Home
News

புது SIM ரூல்ஸ்.. டிச.11 முதல் அமல்.. 8 நாட்களில் இதை பண்ணுங்க.. இனி Jio, Airtel, Vodafone-க்கு நேரடி மாற்றம்!

ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா சிம் கார்டு (SIM Card) வைத்திருக்கும் ஒட்டுமொத்த கஸ்டமர்களுக்கும் டிராய் (TRAI) என்றுஅழைக்கப்படும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (Telecom Regulatory Authority of India) ஆனது புது விதிகளை அமலுக்கு கொண்டு வருகிறது. இந்த விதிகள் டிசம்பர் 11ஆம் தேதி முதல் நேரடியாக மாற்றத்தை ஏற்படுத்த இருக்கிறது. இதனால் சிம் கார்டு கஸ்டமர்களுக்கு என்னென்ன மாறும்? இந்த விதிகளை கொண்டு வருவதற்கான காரணம் என்ன? உள்ளிட்ட விவரங்களை இப்போது பார்க்கலாம்.

டிசம்பர் 1ஆம் தேதி முதல் ஏற்கனவே பல்வேறு விதிகள் அமலுக்கு வந்துவிட்டன. இப்போது, சிம் கார்டு விதிகளும் கஸ்டமர்களுக்கு வர இருக்கிறது. இந்த விதிகள் ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea) மற்றும் பிஎஸ்என்எல் (BSNL) கஸ்டமர்களுக்கு அனுப்பப்படும் மெசேஜ்களில் டிரேசபிலிட்டியை (Messages Traceability) கொண்டு வர இருக்கிறது.

புது SIM ரூல்ஸ்.. டிச.11 முதல் அமல்.. டிராய் வச்ச கெடு.. இனி மாற்றம்!

அதாவது, சிம் கார்டு கஸ்டமர்களுக்கு வணிக ரீதியான மெசேஜ்களை அனுப்ப வேண்டுமானால், அதை அனுப்புகிற முதன்மை நிறுவனம் (Principal Entity) மற்றும் டெலிமார்கெட்டர் (Telemarketer) செயின்களின் விவரங்கள் டிரேசபில் செய்யக் கூடியதாக இருக்க வேண்டும். இல்லையென்றால், அந்த வணிக ரீதியான மெசேஜ்கள் நிராகரிக்கப்பட்டு, சிம் கார்டு கஸ்டமர்களுக்கு செல்லாது.

இது பேங்குகள், நிதி நிறுவனங்கள், ஓடிடி மற்றும் சோஷியல் மீடியா உள்ளி ஆப்களுக்கும் பொருந்தும். ஏனென்றால், அந்த மெசேஜ்கள் வணிக ரீதியாக அனுப்பப்படுகின்றன. ஆகவே, தனி நபர்கள் அனுப்பும் மெசேஜ்களுக்கு எந்தவொரு சிக்கலும் இருக்காது. ஆகவே, இந்த புது விதிகளின்படி மெசேஜ் டிரேசபிலிட்டிக்காக டெலிமார்கெட்டர் நிறுவனங்கள் பதிவு செய்ய வேண்டும்.

இப்படி பதிவு செய்யாவிட்டால், அந்த டெலிமார்கெட்டர் நிறுவனத்தின் மெசேஜ்கள் கஸ்டமர்களுக்கு போகாது. இதற்கான காலக்கெடு நவம்பர் 30ஆம் தேதி நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால், முதன்மை நிறுவனங்கள் மற்றும் டெலிமார்கெட்டர் நிறுவனங்கள் இந்த மெசேஜ் டிரேசபிலிட்டி காலக்கெடுவை நீட்டிக்க டிராயிடம் அனுமதி கேட்டு இருக்கின்றன.

ஆகவே, டிராய் ஆனது டிசம்பர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வர இருந்த விதிகளை டிசம்பர் 11ஆம் தேதிக்கு மாற்றி இருக்கிறது. ஆகவே, டிசம்பர் 10ஆம் தேதி வரையில் மட்டுமே முதன்மை நிறுவனங்கள் மற்றும் டெலிமார்கெட்டர் நிறுவனங்களின் டிரேசபிலிட்டி செயின் விவரங்களை பதிவு செய்தவதற்கான அனுமதி வழங்கப்படும். இதற்குள் வணிக ரீதியான மெசேஜ்களை அனுப்ப பதிவு செய்ய வேண்டும்.

ஏற்கனவே, 27,000 முதன்மை நிறுவனங்கள் தங்களது டிரேசபிலிட்டி செயின் விவரங்களை அந்தந்த தொலைத்தொடர்பு (Telecom) நிறுவனங்களிடம் பதிவு செய்து இருக்கின்றன. அடுத்த 8 நாட்களில் இது அதிகரிக்க வேண்டும். ஏனென்றால், அனைத்து நிறுவனங்களும் இப்போது, டிரேசபிலிட்டி செயின் விவரங்களை பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன.

இந்த முறை மாதக்கணக்கில் அவகாசம் வழங்காமல், 10 நாட்கள் மட்டுமே டிராய் அவகாசம் கொடுத்து இருக்கிறது. இந்த விதிகள் அமலுக்கு வந்தாலும் பேங்க் மூலம் பணம் அனுப்பும் ஓடிபிகளுக்கு எந்த சிக்கலும் இருக்காது. இந்த விதிகளை போலவே ஜனவரி 1ஆம் தேதி முதல் யுபிஐ பரிவர்த்தனை விதிகள் (UPI Transaction Rules) அமலுக்கு வர இருக்கின்றன.

இந்த விதிகளும் சிம் கார்டு விதிகளை போலவே ஒட்டுமொத்த யுபிஐ (UPI) கஸ்டமர்களிடையே நேரடி மாற்றத்தை கொண்டுவர கூடியது. இருப்பினும், யுபிஐ 123பே (UPI 123PAY) சேவைகளை பெறும் கஸ்டமர்களுக்கு மட்டுமே இந்த விதிகள் அமலுக்கு வருகிறது. இந்த விதிகளின்படி யுபிஐ 123பே பரிவர்த்தனை வரம்பு (UPI 123PAY Transaction Limit) ஆனது ரூ.10000ஆக உயர்த்தப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
New Rules From TRAI For SIM Message Traceability No Bank OTP Delays Effect From December 11 2024
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X