Home
News

கோடைகாலத்தில் குளு குளுன்னு இருக்க புதிய பாக்கெட் AC அறிமுகம் செய்த பிரபல நிறுவனம்.! விலை எவ்வளவு தெரியுமா?

இந்தியாவில் பல முன்னணி நிறுவனங்கள் மனிதர்களுக்கு பயன்படும் வகையில் பல அசத்தலான சாதனங்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக சோனி, சியோமி, ஒன்பிளஸ், சாம்சங் போன்ற நிறுவனங்கள் புதிய அதிநவீன சாதனங்களை அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகின்றன என்பது
குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சோனி நிறுவனம் மனிதர்களுக்க பயன்படும் வகையில் புதிய சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. அதாவது இந்நிறுவனம் குளிர்ச்சியாக
இருக்கக்கூடிய வகையில் சட்டையில் வைத்துக்கொள்வது போன்ற பதிய ஏசியை தான் தற்போது அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக Reon Pocket Ac 2 என்ற பெயரில் இந்த சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கோடைகாலத்தில் குளு குளுன்னு இருக்க புதிய பாக்கெட் AC அறிமுகம்.!

அதாவது கடந்த ஆண்டு சோனி நிறுவனம் சட்டையில் அணியக்கூடிய ஏர் கண்டிஷனரை ரியான் பாக்கெட் என்ற பெயரில் அறிமுகம் செய்தது. தற்போது
அதன் அடுத்த வெர்ஷனை வெளியிட்டுள்ளது சோனி. குறிப்பாக Reon Pocket Ac 2 என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய சாதனம் அதன் முந்தைய வெர்ஷனை போலவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய மாடலின் குளிரூட்டும் திறன்கள் மேம்படுத்தப்பட்டு உள்ளதாகவும், உடற்பயிற்சிகளுக்கு மிகவும்
பொருத்தமானது என நிறுவனம் கூறியுள்ளது. மேலும் இந்த புதிய சோனி Reon Pocket Ac 2 சாதனம் ஆனது பொது மக்களின் பயன்பாட்டுக்கு மற்றும் பயணத்துக்கு பெரும் உபயோகமாக இருக்கும் என்று அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோடைகாலத்தில் குளு குளுன்னு இருக்க புதிய பாக்கெட் AC அறிமுகம்.!

மேலும் இந்த புதிய சாதனத்தை கோடைக்காலத்தில் குளிர்ச்சியாக வைத்திருப்பதோடு, இதையே குளிர் காலத்தில் வெப்பம் இயக்கியாகவும் பயன்படுத்தலாம் என்று கூறப்படுகிறது. அதேபோல் உடல் மேற்பரப்பில் தொடர்புடையதால் இதன் இயந்திர பாகங்கள் துருப்பிடிக்காத வண்ணம் எஃகு கொண்டு உருவாக்கட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கோடைகாலத்தில் குளு குளுன்னு இருக்க புதிய பாக்கெட் AC அறிமுகம்.!

குறிப்பாக மொபைல் செயலி கொண்டு இந்த சாதனத்தை கட்டுப்படுத்த முடியும் என்று சோனி நிறுவனம் கூறியுள்ளது. அதேபோல் இது வியர்வை-புரூஃப்பாக தயாரிக்கப்பட்டுள்ளாதாக சோனி நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது இந்த சாதனம் ஜப்பானில் மட்டுமே கிடைக்கிறது. கூடிய விரைவில் இந்த சாதனம் அனைத்து சந்தைகளிலும் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்பு Sony Reon Pocket Ac 2 விலை 14,850 யென் (இந்திய மதிப்பில் ரூ. 10,300).

கடந்த மாதம் இந்நிறுவனம் 'Sony NW-ZX707' Walkman சாதனத்தை அறிமுகம் செய்தது.இது ஹை-டெக் தொழில்நுட்பத்துடன், மிகவும் ஸ்லிம்மான டிசைனுடன், டச் வடிவமைப்பை பெற்றுள்ளது. பார்த்ததும் நமது கண்களை இந்த வாக்மேன் கவர்கிறது. உடனே வாங்க வேண்டும் என்ற ஆசையைத் தூண்டுகிறது. ஆனால், இதன் விலையைப் பார்த்தவுடன் நமக்குத் தோன்றிய ஆசைகள் எல்லாம் பேக்கில் ஓடிவிடுகிறது.

கோடைகாலத்தில் குளு குளுன்னு இருக்க புதிய பாக்கெட் AC அறிமுகம்.!

புது Sony Walkman ஆனது 5' இன்ச் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இது வைஃபை இணக்கத்தன்மை உடன் வருகிறது. இது பயனர்களுக்கு இசையை ஸ்ட்ரீம் செய்யவும் மற்றும் மற்ற விஷயங்களை டவுன்லோட் செய்யவும் அனுமதிக்கிறது. இது நேர்த்தியான வடிவமைப்புடன் உயர்தர சவுண்ட் அனுபவத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

சோனியின் ஒரிஜினல் மியூசிக் பிளேயர் ஆப்ஸை பயன்படுத்தும் போது மட்டுமே இது 25 மணிநேர பேட்டரி ஆயுளுடன் வருகிறது. இந்த Sony NW-ZX707 Wlakman விலை பற்றிப் பார்க்கையில், இது ரூ. 69,990 விலையில் இந்தியாவில் இப்போது வாங்கக் கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
New Sony Reon Pocket Ac 2 has been launched at Rs.10,300: Check Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X