Home
News

Jio, Aitel-க்கு டாட்டா.. அடுத்த 180 நாட்களில் வருது ஆப்பு... BSNL 4ஜி நெருக்கடி.. கட்டம் கட்டும் இந்திய அரசு!

பிஎஸ்என்எல்லுக்கு சுக்கிரன் உச்சத்தில் இருக்குறார் போல என்று சமூக ஊடகங்களில் வரும் மீம்கள் உண்மையானாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளை பார்த்தால் அப்படித்தான் இருக்கிறது. ஏற்கனவே, ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களின் கட்டணங்கள் உயர்ந்த நேரத்தில் புதிய திட்டங்களை களமிறக்கியது மட்டுமல்லால், இதென்ன விலை இவ்வளவு கம்மியா இருக்கே என்று டெலிகாம் கஸ்டமர்களின் மனதில் கேள்வியையும் எழுப்பிவிட்டது. இந்த நேரத்தில் அடுத்த 180 நாட்களில் டெலிகாம் மார்கெட்டில் மற்றொரு சம்பவத்தை மத்திய அரசு செய்ய இருக்கிறது.

ஜியோ (Jio), ஏர்டெல் (Jio) நிறுவனங்கள் கட்டணத்தை வழக்கம் போலத்தான் உயர்த்தின. ஆனால், இப்போது டெலிகாம் கஸ்டமர்கள் வழக்கம்போல அதை ஏற்று கொள்ளவில்லை என்றே சொல்ல வேண்டும். ஏனென்றால், எந்த நிறுவனத்தில் எவ்வளவு கட்டணம் இருக்கிறது? இந்த நிறுவனத்துக்கும் அந்த நிறுவனத்துக்கும் எவ்வளவு மாறுபடுகிறது என்பதை அலசி ஆராயத் தொடங்கிவிட்டனர்.

Jio, Aitel-க்கு டாட்டா.. அடுத்த 180 நாட்களில் வருது ஆப்பு... BSNL 4ஜி!

இதனாலேயே மத்திய அரசின் கீழ் செயல்படும் பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்தின் திட்டங்கள் மீது ஒட்டுமொத்த டெலிகாம் கஸ்டமர்களின் கவனமும் சென்றுவிட்டது. ஏனென்றால், மாதத்துக்கு வெறும் ரூ.118 கொடுத்தால், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 10 ஜிபி டேட்டா போன்ற சலுகைகளை 28 நாட்களுக்கு வழங்குகிறது. இதுவே மற்ற நிறுவனங்களில் குறைந்தது ரூ.199 ரீசார்ஜ் செய்ய வேண்டி இருக்கும்.

வெறும் ரூ.797 திட்டத்தில் 300 நாட்களுக்கு வாய்ஸ் கால்கள் சலுகையை பிஎஸ்என்எல் நிறுவனம் கொடுக்கிறது. இப்படி ஏகப்பட்ட சலுகைகள் கிடைக்கின்றன. பிஎஸ்என்எல் 4ஜி சேவைகளும் பல்வேறு மாநிலங்களில் தொடங்கிவிட்டன. வரும் மாதங்களில் இந்தியா முழுவதும் சேவைகளை கொண்டுவருவதற்காக பணிகளும் மும்முரமாக நடந்து வருகின்றன.

கடந்த ஓரிரு வாரங்களில் மட்டும் 25 லட்சத்துக்கும் மேலான புதிய கஸ்டமர்களை பிஎஸ்என்எல் நிறுவனம் பெற்றிருக்கிறது. இதில் பெரும்பாலும் ஜியோ, ஏர்டெல் கஸ்டமர்களே இருப்பதாக கூறப்படுகிறது. இப்படி ஒட்டுமொத்தமாக பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு சாதகமாகவே சம்பவங்கள் நடந்துவருகின்றன. இப்போது, மத்திய அரசே மேலும் ஒரு அடியை வைத்துள்ளது.

தொலைத்தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா அடுத்த 180 நாட்களில் புதிய டெலிகாம் விதிகள் வெளியாவதை உறுதி செய்யதிருக்கிறார். கடந்த மாதம், ஏற்கனவே அமலான டெலிகாம் விதிகளின்படி பாதுகாப்பு, பொது ஒழுங்கு அல்லது குற்றங்களைத் தடுத்தல் ஆகியவற்றின் அடிப்படையில் தனியார் ஆபரேட்டர்களின் தொலைத்தொடர்பு சேவைகளை அரசாங்கம் கட்டுப்படுத்த அதிகாரம் வழங்கப்பட்டது.

இந்த விதிகளில் ரீசார்ஜ் கட்டண உயர்வு மத்திய அரசு கட்டுப்படுத்துவதற்கான மாற்றங்களை கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. இந்த கோரிக்கைகள் அடுத்து வரும் டெலிகாம் விதிகளில் கொண்டுவரப்பட் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதுவொரு புறம் இருக்க பிஎஸ்என்எல் 4ஜி சேவைகள் குறித்த அறிவிப்பையும் வெளியிட்ட ஜோதிராதித்ய சிந்தியா கஸ்டமர்கள் குஷியாகும்படி செய்திருக்கிறார்.

பிஎஸ்என்எல் 4ஜி சேவையை விரைவாக வழங்குவதற்காக செயல்திறன் கண்காணிப்பு பிரிவு - பிஎம்யு (Performance Monitoring Unit - PMU) அமைக்கப்பட இருக்கிறது. இந்த பிரிவில் பிஎஸ்என்எல், டிசிஎஸ் (TCS), சி-டாட் (C-Dot) மற்றும் தேஜஸ் (Tejas) உறுப்பினர்கள் இருப்பார்கள். இவர்கள் மூலம் நாளுக்கு நாள் பணிகள் கண்காணிப்பட்டு முடிக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.

இதனால், பிஎஸ்என்எல் 4ஜி சேவைகள் விரைவில் வருவது உறுதியாகிவிட்டது. கடந்தாண்டு பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் பிஎஸ்என்எல் 4ஜி சேவைகளுக்காக ரூ.8000 கோடிக்கும் மேல் நிதி ஒதுக்கப்பட்டது. அப்போதில் இருந்து பிஎஸ்என்எல் குறித்த செய்திகள் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன. இப்போது கஸ்டமர்களும் பிஎஸ்என்எல்லுக்கு மாறிவருகின்றனர்.

More from GizBot

Best Mobiles in India

English summary
New Telecom Act Coming Next 180 Days While Customers Are Switching From Jio, Airtel To BSNL Services
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X