Home
News

அக்டோபர் 1 முதல் சிம் கார்டில் புது விதிகள்.. மொபைல் போன் வைத்திருப்போருக்கு முக்கிய அப்டேட்..

ஏர்டெல் (Airtel), ஜியோ (Jio), வோடபோன் ஐடியா (VI), பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனங்கள் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளைச் செயல்படுத்தி வருகின்றன. குறிப்பாக இந்நிறுவனங்கள் கொண்டுவரும் ஒவ்வொரு வசதியும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். இந்நிலையில் ஏர்டெல், ஜியோ, வோடபோன், பிஎஸ்என்எல் நிறுவனங்களுக்கான சிம் கார்டு தொடர்பான விதிமுறைகள் வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் மாறவிருக்கின்றன. இதுகுறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

அதாவது இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் (TRAI) புதிய விதிமுறைகளைக் கொண்டு வந்துள்ளது. இந்த புதிய விதிகளின்படி, தொலைத் தொடர்பு சேவை நிறுவனங்கள் தங்கள் நெட்வொர்க் எந்தெந்த பகுதிகளில் உள்ளது என்ற விவரங்களைத் தெளிவாகக் கொடுக்க வேண்டும். அதேசமயம் ஸ்பேம் அழைப்புகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது இதற்கான உத்தரவை டிராய் பிறப்பித்துள்ளது.

அக்டோபர் 1 முதல் சிம் கார்டில் புது விதிகள்..

குறிப்பாக பயனர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு சிம் கார்டு விதிகளை அவ்வப்போது டிராய் மாற்றி வருகிறது. தற்போது இதன் ஒரு பகுதியாக மற்றொரு விதிமுறையைக் கொண்டுவர உள்ளது. இந்த விதி அமல்படுத்தப்பட்டால் எந்தெந்த பிராந்தியத்தில் எந்த நெட்வொர்க் உள்ளது என்பதைப் பயனர்கள் எளிதாகத் தெரிந்துகொள்வார்கள். மேலும் இது குறித்து போதுமான விவரங்களை வழங்குமாறு ஜியோ, ஏர்டெல், பிஎஸ்என்எல், வோடபோன் ஐடியா நிறுவனங்களை டிராய் கேட்டுள்ளது.

அதாவது ஒரே நிறுவனம் வெவ்வேறு நெட்வொர்க்குகளை வழங்குவதால் ஏற்படும் குழப்பங்கள் மற்றும் பயனர்கள் சந்திக்கும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உதாரணமாகக் கூறவேண்டும் என்றால் 5ஜி நெட்வொர்க் ஒரு பிராந்தியத்தில் கிடைக்கலாம், மற்றொரு பகுதியில் கிடைக்காது. நிறுவனம் ஒன்றாக இருந்தாலும், பிராந்தியத்தைப் பொறுத்து 5ஜி அல்லது 4ஜி சேவையாக கிடைக்கிறது.

எனவே புதிய விதிமுறை அமலுக்கு வந்தபிறகு நெட்வொர்க் நிறுவனங்கள் தங்களது இணையதளங்களில் நெட்வொர்க் தொடர்பான தகவல்களை முழுமையாகக் குறிப்பிட வேண்டும். அதன் மூலம் பயனர்கள் எளிதாகத் தெரிந்துகொள்ள முடியும். குறிப்பாக உங்கள் பகுதியில் ஏர்டெல், ஜியோ நிறுவனங்களின் 5ஜி கிடைக்கிறதா என்பதை அறிய விரும்பினால், நிறுவனங்களின் இணையதளத்தைத் திறந்து உங்கள் இருப்பிடத்தை உள்ளிட்டு நெட்வொர்க் பற்றிய தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம்.

இதுதவிர ஸ்பேஸ் அழைப்புகள் அனைத்து நெட்வொர்க் வாடிக்கையாளர்களுக்கும் மிகப் பெரிய பிரச்சனையாக உள்ளது. இதைத் தடுக்க தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிராய் பரிந்துரைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அக்டோபர் 1 முதல் சிம் கார்டில் புது விதிகள்..

மேலும் பிஎஸ்என்எல் நிறுவனம் 35,000 BSNL 4G தளங்களை வெற்றிகரமாக அமைத்துள்ளதாகச் சமீபத்தில் தெரிவித்தது. குறிப்பாக நாடு முழுவதும் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முழுமையாக 4ஜி சேவை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த டவர்கள் அமைக்கும் பணி முடிந்ததும், 4ஜி தளங்களை 5ஜி நெட்வொர்க்காக மாற்றுவது பிஎஸ்என்எல்-ன் வேலையாக இருக்கும்.

ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்தியதால் தற்போது பல வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் இணைந்து வருகின்றனர். அதன்படி BSNL நிறுவனம் கடந்த 2024 ஜூலை மாதத்தில் மொத்தமாக சுமார் 29.4 லட்சம் புதிய பயனர்களை ஈர்த்துள்ளதாகத் தகவல்கள் வெளியானது. அதேசமயம் ஜியோ, ஏர்டெல், மற்றும் வோடபோன் ஐடியா போன்ற நிறுவனங்களில் உள்ள வாடிக்கையாளர் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதாக TRAI தகவல் தெரிவித்துள்ளது.

photo credit: pmindia.gov.in, pngplay.com

More from GizBot

Best Mobiles in India

English summary
New TRAI Rule Effective October 1: Important Update for Jio, Airtel and Vi Users to Know
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X