இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.. இந்திய கண்டம் ஆப்பரிகாவுடன் இணையுமா? விஞ்ஞானிகள் வெளியிட்ட உண்மை ரிப்போர்ட்!

|

பூமியில் நமக்குத் தெரிந்து ஒட்டுமொத்தமாக 7 கண்டங்கள் இருக்கிறது என்று சிறு வயதில் இருந்து நாம் கேட்டு வருகிறோம். ஆனால், இன்னும் இந்த பூமியில் மறைக்கப்பட்ட ஒரு கண்டம் இருக்கிறது என்று சொன்னால் நம்புவீர்களா? அதைவிடப் பூமியில் உள்ள அனைத்து கண்டங்களும் மெல்ல - மெல்ல ஒன்றுடன் ஒன்று மோதும் வகையில் நகர்ந்துகொண்டிருக்கிறது என்று சொன்னால் நம்புவீர்களா? நம்புங்கள் மக்களே இது தான் உண்மை. சமீபத்தில், விஞ்ஞானிகள் 8 ஆம் கண்டதை ஆழ்கடலுக்கு அடியில் கண்டுபிடித்தது போல், நமது கண்டங்கள் நகர்ந்து கொண்டிருப்பதையும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

பூமியின் கண்டங்கள் மெல்ல - மெல்ல நகர்கிறதா?

பூமியின் கண்டங்கள் மெல்ல - மெல்ல நகர்கிறதா?

பூமியில் உள்ள அனைத்து கண்டங்களும் தொடர்ச்சியாக நகர்கின்றன, நமக்குக் கீழே உள்ள டெக்டோனிக் தகடுகளால் இந்த இயக்கம் இயக்கப்படுகின்றது. இவை மெதுவாக நகர்ந்துகொண்டிருக்கிறது. இதை நாம் வெளிப்படையாக நேர்க் கண்களால் காண முடியவில்லை என்றாலும், இவை ஆண்டு தோறும் மிகச் சிறிய அளவில் நிச்சயமாக அவற்றின் முந்தைய இலக்கில் இருந்து மற்றொரு இலக்கை நோக்கி நகர்ந்துகொண்டே இருக்கிறது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

அடுத்த 200 மில்லியன் ஆண்டுகளில் நடக்கப்போகும் நிகழ்வு இப்படிதான் இருக்குமா?

அடுத்த 200 மில்லியன் ஆண்டுகளில் நடக்கப்போகும் நிகழ்வு இப்படிதான் இருக்குமா?

இந்த டெக்டோனிக் தகடுகள் நகரும் வேகம் மற்றும் திசையை வைத்து அடுத்த 200 மில்லியன் ஆண்டுகளில் பூமி எப்படி இருக்கும் என்பதை விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். இவர்களின் கணிப்புப் படி பார்த்தல் நமது இந்தியக் கண்டம் ஆப்பிரிக்கக் கண்டத்தின் மடகாஸ்கர் உடன் இணைந்து ஒரு மாபெரும் மலைப் பகுதியை உருவாக்கப் போகிறது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இந்த நிகழ்வு எத்தனை ஆண்டுகளில், எந்த விதத்தில், என்ன சூழ்நிலையில் நிகழும் என்பதையும் விஞ்ஞானிகள் ஒரு முழு வீடியோ பதிவாக உருவாக்கி வெளியிட்டுள்ளனர்.

ஆதார் ஆணையம் அதிரடி: ஆதார் அட்டையை PVC நகல் எடுப்பது செல்லாது.. ஆதார் PVC கார்டை இப்படி தான் ஆர்டர் செய்யணுமா?ஆதார் ஆணையம் அதிரடி: ஆதார் அட்டையை PVC நகல் எடுப்பது செல்லாது.. ஆதார் PVC கார்டை இப்படி தான் ஆர்டர் செய்யணுமா?

பூமியின் ஒட்டுமொத்த கண்டங்களும் இடம் மாறுமா?

பூமியின் ஒட்டுமொத்த கண்டங்களும் இடம் மாறுமா?

இந்த வீடியோ, பதிவின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ளது. விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, நம்முடைய இந்தியக் கண்டம் சோமாலியா மற்றும் மடகாஸ்கரை அடித்து நொறுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடித்து நொறுக்குமா? என்னப்பா சொல்றீங்க என்று நீங்கள் கேட்பது தெரிகிறது. விஞ்ஞானிகளின் ரிப்போர்ட் அப்படித்தான் குறிப்பிடுகிறது. இந்த நிகழ்வின் போது பூமியின் ஒட்டுமொத்த கண்டங்களும் இடம் மாறும் என்று கூறப்படுகிறது. இதனால், ஒன்றுடன் ஒன்று இடித்து மோதி புதிய மாபெரும் கண்டதை இயற்கை தானாக உருவாக்கும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

அரபிக் கடல் இல்லாமல் போகுமா? மும்பை கடல் இல்லாமல் மலைப் பகுதியாக மாறுமா?

அரபிக் கடல் இல்லாமல் போகுமா? மும்பை கடல் இல்லாமல் மலைப் பகுதியாக மாறுமா?

தொலைதூர எதிர்காலத்தில் டெக்டோனிக் தட்டு அசைவுகளை முன்னறிவிக்கும் உருவகப்படுத்துதல்களின் அடிப்படையில், விஞ்ஞானிகள் அரபிக் கடல் 200 மில்லியன் ஆண்டுகளில் இல்லாமல் போகும் என்று உறுதி செய்துள்ளனர். இந்தியாவின் மேற்கு கடற்கரை சோமாலியா மலைகளால் மாற்றப்படும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இதனால், கடல் இல்லாவிட்டாலும் கூட மும்பை நன்றாகத் தான் இருக்கும் என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளது கவனிக்கத்தக்கது. இப்போது மும்பையைச் சுற்றியுள்ள கடல் பகுதியில் 200 மில்லியன் ஆண்டுகளுக்குப் பின் சோமாலியா மலைகளால் சூழப்பட்டிருக்கும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

இந்த வழி தெரிந்திருந்தால் நீங்கள் மற்றொரு நபரின் ரயில் டிக்கெட்டில் பயணம் செய்யலாம்? எப்படி தெரியுமா?இந்த வழி தெரிந்திருந்தால் நீங்கள் மற்றொரு நபரின் ரயில் டிக்கெட்டில் பயணம் செய்யலாம்? எப்படி தெரியுமா?

விஞ்ஞானிகளின் கணிப்பு மும்பை பற்றி என்ன சொல்கிறது?

விஞ்ஞானிகளின் கணிப்பு மும்பை பற்றி என்ன சொல்கிறது?

இந்தியாவின் நிதி மூலதனம் "சோமாலியா மலைகள்" என்று அழைக்கப்படுபவரின் அடிவாரத்தில் அமைந்திருக்கும், அது முழு கடலோரக் கோட்டையாக மும்பையைச் சுற்றி மாற்றம் செய்யும். மொகடிஷுவும் மும்பையும் இன்னும் 200 மில்லியன் ஆண்டுகளில் அண்டை நாடுகளாக மாறும். அதேபோல், கொல்கத்தாவும் மொரீஷியஸும் ஒன்றுக்கொன்று நெருக்கமாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இதேபோல், இன்று நாம் அறிந்திருக்கும் இலங்கையும் மறைந்து புதிய இந்தியத் துணைக்கண்டத்தின் ஒரு பகுதியாக மாறும் என்று விஞ்ஞானிகளின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவின் மீது உருவாகும் மிகப் பெரிய மலைப் பகுதி

அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் சயின்ஸ் இதழில் உட்ரெக்ட் பல்கலைக்கழக புவியியலாளர் பேராசிரியர் டூவே வான் ஹின்ஸ்பெர்கன் இந்த ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டார். சமீபத்திய உரையாடலில், தென்மேற்கு இந்தியா "திருவனந்தபுரத்தில் இருந்து கராச்சி வரை ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும்" என்று டாக்டர் வான் ஹின்ஸ்பர்கன் விளக்கினார். "சோமாலியாவை உள்ளடக்கிய ஆப்பிரிக்காவின் கொம்பு தென்மேற்கு இந்தியாவின் மீது மேலெழுந்து அல்லது புல்டோஸ் செய்து இந்த பெரிய மலைப் பகுதியை உருவாக்கும்" என்று பேராசிரியர் மேலும் கூறினார்.

உங்களுடைய ஸ்மார்ட்போனில் எவ்வளவு ரேம் இருந்தால் நல்லது? எது சிறப்பானது? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க மக்களே..உங்களுடைய ஸ்மார்ட்போனில் எவ்வளவு ரேம் இருந்தால் நல்லது? எது சிறப்பானது? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க மக்களே..

இப்போது இருக்கும் 7 கண்டங்களுக்கு முன் பூமி இப்படி தான் இருந்ததா?

இப்போது இருக்கும் 7 கண்டங்களுக்கு முன் பூமி இப்படி தான் இருந்ததா?

இன்று இருக்கும் அனைத்து மலைத்தொடர்கள் மற்றும் கடலோரப் பகுதிகளின் உருவாக்கம் மில்லியன்கணக்கான ஆண்டுகளின் இயக்கத்தின் மூலம் உடைந்த பாங்கேயாவின் முன்னாள் சூப்பர் கண்டத்தில் இருந்து உருவாகியது என்பதை நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். இதே போன்ற ஒரு செயல்முறை தான் மீண்டும் கண்டங்களை மாற்றி அமைக்கப்போகிறது.

இந்தியாவின் மேற்குக் கடற்கரை இல்லாமல் போனால் எப்படி இருக்கும்?

இந்தியாவின் மேற்குக் கடற்கரை இல்லாமல் போனால் எப்படி இருக்கும்?

புவியியலின் இந்த மாபெரும் மாற்றத்தைக் காண நாம் (அதிர்ஷ்டவசமாக) இல்லாத நிலையில், இந்தியாவின் மேற்குக் கடற்கரை இல்லாமல் போனால் எப்படி இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? என்பதைக் கீழே உள்ளக் கருத்துகளில் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.பல மில்லியன் ஆண்டுகளாகக் கடலுக்குள் புதைக்கப்பட்டிருந்த பூமியின் 8 ஆம் கண்டதை பற்றி அறிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை கிளிக் செய்யுங்கள்.

கடலுக்குள் புதைக்கப்பட்ட பூமியின் 8 ஆம் கண்டம் பற்றிய திடுக்கிடும் தகவல்! வரைபடத்தை வெளியிட்ட குழு!கடலுக்குள் புதைக்கப்பட்ட பூமியின் 8 ஆம் கண்டம் பற்றிய திடுக்கிடும் தகவல்! வரைபடத்தை வெளியிட்ட குழு!

நீருக்கு அடியில் மறைந்திருக்கும் பூமியின் 8 ஆம் கண்டம் ஸிலாந்தியா (Zealandia)

நீருக்கு அடியில் மறைந்திருக்கும் பூமியின் 8 ஆம் கண்டம் ஸிலாந்தியா (Zealandia)

இதற்கு முப்பு வரை பூமி 7 கண்டங்களாகப் பிரிக்கப்பட்டது, இதுவரை நாம் அறிந்திடாத புதிய நிலப்பரப்பை விஞ்ஞானிகள் சமீபத்தில் கண்டுபிடித்துள்ளனர். தெற்கு பசிபிக் கடலின் கீழ் சுமார் 3,500 அடி நீருக்கு அடியில் இந்த உண்மை மறைக்கப்பட்டுள்ளது. பூமியின் 8 ஆம் கண்டம் என்று கோரப்படும் இந்த கண்டம் இது வரை ஒரு சிறிய தீவாக நீருக்கு மேல் காட்சியளித்தது. இது அட்லாண்டிஸ் இல்லை, இது ஸிலாந்தியா (Zealandia) கண்டம் என்று விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
New Study Suggests Indias West Coast Will Crash Into Africa In 200 Million Years : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X