ஹெல்மேட் பிரச்சனைக்கு இதோ தீர்வு!!!

Written By:

பெருநகரங்களில் இருசக்கர வாகனங்கள் ஓட்டுவோருக்கு பெரும் பிரச்சனை இந்த ஹெல்மேட்தான்.

அதன் அதிக எடை மற்றும் காற்று உட்புகா வண்ணம் இது தயாரிக்கப்பட்ட முறை ஆகியவை இதை வெறுக்கவைத்துவிடும்.

இத்தனைக்கும் சமீபத்தில் வழிகாட்டு தகவல்களை தரும் புதிய ஹெல்மெட்டை ரஷ்யாவை சேர்ந்த எஞ்சினியர்கள் வடிவமைத்துள்ளனர். இந்த ஹெல்மெட்டை விரைவில் விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாகவும் அவர்கள் அறிவித்திருந்தார்கள். ஆனாலும் அதன் எடை இன்னும் அதிகம் என்று கருதி வடிவமைப்பை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்..

இதற்கிடையில் இந்த எடை பிரச்னைக்கு தீர்வை, சுவீடனைச் சேர்ந்த இரு பெண்கள் கண்டுபிடித்துள்ளனர். அதாவது இவர்கள் இப்போது கண்ட்சுபிடித்துள்ள இந்த ஹெல்மெட்டை தலையில் அணிந்திருந்தால், அணிந்திருப்பதே தெரியாது.
விபத்து நேரிட்டால் மட்டுமே இதனுள் பொருத்தப்பட்ட சென்சார் களைத் தூண்டி, காற்றுப் பையானது செயல் படுகிறது.கண்ணிமைக்கும் நேரத்திற்குள் ஹீலியம் வாயு நிரப்பப்பட்டு, ஹெல்மெட் உப்பிவிடும். இதனால் தலையில் அடி ஏற்படாமல் பாதுகாக்கப்படுகிறது.

மேலும் இந்த ஹெல்மெட் விமானத்தில் உள்ளது போல, கருப்புப் பெட்டி ஆகவும் செயல்படுகிறது. இரு சக்கர வாகனங்களில் இதை அணிந்து கொண்டு செல்பவரின் வேகம், காற்றின் வேகம், காற்று அடிக்கும் திசை இவற்றையும் இந்த ஹெல் மெட்டின் மூலமாக அறிய முடியும்.

மின்சாரத்தின் மூலமாக இந்த ஹெல்மெட் செயல்படுவதால், மாதத்தில் ஒரு முறை ஹெல்மெட்டை சார்ஜ் செய்ய வேண்டும்.

விரைவில் இந்த ஹெல்மெட் சந்தையில் விற்பனைக்கு வர இருக்கிறது.

Click Here For New Gadgets Gallery

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
இதோ அதன் படங்கள்

ஹெல்மேட் பிரச்சனைக்கு இதோ தீர்வு

ஹெல்மேட் பிரச்சனைக்கு இதோ தீர்வு

இதோ அதன் படங்கள்

ஹெல்மேட் பிரச்சனைக்கு இதோ தீர்வு


ஹெல்மேட் பிரச்சனைக்கு இதோ தீர்வு

 இதோ அதன் படங்கள்

ஹெல்மேட் பிரச்சனைக்கு இதோ தீர்வு


ஹெல்மேட் பிரச்சனைக்கு இதோ தீர்வு

 இதோ அதன் படங்கள்

ஹெல்மேட் பிரச்சனைக்கு இதோ தீர்வு

ஹெல்மேட் பிரச்சனைக்கு இதோ தீர்வு

 இதோ அதன் படங்கள்

ஹெல்மேட் பிரச்சனைக்கு இதோ தீர்வு

ஹெல்மேட் பிரச்சனைக்கு இதோ தீர்வு

ஹெல்மேட் பிரச்சனைக்கு இதோ தீர்வு


ஹெல்மேட் பிரச்சனைக்கு இதோ தீர்வு

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Click Here For New Smartphones And Tablets Price And Specs Lists

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot