Home
News

புது ரூல்ஸ்.. டிச.1 முதல் அமல்.. பேங்க் பணம் அனுப்புவீங்களா.. OTP-க்கு படாதபாடு.. பேங்க் ஓடிபி, ஆதார் ஓடிபி?

ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea) மட்டுமல்லாமல் மத்திய தொலைத்தொடர்பு துறையின் கீழ் இருக்கும் பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்துக்கும் டிராய் (TRAI) - இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (Telecom Regulatory Authority of India) ஆனது டிசம்பர் 1ஆம் தேதி முதல் புது விதிகளை அமலுக்கு கொண்டுவருகிறது. இந்த விதிகளால் உங்களது சிம் கார்டு மூலம் அனுப்பப்படும் ஓடிபிக்கு படாதபாடு இருப்பது உண்மைதான். ஆனால், இந்த விதிகளை தெரிந்து கொள்ள வேண்டும்? டிசம்பர் 1ஆம் தேதி என்னவாகும்?

இந்த டிராய் விதிகள் (TRAI Rule) ஆனது, ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா போன்ற டெலிகாம் நிறுவனங்களுக்கு அமலுக்கு வருகிறது. ஆனால், அது கஸ்டமர்களிடையே நேரடியா மாற்றத்தை ஏற்படுத்த கூடியது. அதாவது, உங்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் அனுப்படுகிற ஓடிபி வராமல் போனால் எப்படி இருக்கும்? இதை இந்த விதிகளால் செய்ய முடிகிறது.

புது ரூல்ஸ்.. டிச.1 முதல் அமல்.. பேங்க் பணம் அனுப்புவீங்களா.. OTPக்கு?

டெலிகாம் நிறுவனங்கள் மூலம் பேங்கிங் சேவைகள், ஈ-காமர்ஸ் சேவைகள், சோஷியல் மீடியோ மற்றும் ஓடிடி சேவைகள் ஆகியவற்றுக்கான ஓடிபிகள் (OTP) அனுப்பப்படுகின்றன. இந்த ஓடிபி கிடைத்தால் மட்டுமே பணம் அனுப்புவதல் முதல் ஆப்களை ஓப்பன் செய்வது வரையில் செய்து கொள்ள முடிகிறது. ஆகவே, ஓடிபி தவிர்க்க முடியாத வெரிபிகேஷனாக மாறிவிட்டது.

இதனால், அடையாளம் தெரியாத நிறுவனம் அல்லது நபர்களிடம் இருந்தும் ஓடிபி அனுப்பப்பட்டு, அதன் மூலம் டெலிகாம் கஸ்டமர்களுக்கு பண இழப்பு, தனிப்பட்ட தகவல்கள் இழப்பு போன்றவை நடக்கின்றன. இதை கட்டுப்படுத்தவே இந்த புது விதிகள் அமலுக்கு வருகின்றன. ஆனால், அது ஒட்டுமொத்த இது இப்போது பலருக்கு சிக்கலாக மாறிவிட்டது.

டெலிகாம் நிறுவனங்கள் மூலம் கஸ்டமர்களுக்கு அனுப்படுகிற எஸ்எம்எஸ்கள் எங்கிருந்து வருகிறது? யாரு அனுப்புகிறார்? போன்ற விவரங்கள் கண்டறியக்கூடியதாக இருக்க வேண்டும். இப்படி இல்லாதபட்சத்தில் டெலிகாம் நிறுவனங்கள் அந்த எஸ்எம்எஸ்களை (ஓடிபி உள்பட) கஸ்டமர்களுக்கு அனுப்ப கூடாது என்று டிராய் உத்தரவிட்டுள்ளது.

ஆகவே, எஸ்எம்எஸ் டிரேசபிலிட்டி (SMS Traceability) இல்லாமல் டெலிகாம் நிறுவனங்கள் அதை கஸ்டமர்களுக்கு கொடுக்க முடியாது. இதனால், எஸ்எம்எஸ் அனுப்புநர்களை ஒயிட்லிஸ்ட் செய்து கொள்ளுமாறும், அதை நவம்பர் 1ஆம் தேதிக்குள் முடிக்குமாறும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டிருந்தது.

ஆனால், டெலிகாம் நிறுவனங்கள் அவகாசம் கேட்டதால், அந்த விதிகள் டிசம்பர் 1ஆம் தேதிக்கு மாற்றப்பட்ட விட்டன. ஆகவே, அடுத்த சில நாட்களில் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா கஸ்டமர்களுக்கு எஸ்எம்எஸ்கள் வருவதில் தாமதம் ஏற்படலாம் அல்லது டெலிகாம் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நீட்டிக்கப்படலாம் என்று செய்திகள் வந்தன.

ஆகவே, ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா மற்றும் பிஎஸ்என்எல் கஸ்டமர்கள் ஓடிபி மூலம் மட்டுமே பெறும் சேவையில் கவனமுடன் இருக்க வேண்டும். பேங்குகள், ஈ-காமர்ஸ் மற்றும் ஓடிடி ஆப்கள் போன்ற சேவைகளை வழங்கும் நிறுவனங்களானது டெலிகாம் விதிகளுக்கு உட்பட்டு செயல்படவில்லையென்றால் ஓடிபி கிடைப்பதில் தாமதம் ஏற்படும் என்றும் புரிந்து கொள்ளப்பட்டது.

ஆகவே, பேங்கிங் ஓடிபி (Banking OTP), ஆதார் ஓடிபி (Aadhaar OTP) ஆகியவை மேற்கூறிய விதிகளுக்குட்பட்டு அனுப்படுகின்றன. ஆகவே, இவற்றின் மூலம் கஸ்டமர்களுக் அனுப்பப்படும் எஸ்எம்எஸ்களுக்கு எந்தவித சிக்கலும் இருக்காது. அதேபோல ஆதார் ஓடிபி மற்றும் நெட்பேங்கிங் ஓடிபிகளுக்கும் தடை இருக்காது. இதை தவிர மற்றவை விதிகளுக்கு உட்படாமல் இருந்தால், தாமதம் ஏற்படும்.

இந்த விதிகள் மட்டுமல்லாமல், டிசம்பரில் ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு ஆகியவற்றிலும் புது விதிகள் அமலுக்கு வருகின்றன. ஆகவே, ஆதார் கார்டில் டிசம்பர் 14ஆம் தேதிக்குள் ஏதாவது அப்டேட் செய்ய வேண்டி இருந்தால் உடனே முடித்துவிடுங்கள். அதே நேரத்தில் பான் கார்டு வைத்திருக்கும் கஸ்டமர்கள் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் ஆதார் கார்டுடன் லிங்க் செய்து கொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
New TRAI Rules For Jio Airtel Vodafone Idea SIM Cards From December 1 SMS Traceability Change in OTP
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X