போர்வீரர்களின் ஸ்மார்ட்போன் மூலம் எதிரிகளை கண்டறியும் தொழில்நுட்பம்..

வீரர்கள் தங்களது காதுகள் மற்றும் கேட்கும் திறன் பாதுகாப்பிற்காக இன்-இயர் இயர்போன்கள் ( in-ear earphones) அணிந்திருந்தால், அவர்களால் துப்பாக்கிச்சூடு எங்கிருந்து நடைபெறுகிறது என்பதை அறியமுடியாது.

|

போர்க்களங்கள் எப்போதும் அமைதியானதாக இருப்பதில்லை. ஆயுதங்கள் உபயோகிக்கும் போது அதிலிருந்து வெளியாகும் சத்தம் போர்க்களத்தில் உள்ள வீரர்களுக்கு பிரச்சனையை ஏற்படுத்துகிளது. வீரர்கள் தங்களது காதுகள் மற்றும் கேட்கும் திறன் பாதுகாப்பிற்காக இன்-இயர் இயர்போன்கள் ( in-ear earphones) அணிந்திருந்தால், அவர்களால் துப்பாக்கிச்சூடு எங்கிருந்து நடைபெறுகிறது என்பதை அறியமுடியாது. அவர்கள் அதை அணியவில்லை எனில், அங்கு நிலவும் அதிக சத்தத்தால் அவர்களுடைய கேட்கும் திறன் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது.

போர்வீரர்களின் ஸ்மார்ட்போன் மூலம் எதிரிகளை கண்டறியும் தொழில்நுட்பம்..

இந்த இன்-இயர் இயர்போன்கள் தந்திரோபாய தகவல்தொடர்பு மற்றும் பாதுகாப்பு அமைப்புகளாக ( Tactical Communication and Protective Systems -TCAPS)அறியப்படுகின்றன. ஸ்மார்ட்போனை அடிப்படையாக கொண்டு செயல்படும் தொழில்நுட்பம் ஒன்று, எதிரிகள் எங்கிருந்து தாக்குகின்றனர் என்பதை போர் வீரர்கள் தீர்மானிக்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

 சிறிய மைக்ரோபோன்கள்

சிறிய மைக்ரோபோன்கள்

இந்த புதிய டிசிஏபிஎஸ் இயர்போன்களில் பொதுவாக பயன்படுத்தியுள்ள சிறிய மைக்ரோபோன்கள், போர்வீரர்களின் காது மடலின் உட்புறமும் வெளிப்புறத்திலும் இருக்கும். இந்த மைக்கள் மூலம் வீரர்கள் தங்கள் சக வீரர்களின் குரல்களை கேட்க முடியும். ஆனால் கேட்கும் திறனை பாதுகாக்கும் வகையில் பயனரின் சொந்த ஆயுதத்தின் துப்பாக்கிச் சூடு உட்பட அதிக சத்தம் வாய்ந்த அனைத்து ஒலியும் மின்னணு முறையில் வடிகட்டப்படுகிறது.

சூழ்நிலை

சூழ்நிலை

இங்கு தான் முக்கிய விசயமே உள்ளது. இந்த புதிய இயர்போன் வீரர்களை சுற்றிய சூழ்நிலை விழிப்புணர்வையும் குறைப்பதால், எதிரிகள் எங்கிருந்து தாக்குகின்றனர் என்பதை தீர்மானிப்பது மிகவும் கடினமாக இருக்கும். வீரர்கள் போர்களத்தில் எங்கு பாதுகாப்பாக பதுங்கியிருந்து தங்களை பாதுகாத்துக்கொண்டு எதிரிகளை தாக்கமுடியும் என்பதை என்பதை தீர்மானிக்க இது மிகவும் அவசியமான ஒன்று.

 பிரன்ச் - ஜெர்மன்

பிரன்ச் - ஜெர்மன்

இந்த பிரச்சனையை எதிர்கொள்ளும் வகையில் ஸ்மார்ட்போனை அடிப்படையாக கொண்டு செயல்படும் தொழில்நுட்பம் ஒன்றை பிரன்ச் - ஜெர்மன் ரிசர்ச் இன்ஸ்ட்யூட் ஆப் செயின்ட் லூயிஸ் நிறுவனம் உருவாக்கியுள்ளது. நவீன ஆயுதங்களை பயன்படுத்தும் போது உருவாகும் இருவகை அலைகளை மையப்படுத்தி இது செயல்படுகிறது. ஆரம்பகட்ட சூப்பர்ஸோனிக் அதிர்ச்சி அலை புல்லட் உடன் கூம்பு வடிவத்தில் செல்லும்.மஸ்ஸில் அலை துப்பாக்கிமுனையிலிருந்து கோள வடிவில் பயணிக்கும்.

ஸ்மார்ட்போன் சார்ந்த தொழில்நுட்பம்

ஸ்மார்ட்போன் சார்ந்த தொழில்நுட்பம்

இந்த ஸ்மார்ட்போன் சார்ந்த தொழில்நுட்பம், காதுகளில் உள்ள மைக்குகள் மூலம் இரு வெவ்வேறு அலைகள் வீரர்களின் காதுகளை அடைவதற்கான நேர வேறுபாடு கண்டறியப்படும். இந்த தரவுகள் பின்னர் ப்ளூடூத் வழியாக மொபைல் செயலிக்கு அனுப்பப்படும். ஸ்மார்ட்போன் சார்ந்த இந்த தொழில்நுட்பம் அல்காரிதத்தை பயன்படுத்தி துப்பாக்கி சூடு நடைபெறும் திசையை உறுதிப்படுத்தும்.

மூத்த விஞ்ஞானி செபாஸ்டியன் ஹென்ஜி

மூத்த விஞ்ஞானி செபாஸ்டியன் ஹென்ஜி

இந்த தொழில்நுட்பத்தை உருவாக்கிய மூத்த விஞ்ஞானி செபாஸ்டியன் ஹென்ஜி கூறுகையில் " ஒரு நல்ல ப்ராசஸ்சர் கொண்ட ஸ்மார்ட்போன் என்றால், இந்த முழுமையான செயல்முறை மற்றும் கணிப்பு நடைபெற சுமார் அரை விநாடி மட்டுமே ஆகும்' என்கிறார். இருப்பினும் இந்த ஆண்டில் சில காலத்திற்குள் ஒரு செயற்கை தலையில் பரிசோதனை செய்யும் திட்டங்கள் உள்ளன. 2021 ஆம் ஆண்டில் இந்த ஸ்மார்ட்போன் சார்ந்த தொழில்நுட்பம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
New Technology Uses Soldier Smartphones To Determine Enemy Position: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X