Home
News

புது Telecom ரூல்ஸ்.. ஜனவரி 1 முதல் அமல்.. 5G சேவைக்காக Jio, Airtel, Vi, BSNL-க்கு வரும் முக்கிய மாற்றம்!

2025 ஆம் ஆண்டு தொடங்கியதுமே, இந்திய டெலிகாம் துறையில் ஒரு பெரிய விதி மாற்றம் நடைமுறைக்கு வருகிறது. இது ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio), பார்தி ஏர்டெல் (Bharti Airtel), வோடாபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற தனியார் நிறுவனங்களை மட்டுமின்றி அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் (BSNL) உட்பட, நாட்டிலுள்ள அனைத்து தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களையும் "நேர்மறையாக" பாதிக்க உள்ளது!

2025 ஜனவரி 1 ஆம் தேதி முதல் அனைத்து மாநிலங்களும் ரோ (RoW) என்று சுருக்கமாக அழைக்கப்படும் ரைட் ஆஃப் வே (Right of Way) தொடர்பான புதிய விதிகளை நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும் என்று டிராய் (TRAI - Telecom Regulatory Authority of India) உத்தரவிட்டுள்ளது. ரைட் ஆஃப் வே என்றால் என்ன? இதில் கொண்டுவரப்படும் விதி மாற்றத்திற்கும் 5ஜி சேவைக்கும் என்ன தொடர்பு? இதோ விவரங்கள்:

புது Telecom ரூல்ஸ்.. ஜனவரி 1 முதல் அமல்!

எகனாமிக் டைம்ஸ் (ET) அறிக்கையின்படி, தொலைத்தொடர்பு சட்டத்தின் (Telecommunications Act) கீழ் அறிவிக்கப்பட்டுள்ள புதிய ரோ விதிகள் 2025 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வரும், இதன்கீழ் ஆப்டிகல் ஃபைபர் லைன்கள் (Optical fiber lines) மற்றும் டெலிகாம் டவர் (Telecom tower) இன்ஸ்டாலேஷன்கள் மேம்படுத்தப்படும்.

இதுகுறித்து தொலைத்தொடர்புத் துறை (Department of Telecommunications - DoT) செயலாளர் ஆன நீரஜ் மிட்டல் எழுதிய கடிதத்தில், ரோ கொள்கைகளில் வரவிருக்கும் மாற்றங்கள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்குமாறு மாநிலங்களை கேட்டு கொண்டார். மேலும் புதிய மற்றும் சீரான ரோ விதிகள் நாட்டில் தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பை (Telecom infrastructure) மேம்படுத்தும் என்றும், இந்தியா முழுவதும் 5ஜி தொழில்நுட்பத்தை (5G Technology) வேகமாக வெளியிடுவதற்கும் உதவும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ரோ விதி (RoW Rule) என்றால் என்ன? ரோ விதி என்பது பொது அல்லது தனியார் சொத்தில் மொபைல் டவர்கள் (Mobile Towers) மற்றும் பிற தொலைத்தொடர்பு உள்கட்டமைப்புகளை நிறுவுவதற்கான தரங்களை கட்டாயப்படுத்தும் வழிமுறைகளின் தொகுப்பாகும். பொது பாதுகாப்பு மற்றும் வெளிப்படைத்தன்மைக்கு முன்னுரிமை அளிப்பதால், சொத்து உரிமையாளர்கள் மற்றும் தொலைத்தொடர்பு வழங்குநர்கள் இருவருமே ரோ விதியை கட்டாயமாக பின்பற்ற வேண்டும்.

புதிய ரோ விதிகளானது மேற்கூறப்பட்ட இன்ஸ்டாலஷன்களுக்கான அனுமதிகளை பெறுவதற்கான செயல்முறையை எளிதாக்குகிறது. கூடவே வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனை உறுதிப்படுத்து டிஜிட்டல் பதிவுகளை பராமரிக்க வலியுறுத்துகிறது. இந்த புதிய ரோ விதிகள் ஜியோ, பிஎஸ்என்எல், பார்தி ஏர்டெல் மற்றும் விஐ உள்ளிட்ட அனைத்து இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்களின் வளர்ச்சியையும் சாதகமாக பாதிக்கும் (Positively affect) என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

இதேபோல ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல், வோடாபோன் ஐடியா மற்றும் பிஎஸ்என்எல் என இந்தியாவில் உள்ள அனைத்து டெலிகாம் நிறுவனங்களுக்கும் பொருந்தக்கூடிய சில புதிய விதிகளும் டிசம்பர் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன. ஒடிபி (OTP) உட்பட, கமர்சியல் மெசேஜ்களை 'ட்ரேஸ்' செய்யும் நடைமுறையை அமலுக்கு கொண்டுவருமாறு டெலிகாம் நிறுவனங்களுக்கு டிராய் உத்தரவிட்டுள்ளது.

மெசேஜ் டிரேசிபிலிட்டி (Message traceability) தொடர்பான ட்ராயின் இந்த புதிய விதி ஆனது வங்கிகள், இ-காமர்ஸ் தளங்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் உட்பட அனைத்துக்கும் பொருந்தும். இதற்கு இணங்க தவறிய நிறுவனங்கள் 2024 நவம்பர் 30 ஆம் தேதி வரையிலாக தினசரி நினைவூட்டல்களை பெறுவார்கள் என்றும், 2024 டிசம்பர் 1 ஆம் தேதி முதல், வரையறுக்கப்படாத அல்லது பொருந்தாத டெலிமார்கெட்டர் செயின்களை கொண்ட மெசேஜ்கள் நிராகரிக்கப்படும் என்றும் டிராய் அறிக்கை வெளியிட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
New Telecom Rules Change in RoW Rule From TRAI for Jio Airtel Vi BSNL Effect From 2025 January 1
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X