தடைகளை உடைத்த ChatGPT! மாணவர்கள், ஊழியர்களை கெடுக்கிறதா? உண்மை என்ன?

|

ChatGPT பயன்படுத்தி வீட்டுப்பாடம் எழுதுகிறார்கள் என புகார்கள் எழுந்த நிலையில் இதை கண்டறியும் படியான புதிய கருவியை OpenAI அறிமுகம் செய்துள்ளது. சமீபகாலமாக எங்கு திரும்பினாலும் ChatGPT என்ற வார்த்தை ஒலிக்கத் தொடங்கி இருக்கிறது.

ChatGPT என்ற AI கருவி

ChatGPT அறிமுகம் செய்த அடுத்த சில நாட்களிலேயே 1 மில்லியன் பதிவிறக்கங்களை பெற்றது. டெக் உலகில் சமீபகாலமாக பெரும் பேசு பொருளாக சாட்ஜிபிடி என்ற வார்த்தை இருந்து வருகிறது. இந்த புதிய AI கருவி ஆனது சிறந்த உரையாடல் திறன்களைக் கொண்டிருக்கிறது. எதிர்காலத்தில் கூகுள் எல்லாம் கிடையாது சாட்ஜிபிடி தான் என்றளவிற்கு டெக் விமர்சகர்கள் கிசுகிசுக்கத் தொடங்கிய நேரத்தில் சில இடங்களில் சாட்ஜிபிடிக்கு தடை விதித்து உத்தரவு பிறக்கப்பட்டது.

தடைகளை உடைத்த ChatGPT! மாணவர்கள், ஊழியர்களை கெடுக்கிறதா? உண்மை என்ன?

AI கருவி மூலம் எழுதப்படும் வீட்டுப்பாடம் மற்றும் மெயில்

இந்த புதிய AI கருவியை மாணவர்கள் தங்கள் வீட்டுப்பாடங்களை எழுதுவதற்கும், அலுவலகத்துக்கு செல்பவர்கள் தங்கள் மின்னஞ்சல்களை உருவாக்குவதற்கும் பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டது. சாட்ஜிபிடி தடை செய்வதற்கு இதுவே பிரதான காரணமாகும்.

சாட்ஜிபிடி தடை செய்ய காரணம் என்ன?

தேர்வுகள், பணிகள் மற்றும் ஆய்வச் சோதனைகளுக்கு AI கருவியை மாணவர்கள் பயன்படுத்தியை அடுத்து, பெங்களூரு பல்கலைக்கழகம் சாட்ஜிபிடிக்கு தடை விதித்துள்ளது.

நியூயார்க் நகரப் பள்ளிகள் மற்றும் நியூயார்க் பொதுப் பள்ளிகள் முன்னதாகவே சாட்ஜிபிடி பயன்பாட்டை தடை செய்தது. ChatGPT போன்ற ஏஐ கருவிகள் மாணவர்களின் விமர்சன சிந்தனை மற்றும் படைப்பாற்றலை குறைக்கிறது போன்ற குற்றச்சாட்டுகள் தடைகளுக்கு காரணமாக முன்வைக்கப்படுகிறது.

அனைத்து AI கருவிகளுக்கும் தடை

ஹிந்துஸ்தான் டைம்ஸ் அறிக்கைப்படி, பெங்களூரு பல்கலைக்கழகம் ChatGPT பயன்பாட்டை மட்டும் தடை செய்யவில்லை. GitHub கோ-பைலட், பிளாக் பாக்ஸ் போன்ற பிற AI அடிப்படையிலான கருவிகளையும் தடை செய்துள்ளது. மாணவர்கள் தேர்வுகளில் அல்லது ஆராய்ந்து முடிக்கும் தங்களது பணிகளை முடிக்க இதுபோன்ற ஏஐ பயன்பாட்டை பயன்படுத்தக் கூடும் என்பதால் தடை செய்துள்ளோம் என பல்கலைக்கழக அதிகாரி ஒருவர் குறிப்பிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடைகளை உடைத்த ChatGPT! மாணவர்கள், ஊழியர்களை கெடுக்கிறதா? உண்மை என்ன?

தடைகளை உடைத்த ChatGPT

இந்த நிலை தொடர்ந்து விடக்கூடாது என்ற கணித்த ChatGPT இன் தாய் நிறுவனம், AI மூலம் உருவாக்கப்பட்ட உள்ளடக்கத்தை கண்டறியும் வகையில் புதிய கருவியை இப்போது அறிமுகப்படுத்தியுள்ளது. உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால், ChatGPT உங்களுக்காக ஏதாவது எழுதி இருந்தால் தற்போது அறிமுகம் செய்துள்ள புதிய கருவியை பயன்படுத்தி அதைக் கண்டறியலாம். எனவே இனி நீங்கள் சாட்ஜிபிடி மூலம் பணியை மேற்கொண்டு அதை சமர்பித்தால் சிக்கலை சந்திக்கவும் வாய்ப்பு இருக்கிறது.

புதிய AI-கண்டறிதல் கருவி

தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய AI-கண்டறிதல் கருவி "The AI Text Classifier" என அழைக்கப்படுகிறது. இது சாட்ஜிபிடி மட்டுமில்லாமல் பிற ஏஐ கருவி மூலம் உரை உருவாக்கப்பட்டிருந்தாலும் அதையும் நுணுக்கமாக கண்டறியும். ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட டெக்ஸ்ட்களை கண்டறிவதற்கான இணைப்பு இங்கே வழங்கப்பட்டிருக்கிறது. இந்த (AI Text Classifier) லிங்க்கை கிளிக் செய்து உள்ளே நுழையலாம்.

கூகுள் கில்லர் என அழைக்கப்படும் சாட்ஜிபிடி

ChatGPT பயன்பாட்டை கூகுள் கில்லர் எனவும் கூகுளுக்கு இணை மாற்று வந்து விட்டது எனவும் சிலர் குறிப்பிடுகின்றனர். நீங்கள் எது தொடர்பான கேள்வியை எழுப்பினாலும் சாட்ஜிபிடி அதற்கு செயற்கை நுண்ணறவு தொழில்நுட்பம் மூலமாக பதிலளிக்கும்.

OpenAI மூலம் உருவாக்கப்பட்ட ChatGPT

ChatGPT என்பது OpenAI மூலம் நவம்பர் 2022 இல் தொடங்கப்பட்ட பயன்பாடு ஆகும். நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு இது செயற்கை நுண்ணறிவு மூலம் விரைவாக பதில் சொல்லும். அதேபோல் சாட்ஜிபிடி மூலமாக மெயில்கள், கவிதைகள் மற்றும் கட்டுரைகள் எழுதலாம். ChatGPT என்பது "ஜெனரேட்டிவ் ப்ரீ-ட்ரெய்னிங் டிரான்ஸ்ஃபார்மர்" என்ற தொழில்நுட்பத்தை குறிக்கிறது. எளிதாக இதன் பயன்பாட்டை கூற வேண்டும் என்றால், சாட்ஜிபிடி உடனான உரையாடல் ஒரு நிபுணரிடம் பேசுவது போன்ற உணர்வை ஏற்படுத்தும்.

தடைகளை உடைத்த ChatGPT! மாணவர்கள், ஊழியர்களை கெடுக்கிறதா? உண்மை என்ன?

பல கேள்விகளுக்கு பதிலளிக்கும் ChatGPT

ChatGPT ஆனது தரவுகளின் அடிப்படையில் நாம் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்கும். எந்தவொரு கேள்வி கேட்டாலும் அதற்கு தகுந்த பதிலை சாட்ஜிபிடி அளிக்கும். அதன்படி 2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என சாட்ஜிபிடி இடம் கேள்வி எழுப்பியதற்கு யார் வெற்றி பெறுவார்கள் என கணிக்க முடியாது அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்கள் எடுக்கும் முடிவுகள், தேர்தல் நேரத்தில் இருக்கும் மக்களின் மன ஓட்டம் உள்ளிட்டவைகளே இதை தீர்மானிக்கும் என பதிலளித்து இருக்கிறது. இதுபோன்ற பல்வேறு கேள்விகளுக்கும் சாட்ஜிபிடி முறையான பதில் அளிப்பதாக கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
New Tool Launched by ChatGPT to Help Detect AI Text: Carefully Do Homework and Write Mail by AI Tool

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X