புது TDS ரூல்ஸ்.. ஏப்.1 முதல் அமல்! ரூ.5000 லிருந்து ரூ.10000 ஆக இரட்டிப்பு.. இனி ரூ.1 லட்சம் தாண்டினால் தான்?
டிடிஎஸ் (TDS) என்று சுருக்கமாக அழைக்கப்படும் டேக்ஸ் டிடக்டட் அட் சோர்ஸ் (Tax Deducted at Source) தொடர்பான 6 புதிய விதிகள் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளன. இந்த மாற்றங்கள் வரி செலுத்துவோருக்கு, முக்கியமாக முதலீட்டாளர்கள், மூத்த குடிமக்கள் மற்றும் கமிஷன் பெறுபவர்களுக்கு நிதி தொடர்பான நிவாரணம் (Financial Relief) வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளன.
01. பரஸ்பர நிதிகள் மற்றும் பங்குகளுக்கான அதிகரிக்கப்பட்ட டிடிஎஸ் விலக்கு (Increased TDS Exemption for Mutual Funds & Stocks): புதிய டிடிஎஸ் விதிகளின் கீழ் முதலீட்டாளர்கள் டிவைடென்ட் வருமானம் மற்றும் மியூச்சுவல் பண்ட வருவாய் மீதான அதிக விலக்கு வரம்பால் பயனடைவார்கள்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமர்ப்பித்த 2025-26 மத்திய பட்ஜெட்டில், 2025 ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் பங்குகளிலிருந்து வரும் டிவைடென்ட்கள் மற்றும் எம்எப் யூனிட்களிலிருந்து கிடைக்கும் வருமானத்திற்கான டிடிஎஸ் விலக்கு வரம்பை (TDS exemption limit) அரசாங்கம் ரூ.5,000 லிருந்து ரூ.10,000 ஆக இரட்டிப்பாக்கி உள்ளது.
02. டிவைடென்ட் வருமானத்தில் அதிக டிடிஎஸ் லிமிட்: 2025-26 பட்ஜெட் ஆனது டிவைடென்ட் வருமானத்திற்கான டிடிஎஸ் லிமிட்டையும் (TDS limit on dividend income) திருத்தி உள்ளது. தற்போது விலக்கு ரூ.5,000 லிருந்து ரூ.10,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் தங்கள் வருவாயில் அதிகமானவற்றை தக்க வைத்து முடியும்.
03. மூத்த குடிமக்களுக்கு அதிக டிடிஎஸ் விலக்கு (Higher TDS Exemption for Senior Citizens): மூத்த குடிமக்களுக்கு அதிக நிதி நிவாரணம் வழங்கும் நோக்கத்தின் கீழ், இந்திய அரசாங்கம் ஆனது மூத்த குடிமக்களுக்கான டிடிஎஸ் விலக்கு வரம்பை இரட்டிப்பாக்கி உள்ளது. இதுவும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இதன்கீழ் ஏப்ரல் 1, 2025 முதல், ஒரு நிதியாண்டில் மொத்த வட்டி வருவாய் ரூ.1 லட்சத்தை தாண்டினால் மட்டுமே, எப்டி (FD) மற்றும் ஆர்டி (RD) ஆகியவற்றிலிருந்து வட்டி வருமானத்தில், வங்கிகள் டிடிஎஸ்-ஐ கழிக்கும். அதாவது, ஒரு மூத்த குடிமகனின் ஆண்டு வட்டி வருமானம் இந்த வரம்பிற்குள் இருந்தால், எந்த டிடிஎஸ்-ம் கழிக்கப்படாது.
04, பொது குடிமக்களுக்கான டிடிஎஸ் வரம்பு (TDS Threshold Raised for General Citizens) உயர்த்தப்பட்டுள்ளது: 60 வயதுக்குட்பட்ட தனிநபர்களுக்கு, வட்டி வருமானத்தில் டிடிஎஸ் வரம்பு ரூ.40,000 இலிருந்து ரூ.50,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை எப்டி வட்டியை முக்கிய வருமான ஆதாரமாக நம்பியிருக்கும் வைப்புத்தொகையாளர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். இப்போது, ஒரு நிதியாண்டில் ஈட்டப்படும் மொத்த வட்டி ரூ.50,000 ஐ தாண்டினால் மட்டுமே வங்கிகள் டிடிஎஸ்-ஐ கழிக்கும்.
05. லாட்டரி வெற்றிகள் மற்றும் குதிரை பந்தய பந்தயங்களில் எளிமைப்படுத்தப்பட்ட டிடிஎஸ் (Simplified TDS on Lottery Winnings & Horse Racing Bets): லாட்டரிகள், குறுக்கெழுத்து புதிர்கள் மற்றும் குதிரை பந்தயங்கள் மூலம் கிடைக்கும் வருவாய் தொடர்பான டிடிஎஸ் விதிகளை இந்திய அரசாங்கம் திருத்தியுள்ளது.
முன்னதாக, ஒரு நிதியாண்டில் மொத்த வெற்றிகள் ரூ.10,000 ஐ தாண்டினால், பல சிறிய தொகைகளில் பெறப்பட்டாலும் கூட டிடிஎஸ் கழிக்கப்படும். ஆனால் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் புதிய ஒழுங்குமுறையின் கீழ், ஒரு பரிவர்த்தனை ரூ.10,000 ஐ தாண்டினால் மட்டுமே டிடிஸ் பயன்படுத்தப்படும்.
06. காப்பீட்டு முகவர்கள் மற்றும் தரகர்களுக்கான நிவாரணம்: காப்பீடு மற்றும் தரகுத் துறைகளில் உள்ள நிபுணர்களுக்கு இணக்கத்தை எளிதாக்கவும் பணப்புழக்கத்தை மேம்படுத்தவும், 2025 பட்ஜெட் கமிஷன்களுக்கான டிடிஎஸ் விலக்கு வரம்பை அதிகரிக்கப்பட்டுள்ளது. காப்பீட்டு கமிஷன்களுக்கான வரம்பு ஏப்ரல் 1, 2025 முதல் ரூ.15,000 லிருந்து ரூ.20,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








