விண்வெளியில் வீசப்பட்ட விசித்திரமான அறுகோண வைரங்கள்! பூமியில் வந்து விழுமா?

|

தலைப்பை படித்த உடனேயே.. "யுரேனஸ் & நெப்டியூனில் பொழியும் வைர மழையை பற்றி எங்களுக்கு ஏற்கனவே தெரியுமே!" என்று அவசரப்பட்டு விட வேண்டாம்!

விண்வெளியில் வைரம் (Diamonds in Space) என்பதெல்லாம் பழைய கதை.. கிட்டத்தட்ட அனைவருக்கும் தெரிந்த கதை என்று எங்களுக்கே தெரியும்!

நாம் இங்கே பார்க்கப்போவது விண்வெளியில் சிதறவிடப்பட்டுள்ள மிகவும் விசித்திரமான, மிக மிக கடினமான அறுகோண வைரங்களை பற்றி!

இது ஒன்றும் அறிவியல் புனைக்கதை அல்ல.. அறிவியல் கண்டுபிடிப்பு!

இது ஒன்றும் அறிவியல் புனைக்கதை அல்ல.. அறிவியல் கண்டுபிடிப்பு!

கொஞ்சம் கற்பனை செய்து பாருங்களேன்! நீர் துளிகளுக்கு பதிலாக வானத்தில் இருந்து "குட்டி குட்டி" வைர கற்கள் மழையாக பொழிந்தால் எப்படி இருக்கும்?

அடடா.. சொல்லும் போதே எவ்வளவு ஆனந்தமாக இருக்கிறது அல்லவா?

அதே சமயம் இதெல்லாம் அறிவியல் புனைகதைகளில் மட்டுமே நடக்கும் என்கிற சலிப்பும் ஏற்படுகிறது அல்லவா? அதுதான் இல்லை!

பிளாஸ்டிக்கை வைரங்களாக மாற்றிய விஞ்ஞானிகள்! இனி வைரத்தின் விலை குறையுமா?பிளாஸ்டிக்கை வைரங்களாக மாற்றிய விஞ்ஞானிகள்! இனி வைரத்தின் விலை குறையுமா?

விண்வெளியில் வீசப்பட்ட வைரங்கள்!

விண்வெளியில் வீசப்பட்ட வைரங்கள்!

விண்வெளி, விண்கற்கள் தொடர்பான ஒரு புதிய ஆராய்ச்சியானது "விண்வெளியில் மிதக்கும்" அறுகோண வைரங்களை அடையாளம் கண்டுள்ளது.

அந்த ஆய்வானது, சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு குட்டி கிரகம் (Dwarf planet) ஒரு பெரிய சிறுகோளுடன் (Large asteroid) மோதியதின் விளைவாக, விசித்திரமான அறுகோண வைரங்கள் விண்வெளியில் வீசப்பட்டிருக்கலாம் என்கிறது!

அந்த

அந்த "அறிய வகை" வைரத்தின் பெயர் என்ன?

விண்வெளியில் மிதக்கும் இந்த அறுகோண வைரங்களை (Hexagonal diamonds), விஞ்ஞானிகள் - லோன்ஸ்டேலைட் (Lonsdaleite) என்று அழைக்கிறார்கள்!

இந்த அறுகோண வைரங்கள், ஒரு குட்டி கிரகத்தின் மேன்டிலில் (Mantle) இருந்து வரக்கூடிய அரிய வகை விண்கற்களும் (Rare class of Meteorites) கூட!

செவ்வாய் கிரகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பச்சை நிற பொருள்! இதெப்படி சாத்தியம்?செவ்வாய் கிரகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பச்சை நிற பொருள்! இதெப்படி சாத்தியம்?

சரியாக 1967 இல்..!

சரியாக 1967 இல்..!

லோன்ஸ்டேலைட் என்று அழைக்கப்படும் இந்த விண்வெளி வைரங்கள் ஆனது முதன்முதலில் 1967-இல் கேன்யன் டையப்லோ (Canyon Diablo) என்கிற விண்கல்லில் கண்டுபிடிக்கப்பட்டது.

அதற்கு பிரிட்டிஷ் படிகவியலாளரான டேம் கேத்லீன் லான்ஸ்டேலின் (Dame Kathleen Lonsdale) பெயரே சூட்டப்பட்டது.

வழக்கமான வைரங்களை விட..?

வழக்கமான வைரங்களை விட..?

கனசதுர அமைப்பை கொண்ட வழக்கமான வைரங்களை போல் இல்லாமல் லோன்ஸ்டேலைட்டின் அறுகோண வடிவமானது, அதை மிக மிக கடினமான ஒரு வைரமாக மாற்றுகிறது.

இந்த கண்டுபிடிப்பின் மூலம் அல்ட்ரா-ஹார்ட் பொருட்களை உருவாக்கும் புதிய உற்பத்தி நுட்பங்கள் "எழுதப்பட்டாலும்" ஆச்சரியப்படுவதற்கில்லை!

விண்வெளியில் சிக்கிய விண்வெளியில் சிக்கிய "சிலந்தி" உருவம்! புகைப்படம் எடுத்த நாசா!

தீவிரமான வெப்பம்.. பின் குளிர்ச்சியான சூழல்.. அதன் விளைவாக வைரம்!

தீவிரமான வெப்பம்.. பின் குளிர்ச்சியான சூழல்.. அதன் விளைவாக வைரம்!

விண்கற்களில் உள்ள லோன்ஸ்டேலைட் ஆனது அதிக வெப்பநிலை மற்றும் அதிக அழுத்தத்தின் கீழ் ஒரு சூப்பர் கிரிட்டிகல் திரவத்திலிருந்து (Supercritical liquid) உருவாகலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

அம்மாதிரியான தீவிரமான சூழல், கிராஃபைட்டின் (Graphite) வடிவத்தையும் அமைப்பையும் தக்கவைத்துக்கொள்ள, லோன்ஸ்டேலைட்டை அனுமதித்து இருக்கலாம்!

பின்னர் அந்த விண்கல்லின் சூழல் குளிர்ச்சியடைந்ததும், அழுத்தம் குறைக்கப்பட்ட லோன்ஸ்டேலைட் ஆனது "பகுதியளவு" வைரமாக (Partially diamond) மாற்றப்படலாம்!

இதை நகலெடுக்கலாம்?!

இதை நகலெடுக்கலாம்?!

லோன்ஸ்டேலைட் வைரங்கள் உருவாகும் அதே வழிமுறையின் கீழ் அசாதாரண கனிமத்தை உற்பத்தி செய்வதற்கான செயல்முறையை கண்டுபிடிக்க முடியும் என்றும் விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்!

இதுகுறித்து பேசும்போது, "இயற்கையானது - தொழில்துறையால் நகலெடுக்க கூடிய செயல்முறையை நமக்கு வழங்கி உள்ளது" என்று ஆஸ்திரேலியாவில் உள்ள மோனாஷ் பல்கலைக்கழகத்தின் குழுத் தலைவரும், புவியியலாளருமான ஆண்டி டாம்கின்ஸ் கூறி உள்ளார்.

NASA-வையே நக்கல் அடிக்கும் சீனா! அவ்ளோ பெரிய ஆள் ஆகிடுச்சா?NASA-வையே நக்கல் அடிக்கும் சீனா! அவ்ளோ பெரிய ஆள் ஆகிடுச்சா?

யுரேனஸ் & நெப்டியூனில் பொழியும் வைர மழையை பொறுத்தவரை?

யுரேனஸ் & நெப்டியூனில் பொழியும் வைர மழையை பொறுத்தவரை?

ஒருவேளை உங்களுக்கு யுரேனஸ் & நெப்டியூனில் பொழியும் வைர மழையை பற்றி தெரியதென்றால், அதைப்பற்றி கூறவும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.

யுரேனஸ் மற்றும் நெப்டியூன் போன்ற கிரகங்களில் உள்ள ஹைட்ரஜன் மற்றும் கார்பன் போன்ற தனிமங்கள் ஆனது தீவிரமான அழுத்தத்தின் (Extreme pressure) விளைவாக 'கம்ப்ரெஸ்' செய்யப்பட்டு, திடமான வைரங்களாக மாறுகின்றன. அதை விட சுவாரசியமான விடயம் என்னவென்றால்.. அங்கே அந்த வைரங்கள் மழையாகவும் பொழிகின்றன!

Photo Courtesy: NASA, Wikipedia, Amazon

Best Mobiles in India

English summary
New Study Found Collision Of Two Planets Throw Strange Hexagonal Diamonds in Space

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X