சொல்லாம கொள்ளாம நடக்கும் Amazon சேல்! ஆபரில் மிதக்கும் மொபைல் செக்ஷன்!

|

பிரபல இ-காமர்ஸ் வலைத்தளமான அமேசான் (Amazon), சொல்லாமல் கொள்ளாமல் அதன் ஸ்மார்ட்போன் அப்கிரேட் டேஸ் சேல்-ஐ (Smartphone Upgrade Days Sale) நடத்தி வருகிறது.

பெரிய அளவிலான விளம்பரங்கள் இல்லை என்றாலும் கூட இந்த லேட்டஸ்ட் சிறப்பு விற்பனையின் கீழ், அமேசான் வலைத்தளத்தில் உள்ள மொபைல் பிரிவானது ஆபர் வெள்ளத்தில் மிதக்கிறது என்றே கூறலாம்!

என்னென்ன ஸ்மார்ட்போன்கள் மீது? எவ்வளவு தள்ளுபடி?

என்னென்ன ஸ்மார்ட்போன்கள் மீது? எவ்வளவு தள்ளுபடி?

ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஆக்சஸெரீஸ்கள் மீதான சலுகைகளை வழங்கும் இந்த 'ஸ்மார்ட்போன் அப்கிரேட் டேஸ்' விற்பனையின் கீழ் OnePlus, Xiaomi, Samsung, iQOO, Realme, Tecno மற்றும் Oppo உள்ளிட்ட பிராண்டுகளில் இருந்து வாங்க கிடைக்கும் ஸ்மார்ட்போன்களின் மீது 40% வரையிலான தள்ளுபடி அணுக கிடைக்கும்.

ஒருவேளை நீங்கள் OnePlus Nord CE 2 Lite 5G, Realme Narzo 50A, Redmi 10 சீரீஸ் மற்றும் iQOO Neo 6 5G போன்ற ஸ்மார்ட்போன்களை வாங்க திட்டமிட்டு இருந்தால், அமேசானின் இந்த சலுகையை சரியாக பயன்படுத்திக்கொள்ளவும்.

பிரீமியம் போன் வாங்கணும்னு முடிவு பண்ணிட்டா இந்த 8-ல 1 தான் வாங்கணும்!பிரீமியம் போன் வாங்கணும்னு முடிவு பண்ணிட்டா இந்த 8-ல 1 தான் வாங்கணும்!

இந்த ஆபர் சேல் எப்போது வரை நீடிக்கும்?

இந்த ஆபர் சேல் எப்போது வரை நீடிக்கும்?

40% வரையிலான சலுகைகள் மட்டுமின்றி, வங்கி சலுகைகள் மற்றும் எக்ஸ்சேன்ஜ் சலுகைகளும் கூட அணுக கிடைக்கிறது. பாங்க் ஆஃப் பரோடா கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தினால் 10 சதவீத உடனடி தள்ளுபடியை பெறலாம். அதாவது ரூ.7,000 என்கிற குறைந்தபட்ச பரிவர்த்தனைக்கு (கிரெடிட் கார்டுகளில்) ரூ.750 வரையிலான தள்ளுபடியையும், கிரெடிட் கார்டுகள் வழியிலான இஎம்ஐ-இல் ரூ.1,250 வரையிலுமான தள்ளுபடியை பெறலாம்.

இது தவிர்த்து எக்ஸ்சேஞ்ச் சலுகைகள் மற்றும் 9 மாதங்கள் வரையிலான நோ-காஸ்ட் EMI விருப்பங்களும் அணுக கிடைக்கும். இந்த சலுகை செப்டம்பர் 5 வரை நேரலையில் இருக்கும்.

iQOO ஸ்மார்ட்போன்கள் மீதான சலுகைகள்:

iQOO ஸ்மார்ட்போன்கள் மீதான சலுகைகள்:

iQOO ஸ்மார்ட்போன்களின் மீது வங்கி சலுகைகள் மற்றும் EMI விருப்பங்கள் அணுக கிடைக்கிறது. நீங்கள் iQOO Z6 (44W) மாடலை தேர்வு செய்யும் பட்சத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கியின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளில் ரூ.1,250 வரையிலான தள்ளுபடியை பெறலாம்; அதாவது இதை ரூ.14,499 க்கு வாங்கலாம்.

இதே போல iQOO Neo 6 5G ஆனது ரூ.29,990 முதல் வாங்க கிடைக்கும்.

Truecaller சீக்ரெட்ஸ்: இது தெரிஞ்ச அடுத்த நிமிஷமே App-ஐ திறப்பீங்க!Truecaller சீக்ரெட்ஸ்: இது தெரிஞ்ச அடுத்த நிமிஷமே App-ஐ திறப்பீங்க!

OnePlus ஸ்மார்ட்போன்கள் மீதான சலுகைகள்:

OnePlus ஸ்மார்ட்போன்கள் மீதான சலுகைகள்:

அமேசானின் இந்த அப்கிரேட் டேஸ் சேலின் கீழ் பல OnePlus மாடல்களின் மீது தள்ளுபடிகள் மற்றும் EMI விருப்பங்கள் அணுக கிடைக்கிறது.

தற்போது OnePlus Nord CE 2 Lite 5G மற்றும் OnePlus 9 Pro ஆகியவைகள் முறையே ரூ.18,999 மற்றும் ரூ.49,999 முதல் வாங்க கிடைக்கிறது.

இதில் 3, 6 மற்றும் 9 மாதங்களுக்கான நோ காஸ்ட் EMI சலுகை மற்றும் ரூ.1,250 வரையிலான பேங்க் கேஷ்பேக் ஆபரும் அடங்கும்.

Xiaomi ஸ்மார்ட்போன்களின் மீதான சலுகைகள்:

Xiaomi ஸ்மார்ட்போன்களின் மீதான சலுகைகள்:

சியோமி ஸ்மார்ட்போன்களும் வங்கி சலுகைகளின் கீழ் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக Xiaomi 11T Pro 5G ஸ்மார்ட்போனை இப்போது நீங்கள் ரூ.37,999 க்கு சொந்தமாக்கி கொள்ளலாம்.

அதேபோல Redmi 10A மாடலை ரூ.9,499 க்கும் மற்றும் Redmi Note 11 மாடலை ரூ.13,499 க்கும் வாங்கலாம்.

BSNL பயனர்களுக்கு ஒரு பேட் நியூஸ்; இருந்தது ஒன்னு.. இப்போ அதுவும் போச்சு!BSNL பயனர்களுக்கு ஒரு பேட் நியூஸ்; இருந்தது ஒன்னு.. இப்போ அதுவும் போச்சு!

Realme ஸ்மார்ட்போன்கள் மீதான சலுகைகள்:

Realme ஸ்மார்ட்போன்கள் மீதான சலுகைகள்:

அமேசானில் இப்போது Realme Narzo 50A ஆனது ரூ.5,000 வரையிலான கேஷ்பேக் உடன் ரூ.10,999 க்கு வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் Helio G85 ப்ராசஸர், 6000mAh பேட்டரி போன்ற அம்சங்களை பேக் செய்யும் ஒரு கேமிங் ஸ்மார்ட்போன் ஆகும்.

Samsung ஸ்மார்ட்போன்கள் மீதான சலுகைகள்:

Samsung ஸ்மார்ட்போன்கள் மீதான சலுகைகள்:

சாம்சங் எம் சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மீது எக்கச்சக்கமான சலுகைகள் அணுக கிடைக்கிறது. குறிப்பாக Samsung Galaxy M32 மற்றும் Samsung Galaxy M13 முறையே ரூ.12,499 மற்றும் ரூ.11,999 க்கு வாங்க கிடைக்கிறது. இதில் ரூ.1,500 வரையிலான பேங்க் கேஷ்பேக் ஆபரும் அடங்கும்.

இந்த டேப்லெட் 100% ரக்டு பாய்ஸ்களுக்கு தான்.. சாக்லேட் பாய்ஸ்களுக்கு அல்ல!இந்த டேப்லெட் 100% ரக்டு பாய்ஸ்களுக்கு தான்.. சாக்லேட் பாய்ஸ்களுக்கு அல்ல!

Tecno மற்றும் Oppo ஸ்மார்ட்போன்கள் மீதான சலுகைகள்:

Tecno மற்றும் Oppo ஸ்மார்ட்போன்கள் மீதான சலுகைகள்:

அமேசானின் இந்த அப்கிரேட் டேஸ் சேல் விற்பனையின் போது Tecno மற்றும் Oppo ஸ்மார்ட்போன்களின் மீதும் சலுகைகள் கிடைக்கிறது. குறிப்பாக Tecno Pop 5 LTE ஆனது ரூ.6,299 க்கும், OPPO A54 ஸ்மார்ட்போன் ஆனது ரூ.11,990 க்கும் (பேங்க் ஆபர்களுடன்) வாங்க கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
New Smartphone Upgrade Days Sale 2022 in Amazon Website Check Details

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X