Home
News

இனி சீனா, பாக்., எல்லை நம்ம கட்டுப்பாட்டில்: ரூ.4000 கோடி மதிப்பிலான தீவிர கண்காணிப்பு செயற்கைக்கோள்!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவுடன் இணைந்து மேற்கொள்ளப்படும் கண்காணிப்பு செயற்கைக்கோளுக்கான திட்டத்தின் மூலம் எல்லைப் பகுதிகளில் தனது கண்காணிப்பை அதிகரிக்க உதவும் என கூறப்பட்டுள்ளது. சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லையின் சவால்களை கண்காணிக்கும் வகைியல் கண்காணிப்பு செயற்கைக் கோளை அமைக்க ரூ.4000 கோடி செலவிலான ஒப்பந்ததுக்கு பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி வழங்கியிருக்கிறது.

சொந்தமாக அர்ப்பணிக்கப்பட்ட செயற்கைக்கோள்

சொந்தமாக அர்ப்பணிக்கப்பட்ட செயற்கைக்கோள்

முப்படைகளில் இந்திய கடற்படை மற்றும் விமானப்பைட முன்னதாக சொந்தமாக அர்ப்பணிக்கப்பட்ட செயற்கைக்கோளை வைத்திருக்கின்றன. தற்போது இந்திய ராணுவத்திற்கான செயற்கைக்கோள் மூலம் அதனை பலப்படுத்த முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சீனா மற்றும் பாகிஸ்தானின் எல்லையில் உள்ள செயல்பாடுகளை கண்காணிக்க பிரத்யேக கண்காணிப்பு செயற்கைக்கோளுக்கு நிதியளிக்கும் முயற்சியாக பாதுகாப்பு அமைச்சகம் ரூ.4,000 கோடி திட்டத்துக்கு ஒப்புதல் அளித்திருக்கிறது. இந்திய கடற்படை மற்றும் விமானப்படை ஏற்கனவே சொந்தமாக அர்ப்பணிக்கப்பட்ட செயற்கைக்கோள்களை வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பு கையகப்படுத்துதல் கவுன்சில் கூட்டத்தில் அனுமதி

பாதுகாப்பு கையகப்படுத்துதல் கவுன்சில் கூட்டத்தில் அனுமதி

இதுகுறித்து அரசு வட்டாரங்கள் ஏஎன்ஐ தளத்திடம் தெரிவித்த தகவல்களை பார்க்கலாம். அதில், "செவ்வாய்கிழமை நடைபெற்ற பாதுகாப்பு கையகப்படுத்துதல் கவுன்சில் கூட்டத்தில், இந்திய ராணுவத்திற்காக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட செயற்கைக்கோள் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜிசாட் 7பி (GSAT 7B) செயற்கைக்கோளுக்கான திட்டம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ உடன் இணைந்து மேற்கொள்ளப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம் எல்லைப் பகுதிகளின் செயல்பாடுகளை இந்திய ராணுவம் தனது கண்காணிப்பை அதிகரிக்க உதவும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இஸ்ரோவால் உருவாக்கப்பட்ட செயற்கைக்கோள்

இஸ்ரோவால் உருவாக்கப்பட்ட செயற்கைக்கோள்

அதேபோல் மறுபுறம் இஸ்ரோவால் உருவாக்கப்பட்ட செயற்கைக்கோளின் மூலம் பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட மேக் இன் இந்தியா திட்டத்திற்கு, நாட்டில் உள்நாட்டுத் தொழிலை மேம்படுத்த உதவும் என்று பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்திய ராணுவத்தின் முக்கியத் திறனை மேம்படுத்தும் வகையில், சீனா மற்றும் பாகிஸ்தானின் எல்லைகளையும் அதன் செயல்பாடுகளையும் கண்காணிக்கும் வகையில் பிரத்யேக கண்காணிப்பு செயற்கைக்கோளுக்கான ரூ. 4,000 கோடி திட்டத்திற்கு பாதுகாப்பு அமைச்சகம் மார்ச் 22 அன்று ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதான திட்டமான ககன்யான் திட்டம்

பிரதான திட்டமான ககன்யான் திட்டம்

மறுபுறம் இஸ்ரோவின் சமீபத்திய பிரதான திட்டமான ககன்யான் திட்டம் பெரிதளவு முன்னேறி வருகிறது. ககன்யான் திட்டத்துக்கான கிரையோஜெனிக் என்ஜின் தகுதிச் சோதனையை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தமிழகத்தில் மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ ப்ராபல்ஷன் வளாகத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்த சோதனையானது 720 வினாடிக்கு நடத்தப்பட்டது. ஐபிஆர்சி வளாகத்தில் 720 வினாடிகளுக்கு செய்யப்பட்டது.

இஸ்ரோ வளாகத்தில் நடத்தப்பட்ட சோதனை

இஸ்ரோ வளாகத்தில் நடத்தப்பட்ட சோதனை

தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ வளாகத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டது. இதுகுறித்த இஸ்ரோ தகவலின்படி, என்ஜினின் செயல்திறன் சோதனை நோக்கங்களின் அனைத்து அம்சங்களிலும் செயல்திறன் நிவர்த்தியாக பூர்த்தி செய்யப்பட்டது. இந்த வெற்றி ககன்யான் திட்டத்தின் மிகப் பெரிய மைல்கல் என நிறுவனம் தெரிவித்துள்ளது. மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டமானது வெற்றிகரமான நீண்ட கால சோதனையாகும். என்ஜின் சோதனையில் இதன் நம்பகத்தன்மை மற்றும் வலிமையை உறுதி செய்துள்ளது.

நான்கு வகையான சோதனைகள்

நான்கு வகையான சோதனைகள்

இந்த என்ஜின் மேலும் நான்கு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இந்த சோதனையானது 1810 வினாடிகளுக்கு நடக்க இருக்கிறது. ககன்யான் திட்டத்திற்கான கிரையோஜெனிக் என்ஜின் முழு தகுதியை முடிக்க இயந்திரம் இரண்டு குறுகிய கால சோதனைகள் மற்றும் ஒரு நீண்ட கால சோதனைக்கு உட்படுத்தப்பட இருக்கிறது. தொடர்ந்து ககன்யான் திட்டம் பல கட்டங்கள் முன்னேறி வருகிறது. இந்த திட்டத்தின் சோதனை தொடர்ந்து வெற்றி பெற்று வருவது இஸ்ரோ நிறுவனத்தை பல கட்டம் முன்னோக்கி எடுத்து செல்லும் வகையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.இந்திய வர்த்தகம் மற்றம் தொழில் கூட்டமைப்பின் சார்பாக, எதிர்கால விண்வெளி தொழில்நுட்பம் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக விண்வெளித் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியது என்னவென்றால், ககன்யான் திட்டம் கொரோனா காரணமாக தாமதமாகி விட்டது. இருந்தபோதிலும் அடுத்த ஆண்டு இறுதியிலோ அல்லது 2023-ம் ஆண்டு தொடக்கத்திலோ ககன்யான் விண்கலம் செலுத்தப்படும் என்று கூறினார்.

Best Mobiles in India

English summary
New Surveillance satellite to Track China, Pakistan border: Defense Ministry Clears Rs.4,000 crore Proposal
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X