TRENDING ON ONEINDIA
-
இன்றே முடிவுக்கு வருமா நாராயணசாமி தர்ணா.. பேடியுடன் பேச்சு
-
ரூ.15 லட்சம் அல்ல... இந்தியர்கள் அனைவருக்கும் தலா ரூ.50 ஆயிரம்... மோடியின் திடீர் முடிவுக்கு காரணம் இதுதான்
-
தயாரிப்பாளர், இயக்குநர் இடையே மோதல்: '96' தெலுங்கு ரீமேக்கில் சிக்கலோ சிக்கல்
-
கிருஷ்ணரின் கையில் இருக்கும் மகிமை வாய்ந்த பாஞ்சன்ய சங்கு அவருக்கு எப்படி கிடைத்தது தெரியுமா?
-
பாகிஸ்தான் இணையத்தை அதிரடியாக முடக்கி தெறிக்கவிட்ட ஹேக்கர்கள்.!
-
இம்ரான் கான் வாயைத் திறந்து பேசமாட்டாரா? எதிர்ப்பு நடவடிக்கை எடுத்த இந்திய கிரிக்கெட் மைதானங்கள்!
-
பாகிஸ்தான் மீது இந்தியா தொடுத்த வர்த்தகப் போர்: இறக்குமதி பொருட்களுக்கு 200% வரி - உடனடி அமல்
-
கோடியில் புரள்பவர்களின் ரகசியம் இதுதான்! இந்த பத்து கோவில்களுக்கும் ஒரு முறை சென்றால் போதுமாம்...
உலகின் மிகவும் பிரபலமான மொபைல்களில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் முக்கிய பங்கு வகிப்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இதற்கு முக்கிய காரணம் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்த எளிமையாக இருப்பதே ஆகும்.
ஆமை வேகத்தில் ஆண்ட்ராய்டு, முயல் வேகத்திற்கு மாற்ற..?!
மேலும் அவைகளை பயன்பாட்டிற்கு ஏற்ப கஸ்டமைஸ் செய்து கொள்ள முடியும். இதோடு உங்களது ஆண்ட்ராய்டு கருவியினை மேலும் பாதுகாப்பாகவும் அதிக நேரம் பேட்டரி பேக்கப் பெற என்ன செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..
கூகுள் நௌ
கூகுள் நௌ ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் உதவியாள் செயலி. இதில் உங்களுக்கு விருப்பமானவற்றை குறிப்பிட்டு விட்டால் நீங்கள் பதிவு செய்த தகவல்களுக்கு ஏற்ப நோட்டிபிகேஷன்களை வழங்கும். இதில் உங்களுக்கு தெரிய வேண்டிய பங்கு சந்தை நிலவரம், விளையாட்டு என அனைத்திற்கும் தகவல்களை நோட்டிபிகேஷன் வடிவில் பெற முடியும்.
லான்ச்சர்
ஆண்ட்ராய்டு ஸ்டாக் லான்ச்சர் மற்றும் லாக் ஸ்கிரீன் செயலிகள் உங்களது ஆண்ட்ராய்டு கருவியின் இன்டர்ஃபேஸ்களை மாற்ற உதவியாக இருக்கும்.
பவர் சேவிங் மோடு
பேட்டரி சேவிங் மோடு மூலம் பேட்டரி பேக்கப் வழங்கும் நேரத்தினை வெகுவாக அதிகரிக்க முடியும்.
பேட்டரி
பயணங்களின் போது கூடுதல் பேட்டரி எடுத்து செல்வது ஆபத்தான நேரங்களில் உதவியாக இருக்கும். பெரும்பாலான ஆண்ட்ராய்டு கருவிகள் கழற்ற கூடிய பேட்டரி கொண்டிருப்பதால் சார்ஜ் தீர்ந்த பேட்டரியை மாற்றுவதும் எளிமையாகவே இருக்கும்.
கூகுள் க்ரோம்
ஆண்ட்ராய்டு கருவிகளில் வழங்கப்பட்டிருக்கும் கூகுள் க்ரோம் செயலியில் சைன் இன் செய்வதன் மூலம் உங்களது பாஸ்வேர்டு மற்றும் சேவைகள் அனைத்தும் சின்க் செய்யப்பட்டு விடும்.
செயலி
ஆண்ட்ராய்டு கருவியில் ஃபோல்டர்களை வைத்து சமூக வலைதளம், விளையாட்டு என குறிப்பிட்ட செயலிகளை ஃபோல்டர்களில் வைத்து கொள்ளலாம்.
கீபோர்டு
கூகுள் ப்ளே ஸ்டோரில் கிடைக்கும் கீபோர்டு செயலிகளை கொண்டு டைப் செய்யும் முறையை மேலும் எளிமையாக்கி கொள்ள முடியும்.
பேன்ட்வித்
க்ரோம் பயன்படுத்துவதன் மூலம் டேட்டா பயன்பாட்டினை குறைக்க முடியும், இது தேவையில்லாதவற்றை அகற்றி விடுவதோடு தகவல்களை இணைய பக்க வடிவில் வழங்குவதால் அதிகபடியான டேட்டா குறைக்கப்படுகின்றது.
கூகுள் ஆத்தென்டிகேட்டர்
கூகுள் ஆத்தென்டிகேட்டர் உங்களது கூகுள் அக்கவுன்ட்களுக்கு இரு மடங்கு பாதுகாப்பு வழங்குகின்றது. இதனால் ஒவ்வொரு முறை நீங்கள் லாக் இன் செய்யும் போதும் பிரத்யேக கடவு சொல் அனுப்பப்படும். இதனால் பாதுகாப்பு இரட்டிக்கப்படுகின்றது.
டீஃபால்ட் ஆப்
பல்வேறு தினசரி பயன்பாடுகளை சிரமம் இன்றி பயன்படுத்த பல்வேறு டீபால்ட் செயலிகள் வழங்கப்படுகின்றன, இருந்தாலும் சில செயலிகளை கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். இதன் மூலம் பல்வேறு உபயோகங்களுக்கும் கருவியின் வேகம் குறையாமல் இருக்கும்.
தமிழ் கிஸ்பாட் :
மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!