Home
News

இது தெரியாம TOLL GATE பக்கம் போயிடாதீங்க.. செல்லாது.. புதுசு வாங்கிட்டு வாங்க.. FASTag-ல் புது கெடுபிடி!

என்எச்ஏஐ (NHAI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (National Highways Authority of India) அமல்படுத்தி உள்ள புதிய விதியை (New Rule) பற்றி தெரியாமல் டோல் கேட்ட பக்கம் சென்றுவிடாதீர்கள். பின்னர் நீங்கள் தான் அவஸ்தைப்படுவீர்கள்!

முன்னரே அறிவிக்கப்பட்டபடி.. 2024 ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் வாகன ஓட்டிகளுக்கான "ஒரு வாகனம், ஒரு ஃபாஸ்டாக்" (One Vehicle, One FASTag) என்கிற புதிய விதிமுறை அமலுக்கு வந்தது. பல வாகனங்களுக்கு ஒரே ஒரு ஃபாஸ்டாக்-ஐ பயன்படுத்துவதுஅல்லது ஒரு குறிப்பிட்ட வாகனத்துடன் பல ஃபாஸ்டாக்-களை இணைப்பதை தடுக்கும் நோக்கத்தின் கீழ் இந்த புதிய விதிமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.

இது தெரியாம TOLL GATE பக்கம் போயிடாதீங்க.. FASTag-ல் புது கெடுபிடி!

முன்னதாக.. இந்த புதிய விதிமுறைக்கான கெடு மார்ச் 15 ஆம் தேதியாக இருந்தது. பின்னர் - தடை காரணமாக பேடிஎம் ஃபாஸ்டாக் (Paytm FASTag) பயனர்கள் எதிர்கொண்ட பிரச்சனைகளை கருத்தில் கொண்டு - இதற்கான கடைசி தேதி 2024 மார்ச் 31 ஆக மாற்றப்பட்டது. இப்போது எந்த காலக்கெடு நீட்டிப்பும் இல்லாமல்.. சொன்னபடியே அமலுக்கும் வந்துள்ளது.

ஒட்டுமொத்தமாக.. மல்ட்டிபிள் ஃபாஸ்டாக்குகள் (Multiple FASTags) ஆனது ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் வேலை செய்யாது. ஒரு வாகனத்திற்கு பல ஃபாஸ்டாக்குகளை கொண்டு உள்ளவர்கள் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அனைத்தையும் பயன்படுத்த முடியாது. இதன் மூலம் மின்னணு கட்டண வசூல் அமைப்பின் செயல்திறனை மேம்படுத்த முடியும் என்றும், சுங்கச்சாவடிகளில் தடையற்ற இயக்கத்தை வழங்க முடியும் என்றும் என்எச்ஏஐ நம்புகிறது.

இது தெரியாம TOLL GATE பக்கம் போயிடாதீங்க.. FASTag-ல் புது கெடுபிடி!

ஒருவேளை.. நீங்கள் இன்னமும் உங்கள் ஃபாஸ்டாக்கில் கேஒய்சி விவரங்களை அப்டேட் செய்யவில்லை என்றால்.. அதற்கான காலக்கெடு மார்ச் 31 ஆம் தேதியோடு முடிந்துவிட்டது என்பதும் இங்கே குறிப்பிடத் தக்கது. ஃபாஸ்டாக் கேஒய்சி விவரங்களை புதுப்பிக்க தவறினால், உங்களுடைய ஃபாஸ்டாக் அக்கவுண்ட் ஆனது செயலிழக்கலாம் அல்லது பிளாக் லிஸ்டில் சேர்க்கப்படலாம்.

ஆன்லைன் வழியாக ஃபாஸ்டாக் கேஒய்சி அப்டேட்-ஐ அப்டேட் செய்வது எப்படி?
1. இதை செய்ய முதலில் நீங்கள் அதிகாரப்பூர்வ ஐஎச்எம்சிஎல் ஃபாஸ்டாக் போர்ட்டலை (IHMCL FASTag Portal) அணுக வேண்டும்.
2. குறிப்பிட்ட போர்ட்டலுக்குள் நுழைய, உங்கள் மொபைல் நம்பரை பயன்படுத்தி லாக்-இன் செய்ய வேண்டும்.
3. லாக்-இன் ஆனதும் போர்ட்டலுக்குள் மை ப்ரொஃபைல் (My Profile) என்கிற விருப்பத்தை தேடி கண்டறிந்து, அதை கிளிக் செய்யவும்.

இது தெரியாம TOLL GATE பக்கம் போயிடாதீங்க.. FASTag-ல் புது கெடுபிடி!

4. அதனை தொடர்ந்து கேஒய்சி ஸ்டேட்டஸை (KYC status) சரிபார்க்கவும். இப்போது கேஒய்சி டேப்-ஐ (KYC Tab) கிளிக் செய்து, கஸ்டமர் டைப் (Customer Type) என்பதை தேர்ந்தெடுக்கவும்.
5. கடைசியாக முகவரி உடன் கூடிய '​​அட்ரெஸ் ப்ரூஃப்' ஆவணம், உங்களுடைய அடையாள சான்று உள்ளிட்ட தேவையான ஆவணங்களை, தேவையான இடங்களில் சேர்த்து, செயல்முறையை முடிக்கவும்.

ஆன்லைன் / ஆப்லைன் வழியாக செய்யும் ஃபாஸ்டாக் கேஒய்சி அப்டேட்டிற்கு என்னென்ன ஆவணங்கள் தேவைப்படும்?
1. வாகனப் பதிவுச் சான்றிதழ் (RC - Vehicle Registration Certificate)
2. உரிமையாளரின் அடையாளச் சான்று (ஆதார் அட்டை, பான் கார்டு, பாஸ்போர்ட்)
3. உரிமையாளரின் முகவரி சான்று (ஓட்டுநர் உரிமம் அல்லது முகவரியுடன் கூடிய அரசாங்க ஆவணம்)
4. பாஸ்போர்ட் சைஸ் போட்டோ (வாகன உரிமையாளரின் சமீபத்திய புகைப்படமாக இருக்க வேண்டும்)

சுமார் 98% மற்றும் 8 கோடிக்கும் அதிகமான பயனர்களின் ஊடுருவல் விகிதத்துடன் ஃபாஸ்டாக் ஆனது மின்னணு கட்டண வசூல் முறையில் ஒரு பெரும் புரட்சியையே ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள "ஒரு வாகனம், ஒரு ஃபாஸ்டாக்" விதிமுறையானது.. இந்த புரட்சியை அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்த்தும் என்பதில் சந்தேகமே வேண்டாம்!

More from GizBot

Best Mobiles in India

English summary
New Toll Gate Rule 2024 One Vehicle One FASTag Comes Into Effect Multiple FASTags Will Not Accepted
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X