Home
News

இனி ChatGPT யூஸ் பண்றவங்கள கையில் பிடிக்க முடியாதே.. புதிய Mode அறிமுகம்.. Login பண்ணா போதும்!

தம்பிகளா அப்படி ஓரமா போய் சண்டை போடுங்கப்பா என்று கூகுள் (Google) மற்றும் மைக்ரோசாஃப்ட் (Microsoft) நிறுவனங்களை பார்த்து கூறும் படியான ஒரு வேலையை பார்த்து உள்ளது ஓப்பன் ஏஐ (OpenAI) நிறுவனம். அப்படி என்ன செய்துள்ளது? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்.

கூகுள் நிறுவனம் அதன் கூகுள் சேர்ச்சில் ஏஐ மோட் (AI Mode) என்கிற புதிய விருப்பத்தை அறிமுகம் செய்ததும், அதற்கு போட்டியாக மைக்ரோசாப்ட் நிறுவனம் ஆனது அதன் எட்ஜ் பரவுஸரில் கோபைல்ட் மோட் (Copilot Mode) என்கிற ஆப்ஷனை (நேற்று) சேர்த்தது.

ChatGPT-யில் புதிய Mode அறிமுகம்.. Login பண்ணா போதும்!

இதற்கிடையில் தன் பங்கிற்கு - ஓப்பன் ஏஐ (OpenAI) நிறுவனம் ஆனது அதன் ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் சாட்பாட் (Artificial intelligence chatbot) ஆன சாட்ஜிபிடியில் (ChatGPT) ஒரு புதிய மோட்-ஐ சேர்த்துள்ளது. அது ஸ்டடி மோட் (Study Mode) என்று அழைக்கப்படுகிறது.

சாட்ஜிபிடி ஏஐ சாட்பாட்டிற்கு வந்துள்ள இந்த புதிய ஸ்டடி மோட் ஆனது மாணவர்களுக்கு உதவும்படி வடிவமைக்கப்பட்டு உள்ளது. இது முன்கூட்டியே பதில்களை வழங்காமல் - வீட்டுப்பாடம் செய்ய உதவும், தேர்வுக்கு தயாராக உதவும், புதிய தலைப்புகளை கற்றுக்கொள்ள உதவும்படி வடிவமைக்கப்பட்டு உள்ளது.

இந்த புதிய ஸ்டடி மோட் அம்சம் ஆனது சாட்ஜிபிடி-யில் லாக்-இன் செய்யும் அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ப்ரீ, பிளஸ், ப்ரோ மற்றும் டீம் அடுக்குகளில் கிடைக்கும் இந்த அம்சம் அடுத்த சில வாரங்களில் சாட்ஜிபிடி எஜூ (ChatGPT Edu) அடுக்கின் கீழ் சேர்க்கவும் ஓப்பன்ஏஐ நிறுவனம் திட்டமிட்டுள்ளது

இந்த புதிய ஸ்டடி மோட் ஆனது சாட்ஜிபிடி டூல்ஸ் மெனுவில் காணலாம். அதில் கான்வாஸ் (Canvas) மற்றும் டீப் ரிசர்ச் (Deep Research) ஆகியவையும் இடம்பெற்றுள்ளன. அங்கே ஸ்டடி அன்ட் லேர்ன் (Study and Learn) என்கிற விருப்பம் இருக்கும். அதை தேர்ந்தெடுப்பதன் மூலம் ஸ்டடி மோட்-ஐ எனேபிள் செய்யலாம்.

இதை ஆன் செய்த பின்னர் ஏஐ ஆனது கேள்விகளுக்கு நேரடி பதில்களை வழங்குவதை நிறுத்திவிட்டு, அதற்கு பதிலாக பயனரை தீர்வை கொண்டு வர ஈடுபடுத்தும். ஓப்பன் ஏஐ நிறுவனத்தின் இந்த புதிய டூல், நிறுவனத்தின் டெவலப்பர்களால் எழுதப்பட்ட தனிப்பயன் அமைப்பு வழிமுறைகளால் (Custom system instructions) இயக்கப்படுகிறது

இந்த வழிமுறைகள் ஆனது ஆசிரியர்கள், விஞ்ஞானிகள் மற்றும் கற்பித்தல் நிபுணர்களுடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளன. இதன்கீழ் ஸ்டடி மோட் ஆனது சாக்ரடிக் கேள்வி கேட்பு கொள்கையின் அடிப்படையில் உரையாடல் அடிப்படையிலான படிப்பு முறையை பயன்படுத்துகிறது. தகவல்களை குறுகிய பிரிவுகளாக பிரிக்கிறது, திறன் நிலை மற்றும் பயனரின் தரத்தின் அடிப்படையில் பாடங்களை வழங்குகிறது.

மேலும் பயனரின் முன்னேற்றத்தை பகுப்பாய்வு செய்ய வினாடி வினாக்கள் மற்றும் திறந்த கேள்விகளை பயன்படுத்துகிறது. எளிமையாக ஆன் செய்வது போலவே, இந்த ஸ்டடி மோட்-ஐ ஒரே கிளிக்கில் ஆப் செய்யவும் முடியும். இருப்பினும், இந்த புதிய மோட் ஆனது எந்தவொரு பெற்றோர் கட்டுப்பாடு அல்லது அக்கவுண்ட் லாக் அமைப்புடன் வரவில்லை, அதாவது மாணவர்கள் சாட்ஜிபிடி வழியாக பதில்களை பெற விரும்பினால், அதை தடுக்க எந்த வழிமுறையும் இல்லை!

சாட் ஜிப்பிடி தொடர்பான மற்ற முக்கிய தகவல்களை பொறுத்தவரை ஓப்பன்ஏஐ நிறுவனமானது அதன் அடுத்த ஏஐ மாடல் ஆன சாட்ஜிபிடி 5 (ChatGPT 5) வெர்ஷனை 2025 ஆகஸ்ட் மாதத்தில் வெளியிட திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கிடைக்கப்பட்ட அறிக்கையின்படி, சாட்ஜிபிடி 5 மாடல் ஆனது பேஸ் வேரியண்ட் (Base), நானோ வேரியண்ட் (Nano) மற்றும் மினி வேரியண்ட் (Mini) என மொத்தம் 3 வகைகளில் வெளியாகும். இது ஜிபிடி-சீரிஸ் மற்றும் ஓ-சீரிஸ் இரண்டையும் ஒன்றிணைத்து, சொந்த பகுத்தறிவு திறன் கொண்ட ஒருங்கிணைந்த மாடல் ஆக வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
New Study Mode Introduced in ChatGPT OpenAI Gives Best Things to Students But No Parental Control
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X