WhatsApp மொபைல் நம்பர்களுக்கு வந்த புதிய மாற்றம்.. இனி ஒருத்தருக்கும் அனுமதி இல்ல.. டைட் செக்யூரிட்டி!
வாட்ஸ்அப் மொபைல் நம்பர்களுக்கான புதிய மாற்றமாக 'போன் நம்பர் ப்ரைவஸி' (Phone Number Privacy) என்கிற புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒரே ஒரு கிளிக்கில் "டைட் செக்யூரிட்டியை" வழங்கும் இந்த புதிய அம்சத்தின் பயன் என்ன? இது யாருக்கெல்லாம் கிடைக்கும்? இதோ விவரங்கள்:
போன் நம்பர் ப்ரைவஸி என்கிற புதிய அம்சமானது வாட்ஸ்அப் கம்யூனிட்டீஸ் மெம்பர்களால் (WhatsApp Communities Members) மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு அட்டகாசமான பாதுகாப்பு அம்சம் (Security Feature) ஆகும். முன்னதாக சோதனையில் இருப்பதாக கூறப்பட்ட இந்த புதிய அம்சம் தற்போது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பீட்டா வெர்ஷன்களில் அணுக கிடைக்கிறது.

இந்த அம்சத்தின் வழியாக, ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டியின் கீழ் நடக்கும் உரையாடல்களில் நீங்கள் கலந்துகொள்ளும் போது, யார் என்றே தெரியாத மற்ற கம்யூனிட்டி மெம்பர்களிடம் இருந்து உங்களின் பெயர் மற்றும் மொபைல் நம்பரை மறைக்க முடியும்; கூடவே அனைத்து மெசேஜ்களுக்கும் ரியாக்ட் செய்யவும் முடியும்.
இந்த அம்சம் எப்படி வேலை செய்யும் என்பதை காட்டும் ஸ்கிரீன் ஷாட் ஒன்றும் - வாட்ஸ்அப்பீட்டாஇன்ஃபோ வலைத்தளம் வழியாக - வெளியாகியுள்ளது. போன் நம்பர் ப்ரைவஸி அம்சமானது கம்யூனிட்டி அனௌன்ஸ்மென்ட் க்ரூப் இன்ஃபோவின் (Community announcement group info) கீழ் அணுக கிடைக்கும்.
இந்த அம்சத்தை இயக்கும் போது, கம்யூனிட்டி அட்மின் மற்றும் ஏற்கனவே உங்களுடைய மொபைல் நம்பரை சேமித்து வைத்திருக்கும் மெம்பர்களை தவிர மற்ற மெம்பர்களிம் இருந்து உங்கள் மொபைல் நம்பர் மறைக்கப்படும். கம்யூனிட்டி அட்மின்களுக்கு உங்களுடைய மொபைல் நம்பர் ஏற்கனவே தெரியும் என்பதால், இந்த அம்சம் கம்யூனிட்டி மெம்பர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
இதுதவிர்த்து, சொந்த விருப்பத்தின்கீழ் குறிப்பிட்ட கம்யூனிட்டி மெம்பர்களுடன் உங்களுடைய மொபைல் நம்பரை பகிர்ந்துகொள்ளவும் விருப்பமும் இருக்கும். ஒட்டுமொத்தமாக வாட்ஸ்அப்பின் இந்த புதிய போன் நம்பர் ப்ரைவஸி அம்சமானது, உங்கள் மொபைல் நம்பரை, கம்யூனிட்டியில் உள்ள மற்ற மெம்பர்களின் பார்வையில் பாடாமல் இருப்பதை உறுதி செய்கிறது.
முன்னரே குறிப்பிட்டபடி, இந்த அம்சம் தற்போது வரையிலாக அனைத்து வாட்ஸ்அப் கம்யூனிட்டீஸ் பயனர்களுக்கும் வெளியிடப்படவில்லை. வாட்ஸ்அப்பீட்டாஇன்ஃபோவின் (WABetainfo) கூற்றுப்படி, இது ஆண்ட்ராய்டு வெர்ஷன் 2.23.14.19 வாட்ஸ்அப் பீட்டா மற்றும் ஐஓஎஸ் 23.14.0.70 பீட்டா வெர்ஷன்களை பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது.
ஒருவேளை நீங்களும் இந்த புதிய அம்சத்தை முயற்சிக்க விரும்பினால் கூகுள் பிளே ஸ்டோர், ஆப்பிள் ஆப் ஸ்டோர் அல்லது டெஸ்ட்ஃபிளைட்டில் (TestFlight) இருந்து வாட்ஸ்அப்பின் லேட்டஸ்ட் பில்ட்-ஐ பதிவிறக்கம் செய்யலாம். அறியாதோர்களுக்கு வாட்ஸ்அப் கம்யூனிட்டீஸ் என்றால், ஒரே மாதிரியான நோக்கங்களை கொண்ட வெவ்வேறு வாட்ஸ்அப் க்ரூப்களை "ஒரே குடையின்" கீழ் கொண்டுவந்து, ஒழுங்கமைத்து ஒன்றிணைக்கும் இடமாகும்.


Click it and Unblock the Notifications