Home
News

எந்த போனுக்கும் உத்திரவாதம் இல்ல.. உடனே DELETE செய்யவும்.. 14 App-களின் பட்டியலை வெளியிட்டு Google எச்சரிக்கை!

ஸ்பின்ஓகே (SpinOK) என்று அழைக்கப்படும் மிகவும் மோசமான ஸ்பைவேரை (Dangerous Spyware) கொண்ட 101 ஆண்ட்ராய்டு ஆப்கள் கூகுள் பிளே ஸ்டோரில் (Google Play Store) இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளன. அவைகளில் அதிகம் டவுன்லோட் செய்யப்பட்ட 14 ஆப்களின் பட்டியலை கூகுள் வெளியிட்டுள்ளது.

அந்த பட்டியலில் உள்ள 14 ஆப்களில் ஏதேனும் ஒன்றை நீங்கள் பயன்படுத்தினாலும் கூட அல்லது உங்கள் ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்து வைத்து இருந்தாலும் கூட, அதை உடனே டெலிட் அல்லது அன்இன்ஸ்டால் (Delete OR Uninstall) செய்யுமாறு கூகுள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

DELETE செய்யவும்.. 14 App-களின் பட்டியலை வெளியிட்டு Google எச்சரிக்கை!

டெலிட் செய்யவில்லை என்றால் என்ன ஆகும்? டாக்டர்.வெப் (Dr.Web) என்கிற சாஃப்ட்வேர் நிறுவனத்தின் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, ஸ்பின்ஓகே ஸ்பைவேர் ஆனது மொபைல் போன்களில் சேமிக்கப்பட்டுள்ள பெர்சனல் தகவல்களை திருடி, அவைகளை ரிமோட் சர்வர்களுக்கு (Remote Servers) அனுப்பும் திறனுடையது.

ஆர்வத்தை தூண்டும்.. ஆனால் தொட்டுவிட்டால் காலி! ஸ்பின்ஓகே ஸ்பைவேரை உள்ளடக்கிய பெரும்பாலான ஆப்கள் ஆனது மினி கேம்ஸ் (Mini Games), பரிசுகள் மற்றும் வெகுமதிகளை (Prizes and Rewards) வழங்குவதாக கூறி பயனர்களின் ஆர்வத்தை தூண்டும்படி வடிவமைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் அவைகள் பேக்கிரவுண்டில் பயனர்களின் அனைத்து செயல்பாடுகளையும் கண்காணிக்கிறது.

ஸ்பின்ஓகே ஸ்பைவேரால் பாதிக்கப்பட்டுள்ள 101 ஆண்ட்ராய்டு ஆப்களை கண்டறிந்து, அதைப்பற்றி கூகுளுக்கு புகார் அளித்ததும் டாக்டர்.வெப்பின் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் தான் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. அவைகளில் அதிகம் பேரால் டவுன்லோட் / இன்ஸ்டால் செய்யப்பட்ட 14 ஆப்களின் பட்டியல் இதோ:

01. நாய்ஸ்: வீடியோ எடிட்டர் வித் ம்யூசிக் (Noizz: Video editor with music)
02. ஸப்யா: ஃபைல் டிரான்ஸ்ஃபர், ஷேர் (Zapya: File Transfer, Share)
03. விஃப்ளை: த்வதேவ் எடிட்டர் & வீடியோ மேக்கர் (VFly: Video editor & video maker)
04. எம்விபிட்: எம்வி வீடியோ ஸ்டேட்டஸ் மேக்கர் (MVBit: MV video status maker)

05. பியுகோ: வீடியோ மேக்கர் & வீடியோ எடிட்டர் (Biugo: Video maker & video editor)
06. கிரேஸி ட்ராப் (Crazy Drop)
07. கேஷ்ஸைன்: எர்ன் மணி ரிவார்ட் (Cashzine: Earn money reward)
08. ஃபிஸோ நோவல்: ரீடிங் ஆன்லைன் (Fizzo Novel: Reading Offline)

09. கேஷ்இஎம்: கெட் ரிவாட்ஸ் (CashEM: Get Rewards)
10. டிக்: வாட்ச் டூ எர்ன் (Tick: Watch to earn)
11. வைப் டிக் (Vibe Tik)
12. மிஷன் குரு: ப்ரெயின் பூஸ்ட் (Mission Guru: Brain Boost)
13. லக்கி ஜாக்பாட் புஷ்ஷர் (Lucky Jackpot Pusher​)
14.டொமினோ மாஸ்டர் (Domino Master)

மேற்கண்ட 14 ஆண்ட்ராய்டு ஆப்களுமே, கூகுள் பிளே ஸ்டோரில் அதிகபட்சமாக 10 கோடிக்கும் மேலான டவுன்லோட்களையும், குறைந்தபட்சம் 50 லட்சத்திற்க்கும் மேற்பட்ட டவுன்லோட்களையும் பெற்றுள்ளன. இவைகளில் ஏதேனும் ஒன்றை டவுன்லோட் சேட்டை பயனர்களில் நீங்களும் ஒருவர் என்றால் அதை உடனே டெலிட் செய்து விடவும்!

More from GizBot

Best Mobiles in India

English summary
New Spyware Found in Android Apps Google Alerts Users to Delete Uninstall These 14 Apps Immediately
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X