இது Robot-ஆ இல்ல அலாவுதீன் பூதமா? சொன்ன கட்டளையை எல்லாம் டக்கு-டக்குனு உடனே செய்யுது!
உங்கள் வீட்டில் துணிகளை துவைக்கவும் மற்றும் உங்கள் வீட்டை சுத்தம் செய்ய உதவும் ஒரு தனித்துவமான ரோபோவை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். இந்த ரோபோவை பிரின்ஸ்டன் மற்றும் கொலம்பியா போன்ற பல்வேறு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் சேர்ந்து உருவாக்கியுள்ளனர்.
இது உங்கள் வீட்டை தினசரி சுத்தம் செய்வதற்கு ஏற்றது. இது "TidyBot" என்று அழைக்கப்படுகிறது. இந்த ரோபோட் தரையிலிருந்து பொருட்களை திறம்பட எடுத்து, குறிப்பிட்ட கட்டளைகளின் அடிப்படையில் அவற்றைச் சார்ந்த இடத்தில் திறம்பட அடுக்கி வைக்கிறது. உண்மையை சொல்ல போனால், இந்த ரோபோட் ஒரு அலாவுதீன் பூதம் போல செயல்படுகிறது. இது என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் கட்டளையிட்டால் போதும், அதை இது நிறைவேற்றிவிடும்.

TidyBot இன் படைப்பாளிகள் முதலில் சில கட்டளைகளைக் கொண்ட "டெக்ஸ்ட் பேஸ் பெஞ்ச்மார்க் டேட்டாசேட்டை" உருவாக்கினர். பின்னர், GPT-3 இந்த வழிமுறைகளைப் பின்பற்றும்படி கேட்டுக்கொண்டது. இதன்படி, "மஞ்சள் சட்டைகள் டிராயரில் வைக்கவும், டார்க் நிற சட்டைகளை அலமாரிகளுக்குள் வைக்கவும்" என்ற பல தரப்பட்ட கட்டளைகளை இந்த ரோபோட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் இன்னும் பல கட்டளைகள் LLM மூலம் வழங்கப்பட்டுள்ளது.
அதில், வெளிர் நிற ஆடைகள் டிராயரில் செல்ல வேண்டும் மற்றும் டார்க் நிற ஆடைகள் அலமாரியில் செல்ல வேண்டும், பிளாட்டிக் குப்பைகளை தனியாக அடுக்கவும், சிதறி கிடக்கும் பொருட்களை எடுத்துவைக்கவும், என்று பல கட்டளைகளை இந்த ரோபோட் மிகவும் சிறப்பாக செய்து முடித்து. இந்த ரோபோட் வெவ்வேறு 24 மாதிரியான அறைகளில் சோதனை செய்யப்பட்டுள்ளது.

எல்லா அறைகளிலும் இந்த டிட்டிபாட் (TidyBot) 91.2% கட்டளைகளை இது மிகவும் நேர்த்தியாக கையாண்டு, மிகவும் சரியாக விதிக்கப்பட்ட கட்டளைகளை செய்து முடித்துள்ளது. இந்த ரோபோட் எல்லா பொருட்களையும் எளிதில் அடையாளம் காண்கிறது. பேப்பர், பிளாஸ்டிக், பழங்கள், காய்கறிகள், ஸ்னாக்ஸ் பாக்கெட்கள், துணிகள், பர்ஸ், சாவி, காஃபி மக் போன்ற பல பொருட்களை இந்த ரோபோட் மிகவும் எளிதாக கையாள்கிறது.
TidyBot ரோபோவால் தரையில் உள்ள துணிகளை திறம்பட வரிசைப்படுத்தி, சலவைத் தொட்டிகளில் போடுவதோடு, குப்பைத் தொட்டிகளில் போடுவதற்கு முன்பு குப்பைகளை வரிசைப்படுத்தவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதே வேளையில், TidyBot அனைவரின் தேவைகளையும் பூர்த்தி செய்ய இன்னும் பல சோதனையோட்டங்களை மேற்கொள்ள வேண்டியதுள்ளது.
இந்த ரோபோட் சந்தைக்கு வர இன்னும் சில மாதங்கள் அல்லது சில ஆண்டுகள் எடுத்துக்கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது. இது நிச்சயமாக பேச்சிலர்ஸ்களின் வாழ்க்கையை மாற்றிவிடும். குறிப்பாக குழந்தைகள் இருக்கும் வீடுகளில் சிதறிக்கிடக்கும் பொருட்களை கையாள இந்த ரோபோட் சிறந்தது. இந்த ரோபோட்டை நிச்சயமாக இல்லாதாரிகள் பெரிதும் விரும்புவார்கள் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.
இந்த ரோபோட்டை போல, வேற எந்த வேலையை செய்து முடிக்க உங்களுக்கு ஒரு ரோபோட் தேவை என்பதை கமெண்டில் பதிவிடுங்கள். அதற்கென்று, பிரத்தியேகமாக எதுவும் ரோபோட் இருக்கிறதா? அல்லது தயார் செய்யப்பட்டு வருகிறதா? என்று உங்களுக்கு தெரியப்படுத்துகிறோம்.


Click it and Unblock the Notifications








