மொபைல்களின் ரேடியோ அலைவரிசையை எலிகள் மீது வெளிப்படுத்தி சோதனை..!

Written By:

முன்பெல்லாம் தூங்கி எழுந்ததும் 'பேஸ்ட்' எங்கே..? 'பிரஷ்' எங்கே..? என்று தேடுவோம். ஆனால், இப்போதெல்லாம் அரை தூக்கத்தில் இருந்தாலும்கூட மொபலை சரியாக தேடி கண்டுப்பிடித்து 'நொண்ட' ஆரம்பித்து விடுகிறோம். அந்த அளவிற்கு ஒவ்வொருவரும் தத்தம் ஸ்மார்ட்போன்களோடு பின்னிப்பிணைந்து வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறோம்..!

படுக்கையில் மொபைல் பயன்படுத்தாமல் இருப்பது, தலையணைக்கு அருகில் மொபலை வைத்து உறங்காமல் இருப்பது, மொபைல்களை அதிகப்படியாக பயன்படுத்தாமல் அளவாக பயன்படுத்துவது என சிலர் மொபைல்கள் மூலம் ஏற்படும் கேடுகளை அறிந்து செயல்பட்டாலும் பெரும்பாலனோர்கள் மொபைல்களை ஒரு நண்பனாகவே பார்க்கிறார்கள்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
சர்ச்சை :

#1

கண் பார்வை தொடங்கி மூளை, இதயம், ஆண்மை குறைவு வரையிலாக மொபைல் போன்கள் எப்படி சுகதார தாக்கங்களை ஏற்படுத்துகிறது என்பது ஒரு நீண்ட கால சர்ச்சையாகும்.

மொபைல் போன்கள் - புற்றுநோய் :

#2

அதனை மனதிற்க் கொண்டு சமீபத்தில் மொபைல் போன்கள் மற்றும் புற்றுநோய் ஆகிய இரண்டிற்கும் இடையே ஒரு இணைப்பு உள்ளது என்பது பற்றிய ஒரு பெரிய ஆய்வு நிகழ்த்தப்பட்டது.

ஆண் எலிகள் :

#3

அமெரிக்க தேசிய நச்சுயியல் திட்டத்திற்கான ஆராய்ச்சியாளர்கள் நடத்திய இந்த ஆய்வில் மொபைல் போன்களில் வெளிப்படும் ரேடியோ அலைவரிசைகள் ஆண் எலிகள் மீது வெளிப்படுத்தி சோதனை செய்துள்ளனர்.

இரண்டு வகையான கட்டிகள் :

#4

இந்த வெளிப்பாட்டு ஆய்வை தொடர்ந்து, எலிகளின் மூளை மற்றும் இதயத்தில் இரண்டு வகையான கட்டிகள் உருவாகுவது மிகவும் குறைவான வாய்ப்பே உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

சோதனை செய்யப்படாத எலி :

#5

மறுபக்கம் ரேடியோ அலைவரிசைகள் வெளிப்படுத்தி சோதனை செய்யப்படாத எலிகளுக்கு எந்த விதமான மூளை மற்றும் இதய கட்டிகள் பாதிப்பும் ஏற்படவில்லை.

இரண்டு ஆண்டு :

#6

சுமார் 2500-க்கும் மேற்பட்ட எலிகளை கொண்டு, கடந்த இரண்டு ஆண்டு காலமாக இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

விளக்கம் :

#7

அனைத்து வகையான வயது தரப்பினரிடமும் மிகவும் பரவலாக உள்ள மொபைல் போன் பயன்பாடு (மொபைல் போன்களில் வெளிப்படும் ரேடியோ அலைவரிசைகள்) மூலம் ஏற்படும் சுகாதார பாதிப்புகள் என்பது மிகவும் குறைவு என்று ஆராய்ச்சியாளர்கள் விளக்கமளித்துள்ளனர்.

ஆழமான பகுப்பாய்வு :

#8

மொபைல் போன் மற்றும் புற்றுநோய் ஆகியவற்றின் இணைப்பு பற்றிய இந்த ஆய்வு தான் இதுவரையிலாக நிகழ்த்தப்பட்ட ஆய்வுகளில் மிக ஆழமான பகுப்பாய்வு என்று கருதப்படுகிறது.

கருத்து :

#9

'மொபைல் போன்கள் மூலம் ஏற்படும் சுகாதார பாதிப்புகள் சார்ந்த நீண்ட கால சர்ச்சைக்கு இதுதான் சரியான முடிவாக இருக்க முடியும் என்று நினைக்கிறேன்' என்று அமெரிக்க தேசிய நச்சுயியல் திட்டத்திற்கான முன்னாள் ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான ரான் மேல்னிக் கருத்துக் கூறியுள்ளார்.

விமர்சனம் :

#10

இதற்கு முன்பு நடத்தப்பட்ட புற்றுநோய் மற்றும் மொபைல் போன் பயன்பாடு இடையேயான இணைப்பு பற்றிய ஆய்வு கருத்துகள் அதன் ஆய்வு முறை மற்றும் சிறிய மாதிரி அளவுகள் போன்றவைகளால் விமர்சிக்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.

பின் விளைவு :

#11

படுக்கையில், அதிகப்படியான மொபைல் பயன்பாடு மூலம் ஏற்படும் மோசமான பின் விளைவுகளைப் பற்றி படிக்க இங்கே கிளிக் செய்யவும்..!

மேலும் படிக்க :

#12

மொபைல்போன்கள் விந்தணுக்களை 'எப்படியெல்லாம்' பாதிக்கிறது..!?


தலையணையோடு மொபைலை வைத்துக்கொண்டு தூங்குபவரா நீங்கள்.?!


கம்ப்யூட்டர் 'நோண்டுபவரா' நீங்கள்..? உஷார்..!

தமிழ் கிஸ்பாட் :

#13

மேலும் இதுபோன்ற அறிவியல் தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
New study links high-mobile usage to cancer. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot