Home
News

நாளை முதல் டோல் கேட்டில் புதிய விதிகள்.. இந்த தவறு செய்தால் எக்ஸ்ட்ரா கட்டணம்.. இதோ முழு விவரம்..

இந்தியாவில் நெடுஞ்சாலைகளில் செயல்படக்கூடிய சுங்கச்சாவடிகளில் நாளை (ஏப்ரல் 10) முதல் ஒரு முக்கிய விதிமுறை (tollgate new rules) அமலுக்கு வருகிறது. குறிப்பாக வாகன ஓட்டிகள் இந்த புதிய மாற்றத்தை தெரிந்து வைத்துக் கொள்ளவில்லை என்றால் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். சரி இப்போது இது குறித்த விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

அதாவது மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் சுங்க கட்டணத்தை செலுத்தும் நடைமுறையில் ஒரு முக்கியமான விதிமுறையை கொண்டுவந்துள்ளது. அதன்படி இந்தியாவில் நெடுஞ்சாலைகளை மேலாண்மை செய்யக்கூடிய நிறுவனங்களுக்கு வாகன ஓட்டிகள் சுங்க கட்டணம் செலுத்த வேண்டும். அதுவும் இந்த சுங்க கட்டணம் தற்போது ஃபாஸ்டேக் (FASTag) நடைமுறையில் செலுத்தப்படுகிறது.

நாளை முதல் டோல் கேட்டில் புதிய விதிகள்..  இதோ முழு விவரம்..

குறிப்பாக வாகனங்களில் ஃபாஸ்டேக் ஒட்டப்பட்டிருக்கும் சுங்கச்சாவடிகளை (toll) கடக்கும்போது அது தானாகவே ஸ்கேன் செய்யப்பட்டு இணைக்கப்பட்ட வங்கி கணக்கில் இருந்து சுங்க கட்டணம் எடுத்துக்கொள்ளப்படும். ஆனாலும் சில வாகன ஓட்டிகள் இன்னும் ஃபாஸ்டேக் நடைமுறைக்கு மாறவில்லை. அதாவது இன்னும் ரொக்கமாக சுங்கச்சாவடிகளில் கட்டணத்தை செலுத்துபவர்களும் இருக்க தான் செய்கின்றனர்.

தற்போது இந்த விஷயத்தில் தான் மிகப்பெரிய மாற்றம் ஒன்று அமலுக்கு வருகிறது. அதன்படி நாளை (ஏப்ரல் 10) முதல் சுங்கச்சாவடிகளில் ரொக்கமாக சுங்க கட்டணத்தை செலுத்த முடியாது. மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் இது தொடர்பான் விதிகளில் திருத்தத்தை கொண்டுவந்துள்ளது. அதன்படி ஏப்ரல் 10 முதல் ஃபாஸ்டேக் மற்றும் யுபிஐ (UPI) போன்ற டிஜிட்டல் நடைமுறைகளில் மட்டுமே கட்டணம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருவேளை சுங்கச்சாவடி கடக்க கூடிய வாகனங்களில் ஃபாஸ்டேக் இல்லை என்றாலும் யுபிஐ பயன்படுத்தி சுங்க கட்டணத்தை செலுத்த முடியும். ஆனாலும் வழக்கமான கட்டணத்தை விட 1.25 மடங்கும் கூடுதலாக பணம் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேசமயம் ரொக்கமாக பணம் கொடுத்தால் சுங்கச்சாவடியில் இருப்பவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆகவே நீங்கள் உங்களது வாகனத்தில் ஃபாஸ்டேக் இருப்பதையும் அந்த கணக்கில் பணம் இருப்பதையும் உறுதி செய்ய கொள்ளுங்கள். இல்லையெனில் யுபிஐ கணக்கில் பணம் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இந்த இரண்டு வழிகளும் இல்லை என்றால் ரொக்கமாக பணம் கொடுத்தால் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

அதேபோல் சுங்கச்சாவடியில் செல்லும் வாகனம் ஃபாஸ்டேக், யுபிஐ என இரண்டு வழிகளிலும் கட்டணம் செலுத்தவில்லை என்றால் உங்களது மொபைல் எண்ணுக்கு கட்டணம் குறித்த தகவல்கள் அனுப்பி வைக்கப்படும். இந்த கட்டணத்தை நீங்கள் மூன்று நாட்களுக்குள் செலுத்த வேண்டும். இல்லை என்றால் வழக்கமான கட்டணத்தை விட இரண்டு மடங்கு தொகையை செலுத்த வேண்டியிருக்கும்.

நாளை முதல் டோல் கேட்டில் புதிய விதிகள்..  இதோ முழு விவரம்..

ஆகவே தான் வாகன ஓட்டிகள் ஃபாஸ்டேக் கணக்கு மற்றும் அதில் பணம் இருப்பதை உறுதி செய்து அதன்பின்னர் பயணம் செய்வது நல்லது. இல்லையெனில் யுபிஐ கணக்கில் பணம் இருப்பதை உறுதிசெய்து கொள்ளவும்.

மேலும் கார், ஜீப், வேன் போன்ற தனியார் வாகனங்களுக்கு ஓராண்டுக்கான ஃபாஸ்டேக் பாஸ் வழங்கப்படுகிறது. இதன் விலை சமீபத்தில் உயர்த்தப்பட்டுள்ளது. முன்பு ரூ.3000 இருந்த ஃபாஸ்டேக் பாஸ் கட்டணம் இப்போது ரூ.3075-ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது குறிப்பாக இந்த பாஸ் இருந்தால் ஒரு வருடத்திற்கு எந்த சுங்க கட்டணமும் செலுத்தாமல் செல்லலாம்

More from GizBot

Best Mobiles in India

English summary
New toll rules kick in tomorrow: no more cash payments: Check Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X