேகமே வேண்டாம்.

உற்பத்தி

உற்பத்தி

மேலுமொரு தகவலின் கீழ் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மஹிந்திரா மற்றும் ஹூண்டாய் போன்ற தயாரிப்பாளர்களிடம் இருந்து தனது சொந்த கார்களை உற்பத்தி செய்து வாங்கிக்கொள்ளும் என்றும் கூறுகிறது. அதாவது கிட்டத்தட்ட 600 கார்கள் ஆர்டர் பெறப்படும் என்றும் அந்த தகவல் தெரிவிக்கிறது.

நம்பகமான சேவை

நம்பகமான சேவை

ஆர் ஜியோ நெட்வொர்க்கின் கீழ் இயங்கும் தமது சொந்த கார் டிரைவர்களை பெறவே அதாவது மிக சுதந்திரமான கேப் சேவை பெறவே சொந்த கார்கள் தயாரிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. அதிகாரப்பூர்வமான தகவலாக இல்லாவிட்டாலும் கூட இது ஒரு நம்பகமான கேப்ஸ் சேவை சார்ந்த பாதுகாப்பு அம்சமாக தோன்றுகிறது.

சென்னையில்

சென்னையில்

மேலும் ஜியோ கேப்ஸ் சேவையானது முதலில் பெங்களூர் மற்றும் சென்னையில் அறிமுகப்படுத்திய பின்னர், தில்லி மற்றும் மும்பையில் அறிமுகத்திற்கு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது அதாவது வெளியாகியுள்ள நம்பக்கூடிய தகவல்களின் கீழ் "தென் இந்தியவில் இச்சேவை தொடங்க ஒரு நல்ல சந்தை உள்ளது. மெதுவாக வடக்கு பக்கம் செல்ல வேண்டும், "என்று கூறப்பட்டுள்ளது.

ஆப் சேவை

ஆப் சேவை

உடன் ஓலா மற்றும் உபெர் போன்ற நிறுவனங்களின் ஆப் சேவை போன்றே ஜியோ கேப்ஸ் ஆப் வளர்ச்சி ஏற்கனவே நடைபெற ஆரம்பித்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மற்றும் டிரைவர்களுக்கு கட்டணம் செலுத்தும் முறையை ஆராய்ந்து வருகிறதாம் ஆர் ஜியோ நிறுவனம். இந்த முறையில் ஜியோ மணி ஆப் பயன்படுத்த அதிக வாய்ப்பு உள்ளது.

மேலும் படிக்க

மேலும் படிக்க

என் சர்வீஸ்ல உங்களைப்போல எத்தனை பேர் பாத்துருக்கேன்.!!

Best Mobiles in India

English summary
New Uber, Ola rival soon: Reliance Jio Cabs gearing up for 2017 launch. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X