15 நாட்கள் கெடு! அதற்குள் SIM தொடர்பான இந்த சேவையை நிறுத்தணும்! Airtel, Jio-விற்கு இந்திய அரசு வார்னிங்!

|

டாட் (DoT) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய அரசாங்கத்தின் தொலைத்தொடர்பு துறையானது (Department of Telecommunications) ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல் மற்றும் வோடாபோன் ஐடியா நிறுவனங்களுக்கான ஒரு புதிய சட்டத்தை அறிவித்துள்ளது.

மேலும் இந்த புதிய சட்டத்தை அடுத்த 15 நாட்களுக்குள் அமல்படுத்த வேண்டும் என்றும் கூறி உள்ளது. அதென்ன சட்டம்? சிம் கார்டு (SIM Card) தொடர்பான சேவை என்றால்.. அதென்ன சேவை? அதை ஏன் நிறுத்த வேண்டும்? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

புதிய சட்டம்!

புதிய சட்டம்!

டெலிகாம் சேவை வழங்குநர்களான ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன்-ஐடியா ஆகிய மூன்று நிறுவனங்களுக்குமே டாட் (DoT) அறிவித்துள்ள இந்த புதிய சட்டம் பொருந்தும்!

அதாவது, சிம் கார்ட்டை மாற்ற விரும்பும் (SIM Swap) அல்லது சிம் கார்ட்டை அப்கிரேட் (SIM Upgrade) செய்ய விரும்பும் வாடிக்கையாளர்களின் எண்களுக்கு கிடைக்கும் எஸ்எம்எஸ் வசதியை (உள்வரும் மற்றும் வெளிச்செல்லும்) நிறுத்துமாறு தொலைத்தொடர்புத் துறை கேட்டுக் கொண்டுள்ளது.

பங்கம் செய்த சிங்கத்தின் பிள்ளை.. Airtel யூசர்களே மனச கல் ஆக்கிக்கோங்க.. இல்ல Jio-க்கு மாறிடுங்க!பங்கம் செய்த சிங்கத்தின் பிள்ளை.. Airtel யூசர்களே மனச கல் ஆக்கிக்கோங்க.. இல்ல Jio-க்கு மாறிடுங்க!

24 மணி நேரத்திற்கு!

24 மணி நேரத்திற்கு!

டாட் வெளியிட்டுள்ள உத்தரவின்படி, ஒரு புதிய சிம் ஆக்டிவேட் ஆன பிறகு, அந்த புதிய சிம் கார்டுகளில் அணுக கிடைக்கும் எஸ்எம்எஸ் சேவை ஆனது 24 மணிநேரம் தடைசெய்யப்பட வேண்டும்.

மேலும் இந்த புதிய வழிகாட்டுதல்களை செயல்படுத்த தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு 15 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

ஏன் இந்த திடீர் நடவடிக்கை?

ஏன் இந்த திடீர் நடவடிக்கை?

டாட் அறிவித்துள்ள இந்த புதிய சட்டம் மற்றும் டெலிகாம் நிறுவனங்களுக்கு கொடுத்துள்ள 15 நாட்கள் கெடு என எல்லாமே வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளே ஆகும்.

இன்னும் புரியும்படி சொல்ல வேண்டும் என்றால் - நாட்டில் நடக்கும் மிகவும் பொதுவான சைபர் கிரைம்களில் ஒன்றான சிம் ஸ்வாப் மோசடிகளின் (SIM swap frauds) அபாயத்தை குறைப்பதையே நோக்கமாக கொண்டுள்ளன!

சத்தம் இல்லாம தூக்கிட்டாங்க! இனிமேல் இந்த Jio பிளானும் கிடைக்காது; முக்கிய நன்மை ஒன்றும் கிடைக்காது!சத்தம் இல்லாம தூக்கிட்டாங்க! இனிமேல் இந்த Jio பிளானும் கிடைக்காது; முக்கிய நன்மை ஒன்றும் கிடைக்காது!

சிம் ஸ்வாப் மோசடி என்றால் என்ன?

சிம் ஸ்வாப் மோசடி என்றால் என்ன?

சிம் ஸ்வாப் என்றால் சிம் கார்டு தொடர்பான ஒரு மோசடி ஆகும். முதலில், மோசடி கும்பலை சேர்ந்தவர்கள் போலியான அழைப்புகள் அல்லது ஃபிஷிங் மூலம் வாடிக்கையாளர்களின் ரகசிய விவரங்களை அறிந்து கொள்வார்கள்.

பின்னர், அந்த விவரங்களை வைத்து ஒரு புதிய சிம் கார்டுக்காக டெலிகாம் சேவை வழங்குனரை அணுகுவார்கள். அவர்களுக்கான சிம் கார்டு வழங்கப்பட்டவுடன், உண்மையான வாடிக்கையாளரிடம் இருக்கும் பழைய சிம் செயலிழந்து விடும் மற்றும் அந்த எண்ணில் உள்ள அனைத்து மொபைல் நம்பர்களும் மோசடி கும்பலின் கையில் சிக்கி விடும்!

மொபைல் நம்பர்கள் மட்டுமல்ல!

மொபைல் நம்பர்கள் மட்டுமல்ல!

சிம் ஸ்வாப் மோசடி வழியாக மொபைல் நம்பர்கள் மட்டுமல்ல, வங்கி மற்றும் கிரெடிட் / டெபிட் கார்டுகளுக்கு கிடைக்கும் ஒடிபி-க்கள் (OTP) போன்ற அனைத்து தகவல்களையும் திருட முடியும். ஒடிபி-க்களை பயன்படுத்தி உங்கள் வங்கி கணக்கில் உள்ள மொத்த பணத்தையும் கூட திருட முடியும்.

கடந்த 2016 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளிலேயே, புதிய சிம் கார்டுகளை வழங்குவதற்க்கான பாதுகாப்பான மற்றும் விரிவான நடைமுறைகளை DoT வெளியிட்டு இருந்தது. அதனொரு பகுதியாக, புதிய சிம் கார்டுகளுக்கான எஸ்எம்எஸ் சேவை 24 மணி நேரத்திற்கு தடை செய்யும் சட்டம் உருவாகி உள்ளது!

இனிமேல் டபுள் கேம் ஆடலாம்.. சைக்கிள் கேப்ல WhatsApp செட்டிங்ஸ்-க்குள் புகுந்த புதிய Mode!இனிமேல் டபுள் கேம் ஆடலாம்.. சைக்கிள் கேப்ல WhatsApp செட்டிங்ஸ்-க்குள் புகுந்த புதிய Mode!

செயல்முறையானது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்!

செயல்முறையானது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்!

DoT வழிகாட்டுதல்களின்படி, ஒரு தொலைத்தொடர்பு நிறுவனம் - ஏற்கனவே உள்ள எண்ணிற்கு, ஒரு புதிய சிம் கார்டு வேண்டும் என்கிற கோரிக்கையைப் பெற்றவுடன், அத்தகைய கோரிக்கையின் ரசீதை தெரிவிக்கும் எஸ்எம்எஸ் ஒன்றை வாடிக்கையாளர்களுக்கு அனுப்ப வேண்டும்.

மேலும் அவர்கள் - ஐவிஆர்எஸ் கால் மூலம் - புதிய சிம் கார்டின் ரசீதை சரிபார்க்கவும், அதற்கான கோரிக்கையை அங்கீகரிக்கவும் வேண்டும். இந்த சந்தர்ப்பங்களில் ஒரு வாடிக்கையாளர், கோரிக்கையை உறுதிப்படுத்தவில்லை என்றால், சிம் கார்டு அப்கிரேட் செயல்முறையானது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்!

Best Mobiles in India

English summary
New SMS rule for Jio Airtel and Vodafone, DoT has given 15 days time to implement new guideline.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X