ஸ்மார்ட்போனை அதிகமாக யூஸ் செய்தால் வேகமாக வயசாகிவிடுமா? உண்மையை உடைத்த ஆராய்ச்சி!

|

ஸ்மார்ட்போனை அதிகமாக யூஸ் செய்தால் வேகமாக வயசாகிவிடுமா? என்ற இந்த தலைப்பைப் படித்ததும் உங்களில் பெரும்பாலானோர் இதெல்லாம் சும்மா கட்டுக்கதைப்பா, அது எப்படி அதிகமா ஸ்மார்ட்போன் (Smartphone) பயன்படுத்தினால் வேகமா வயதாகும் என்று கட்டாயம் நினைத்திருப்பீர்கள். உண்மையை சொல்லப் போனால், முதலில் நாங்களும் அப்படி தான் நினைத்தோம். ஆனால், இது பகிரங்கமான உண்மை என்பதை ஒரு ஆராய்ச்சியின் முடிவுகள் நிரூபித்துள்ளது.

உங்கள் ஸ்மார்ட்போன் இல்லாமல் உங்களால் இருக்க முடியுமா?

உங்கள் ஸ்மார்ட்போன் இல்லாமல் உங்களால் இருக்க முடியுமா?

நம்முடைய வாழ்க்கை இப்போது 24/7 மணிநேரமும் கேட்ஜெட்களால் முற்றிலுமாக சூழப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன், இயர்போன்ஸ், ஸ்மார்ட்வாட்ச், லேப்டாப், ஸ்மார்ட் பேண்ட் என்று பல கேஜெட்டுகள் நம் அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாகிவிட்டன. இந்த கேட்ஜெட்கள் இல்லாமல் இனி நம்மால் இருக்க முடியுமா? என்றால், கட்டாயமாக அத்தகைய வாழ்க்கையை நம்மால் கற்பனை செய்து பார்க்கக் கூட முடியாத நிலைக்கு அவற்றுடன் ஒன்றிவிட்டோம் என்பது தான் உண்மை.

ஸ்மார்ட்போன் அதிகமாக யூஸ் செய்தால் வேகமாக வயதாகிவிடுமா?

ஸ்மார்ட்போன் அதிகமாக யூஸ் செய்தால் வேகமாக வயதாகிவிடுமா?

இப்படி, அதிகமாக நம்முடன் ஒன்றிவிட்ட இந்த கேஜெட்களை நீங்கள் அதிகமாகப் பயன்படுத்தினால், உங்களுடைய வயது நீங்கள் நினைப்பதை விட வேகமாக வயதாகிவிடும் என்று நாங்கள் சொன்னால் நம்புவீர்களா? நம்புங்கள் இது உண்மை என்கின்றது சமீபத்திய ஆராய்ச்சியின் முடிவு. ஆம், அதிகமாக ஸ்மார்ட்போன் அல்லது லேப்டாப் போன்ற சாதனங்களை மக்கள் அளவுக்கு மீறிப் பயன்படுத்தும் போது, அவர்களின் வயது வேகமாக நகர்கிறது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

உறங்கும் போது உங்கள் அருகில் Smartphone-ஐ வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா? உஷார் மக்களே!உறங்கும் போது உங்கள் அருகில் Smartphone-ஐ வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா? உஷார் மக்களே!

உங்கள் போனின் ப்ளூ லைட் காரணமாக தான் வேகமாக வயதாகிறதா?

உங்கள் போனின் ப்ளூ லைட் காரணமாக தான் வேகமாக வயதாகிறதா?

"ஃபிரான்டியர்ஸ் இன் ஏஜிங்" (Frontiers in Aging) என்ற இதழில் வெளியிடப்பட்ட ஒரு விலங்கு மாதிரி ஆய்வு, ஸ்மார்ட்போன்கள் மற்றும் லேப்டாப்கள் போன்ற கேஜெட்களில் இருந்து வெளிப்படும் ப்ளூ லைட் காரணமாக மனிதர்களின் வயது வேகமாக நகர்கிறது அல்லது பாதிக்கப்படுகிறது என்பதை ஒளிவு மறைவின்றி தெளிவாக காண்பித்துள்ளது. இந்த சாதனங்களை அதிகமாகப் பயன்படுத்தும் போது நம் கண்பார்வை மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் வேகமாகப் பாதிக்கிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

புதிய ஆராய்ச்சியின் மூலம் வெளியான உண்மை இது தானா?

புதிய ஆராய்ச்சியின் மூலம் வெளியான உண்மை இது தானா?

இது நமது வயது தொடர்பான செயல்முறையையும் பாதிக்கிறது என்று சமீபத்திய ஆய்வு கூறுகிறது. ஆம், வயதான பிறகு தோன்றக் கூடிய சிக்கல்கள் எல்லாம், இப்போது வேகமாக முன்கூட்டியே நிகழ்வதாகக் கூறப்படுகிறது. இதற்கு மனித உடலில் நடக்கக்கூடிய ஒரு வேதியியல் மாற்றமும் முக்கிய காரணமாக இருக்கிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஒரேகான் ஸ்டேட் யுனிவர்சிட்டியின் ஆய்வின் மூலம் இது நிரூபிக்கப்பட்டுள்ளது.

உங்க WiFi கனெக்ஷன் திடீர் திடீர்னு கட் ஆகுதா? அப்போ இதான் காரணம்! இதை சரி செய்வது எப்படி?உங்க WiFi கனெக்ஷன் திடீர் திடீர்னு கட் ஆகுதா? அப்போ இதான் காரணம்! இதை சரி செய்வது எப்படி?

எந்த விலங்கை வைத்து இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டது தெரியுமா?

எந்த விலங்கை வைத்து இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டது தெரியுமா?

டிவி, லேப்டாப் மற்றும் ஸ்மார்ட்போன்கள் போன்ற அன்றாட சாதனங்களில் இருந்து வெளிப்படும் ப்ளூ லைட் ஒளியை அதிகமாகப் பார்க்கும் போது, நம் உடலில் உள்ள பலதரப்பட்ட செல்களில் தீங்கு விளைவிக்கும் நிகழ்வுகள் நிகழ்கிறதாம். இது தோல் மற்றும் கொழுப்பு செல்கள் முதல் உணர்ச்சி நியூரான்கள் வரை அனைத்தையும் பாதிப்படையச் செய்கிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கண்டுபிடிப்பை ஆராய்ச்சியாளர்கள், ஈக்களை வைத்து கண்டுப்பிடித்துள்ளனர் என்பது விசித்திரம்.

ப்ளூ லைட் வெளிச்சத்திற்கு வெளிப்படும் ஈக்கள் என்ன ஆனது?

ப்ளூ லைட் வெளிச்சத்திற்கு வெளிப்படும் ஈக்கள் என்ன ஆனது?

ப்ளூ லைட் வெளிச்சத்திற்கு வெளிப்படும் ஈக்கள், நீண்ட காலத்திற்கு நிலையான இருளில் வைக்கப்பட்டிருக்கும் ஈக்களுக்கு நேர்மாறாக மன அழுத்த-பாதுகாப்பு மரபணுக்களை வேகமாக 'ஆன்' செய்கிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது ஈக்களை வேகமாக வயதடைய செய்கிறது என்பதைப் புரிந்துகொள்வதற்காக, இரண்டு வாரங்களுக்கு ப்ளூ லைட் ஒளியில் வெளிப்படும் ஈக்களில் உள்ள வளர்சிதை மாற்றங்களின் அளவை விஞ்ஞானிகள், முழு இருளில் இருந்த ஈக்களுடன் ஒப்பிட்டுப் பார்த்துள்ளனர்.

SBI வாடிக்கையாளர்கள் இனி WhatsApp மூலம் பேங்கிங் விபரங்களை அறியலாம்! எப்படி தெரியுமா?SBI வாடிக்கையாளர்கள் இனி WhatsApp மூலம் பேங்கிங் விபரங்களை அறியலாம்! எப்படி தெரியுமா?

ப்ளூ லைட் ஈக்கள் வேகமாக வயதாகி இறுதியில் என்ன ஆனது தெரியுமா?

ப்ளூ லைட் ஈக்கள் வேகமாக வயதாகி இறுதியில் என்ன ஆனது தெரியுமா?

இறுதியில், ஈக்களின் ஹெட் செல்களை ஆய்வு செய்த போது உண்மை அப்பட்டமாகத் தெரியவந்துள்ளது. இரண்டு ஈக்களுக்கும் இடையில் உள்ள வளர்சிதை மாற்றங்களின் எண்ணிக்கை கணிசமாக வேறுபடுவதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். குறிப்பாக, குளுட்டமேட் அளவுகள் குறைந்துவிட்டன, ஆனால் சக்சினேட் அளவுகள் அதிகரித்தன என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, ப்ளூ லைட் ஒளியிலிருந்த ஈக்களில் உள்ள செல்கள் வேகமாகச் செயல்பட்டதால், இருளில் இருந்த ஈக்களை விட ப்ளூ லைட் ஒளியில் இருந்த ஈக்கள் முன்கூட்டியே இறந்துவிட்டன.

மனிதர்களுக்கும் இதே நிலைமை தான் என்று நிரூபிக்கப்பட்டதா?

மனிதர்களுக்கும் இதே நிலைமை தான் என்று நிரூபிக்கப்பட்டதா?

இதன் மூலம் ப்ளூ லைட் ஒளி வயதானதை விரைவுபடுத்துகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். இதேபோல், ப்ளூ லைட் ஒளி வெளிப்பாட்டை அதிகமாகச் சந்திக்கும் மனிதர்களின் உடலிலும் மன அழுத்த ஹார்மோனைத் தூண்டும் விளைவுகள் வேகமாக நடப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இது செல்களின் செயல்பாட்டை முன்பே தூண்டி, நம்மை வேகமாக வயதாக்கி, முதுமைத் தோற்றமளிக்கச் செய்கிறது என்று இந்த ஆராய்ச்சியின் முடிவுகள் தெரிவித்துள்ளது. இது இறுதியில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
New Study Claims Over Usage Of Smartphone Or Laptops Can Make You Age Faster

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X