ஆடி மாசத்தை அதகளப்படுத்த வரும் 6 புது போன்கள்; Samsung டூ OnePlus வரை!

|

"வந்தது 7.. அதுல 4 தான் தேறும்.. மீதி எல்லாம் கொஞ்சம் மொக்கை தான்!" என்கிற அளவில் தான் கடந்த ஜூலை மாதம் இருந்தது.

அதாவது கடந்த ஜூலை மாத தொடக்கத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அறிமுகமான நத்திங் போன் (1) ஆனது "சொல்லிக்கொள்ளும்படி" இல்லை!

அதே போல மாத கடைசியில் வெளியான கூகுள் பிக்சல் 6A ஸ்மார்ட்போனும், அறிமுகமான வேகத்தில் ஃபிங்கர் பிரிண்ட்டில் டெக்னீக்கல் சிக்கலை எதிர்கொண்டது.

அப்போது உருப்படியாக வந்த மாடல்கள் என்னென்ன?

அப்போது உருப்படியாக வந்த மாடல்கள் என்னென்ன?

அதே மாதத்தில் வெளியான ரெட்மி கே50ஐ ஸ்மார்ட்போனை ஒரு நல்ல பவர்ஃபுல் போன் என்று கூறலாம்.

மேலும் ஒப்போ ரெனோ 8 சீரீஸ் மாடல்கள் ஆனது தரமான கேமரா போன்கள் என்பதில் சந்தேகமே வேண்டாம்; குறிப்பாக ப்ரோ மாடல்!

மீதமுள்ள ஒன்பிளஸ் நோர்ட் 2டி மற்றும் விவோ டி1எக்ஸ் ஆகிய இரண்டுமே அந்தந்த நிறுவனங்களின் பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் ஆகும்; விலைக்கு ஏற்ற போன்கள் என்பதில் சந்தேகம் வேண்டாம்.

ஆகஸ்ட் மாதம் (அதாங்க ஆடி மாசம்) எப்படி இருக்கும்?

ஆகஸ்ட் மாதம் (அதாங்க ஆடி மாசம்) எப்படி இருக்கும்?

கண்டிப்பாக ஜூலை 2022 போல் இருக்காது. ஏனெனில் ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகவுள்ள எல்லா ஸ்மார்ட்போன்களுமே அந்தந்த நிறுவனங்களின் பிரீமியம் மற்றும் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் ஆகும்.

இன்னும் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், அவைகள் அனைத்துமே ஆகஸ்ட் மாதத்தின் முதல் 10 நாட்களுக்குள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

ரூ.10,000 பட்ஜெட்டில் உள்ள எல்லா போன்களும் காலி.. இனி ரூ.10,000 பட்ஜெட்டில் உள்ள எல்லா போன்களும் காலி.. இனி "இது" தான் மாஸ்!

என்ன விலைக்கு.. என்னென்ன ஸ்மார்ட்போன்கள்? இதோ லிஸ்ட்!

என்ன விலைக்கு.. என்னென்ன ஸ்மார்ட்போன்கள்? இதோ லிஸ்ட்!

சரி வாருங்கள், இந்த ஆகஸ்ட் 2022-இல் அறிமுகம் செய்யப்படவுள்ள "மிக முக்கியமான" 6 ஸ்மார்ட்போன்களை பற்றியும், அவைகள் சரியாக எந்த தேதியில் அறிமுகமாகும் என்பதை பற்றியும், அவைகளின் எதிர்பார்க்கப்படும் விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? என்னென்ன முக்கிய அம்சங்களை பேக் செய்யலாம் என்பது பற்றியும் விரிவாக பார்க்கலாம்.

06. ஐக்யூ 9டி (iQOO 9T)

06. ஐக்யூ 9டி (iQOO 9T)

ஐக்யூ நிறுவனத்தின் இந்த லேட்டஸ்ட் பிரீமியம் ஸ்மார்ட்போன் ஆனது ஆகஸ்ட் 2 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இது 6.78-இன்ச் Full-HD+ AMOLED டிஸ்பிளே, 120Hz ரெஃப்ரெஷ் ரேட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 சிப்செட், 120W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4,700mAh பேட்டரி, 50எம்பி + 13எம்பி + 12எம்பி என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப், 16எம்பி செல்பீ கேமரா போன்ற அம்சங்களை பேக் செய்யலாம்.

இந்தியாவில் இதன் விலை ரூ.49,999 ஆக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

பூமர் அங்கிள்களுக்கு வேட்டு.. WhatsApp-இல் புது கிடுக்கிப்பிடி!பூமர் அங்கிள்களுக்கு வேட்டு.. WhatsApp-இல் புது கிடுக்கிப்பிடி!

05. மோட்டோ ரேஸர் 2022 (Moto Razr 2022)

05. மோட்டோ ரேஸர் 2022 (Moto Razr 2022)

இது சீனாவில் வருகிற ஆகஸ்ட் 2 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படவுள்ளது. இது ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 சிப் மூலம் இயங்கும் என்பதை மோட்டோரோலா நிறுவனம் ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளது.

இது சுமார் 1500 அமெரிக்க டாலர்களுக்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.95,000!

04. மோட்டோ எட்ஜ் 30 அல்ட்ரா (Moto Edge 30 Ultra)

04. மோட்டோ எட்ஜ் 30 அல்ட்ரா (Moto Edge 30 Ultra)

மோட்டோரோலாவின் Razr சீரீஸின் கீழ் மட்டுமல்ல, அதே ஆகஸ்ட் 2 ஆம் தேதி அன்று இந்த பிராண்டின் எட்ஜ் 30-சீரிஸின் கீழும் ஒரு டாப்-எண்ட் மாடல் அறிமுகமாக உள்ளது. அது மோட்டோ எட்ஜ் 30 அல்ட்ரா ஆகும்.

ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 சிப்செட்டுடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் சீன சந்தையில் 'ப்ரோ' என்றும், உலகளாவிய சந்தைகளில் 'அல்ட்ரா' என்றும் அழைக்கப்படலாம்.

Edge 30 Ultra ஸ்மார்ட்போனின் முக்கியமான சிறப்பம்சம் என்னவென்றால், 200MP மெயின் கேமராவுடன் வரும் உலகின் முதல் ஸ்மார்ட்போன் இதுதான். இது ரூ.69,999 அறிமுகம் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

அட! ரூ.2000-க்குள் இப்படிலாம் கூட மொபைல் போன் கிடைக்குமா? சொல்லவே இல்ல!அட! ரூ.2000-க்குள் இப்படிலாம் கூட மொபைல் போன் கிடைக்குமா? சொல்லவே இல்ல!

03. ஒன்பிளஸ் 10டி (OnePlus 10T)

03. ஒன்பிளஸ் 10டி (OnePlus 10T)

இந்தியாவில், ஆகஸ்ட் 3 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ள OnePlus 10T ஆனது, ​​மிகவும் சக்திவாய்ந்த ஆண்ட்ராய்டு போனாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இந்த ஸ்மார்ட்போன் ஒரு மில்லியனுக்கும் அதிகமான AnTuTu ஸ்கோரை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போன் ரூ.49,999 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த விலை நம்பும்படி இல்லை என்பது எங்கள் கருத்து.

02. சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 4 (Samsung Galaxy Z Fold 4)

02. சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 4 (Samsung Galaxy Z Fold 4)

இது சாம்சங் நிறுவனத்தின் "நெக்ஸ்ட் லெவல்" மடங்கக்கூடிய ஸ்மார்ட்போன் ஆகும். இந்த ஆண்டு வெளியாகும் Galaxy Z Fold 4 ஆனது மிகவும் மலிவு விலையில் இருக்கும் என்றும், 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் கீழ் வரலாம் என்றும் சில அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, இது தோராயமாக ரூ.1,51,800 முதல் தொடங்கி சுமார் ரூ.1,61,500 வரை செல்லலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திடீரென்று ரூ.5000 விலைக்குறைப்பு; வேற லெவல் டிமாண்டில் உள்ள லேட்டஸ்ட் Samsung போன்!திடீரென்று ரூ.5000 விலைக்குறைப்பு; வேற லெவல் டிமாண்டில் உள்ள லேட்டஸ்ட் Samsung போன்!

01. சாம்சங் கேலக்ஸி இசட் ஃப்ளிப் 4 (Samsung Galaxy Z Flip 4)

01. சாம்சங் கேலக்ஸி இசட் ஃப்ளிப் 4 (Samsung Galaxy Z Flip 4)

சாம்சங் இசட் ஃபோல்ட்-சீரிஸின் "தம்பியாக" கருதப்படும் இசட்-ஃப்ளிப் சீரீஸுன் கீழும் ஒரு புதிய மாடல் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதுவும் ஆகஸ்ட் 10 ஆம் தேதியே வெளியாகும்; அது சாம்சங் கேலக்ஸி இசட் ஃப்ளிப் 4 ஆகும்.

இதில் ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 சிப், 6.7-இன்ச் "மெயின்" டிஸ்பிளே + 2.1 இன்ச் அவுட்டர் டிஸ்பிளே, டூயல் 12எம்பி கேமராக்கள் மற்றும் 10எம்பி செல்பீ கேமரா, 25W வயர்டு மற்றும் 10W வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 3,400mAh அல்லது 3,700mAh பேட்டரி போன்ற அம்சங்களை எதிர்பார்க்கலாம்.

விலையை பொறுத்தவரை, தோராயமாக ரூ.88,000 முதல் தொடங்கி ரூ. 1,04,000 வரை செல்லலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Photo Courtesy: OnePlus, Moto, iQOO

Best Mobiles in India

English summary
New Smartphones Launch in First 10 days of August 2022 Here is the List

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X