புதுவரவு : ஸ்மார்ட்போன்களில் அறிமுகம் செய்யப்பட்ட டாப் கிளாஸ் அம்சங்கள்.!!

Written By: Aruna Saravanan

இந்த ஆண்டிற்கான உலக மொபைல் காங்கிரஸ் விழா ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவில் கடந்த மாதம் நடந்து முடிந்தது அனைவரும் அறிந்த ஒன்றை. இவ்விழாவில் பல புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இங்கு அவ்விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்களில் வழங்கப்பட்ட டாப் கிளாஸ் அம்சங்களை பற்றி விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
சியோமி எம்ஐ 5 UFS 2.0 ஸ்டோரேஜ்

சியோமி

இதுவே UFS 2.0 ஸ்டோரேஜ் அடங்கிய முதல் சியோமி ஸ்மார்ட்போனாகும். இது நவீன அம்சங்கள் நிறைந்தது. ஸ்டோரேஜ் மற்றும் தரவுகளை பறிமாற்றம் செய்வதில் கில்லாடி.

எல்ஜி ஸ்மார்ட்போனில் ஒரு மாற்றம்

எல்ஜி

எல்ஜி ஸ்மார்ட்போனில் ஒரு மாற்றம் கொண்டு வந்து அதை எல்ஜி ஜி5 ஸ்மார்ட்போனாக அறிமுகப்படுத்தியுள்ளனர். இதற்கு மெட்டாலிக் அமைப்பு உள்ளது மற்றும் மாடுளர் டிசைன் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் ஓரங்களில் பவர் பொத்தான்கள் உள்ளன.

சாம்சங் இரட்டை பிக்சல் ஆட்டோ ஃபோகஸ் தொழில்நுட்பம்

சாம்சங்

கேலக்ஸி எஸ்7 மற்றும் கேலக்ஸி எஸ்7 எட்ஜ் புதிய அம்சங்களுடன் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இது வரை இது போன்ற அம்சங்கள் DSLR கேமராக்களில் மட்டும்தான் இருந்தன தற்பொழுது இந்த போன்களில் வந்துள்ளது உண்மையாகவே ஒரு சிறந்த செய்திதான்.

கேமரா அருகே எல்ஜி ஜி5 வைப் வைட் ஆங்கிள் கேமரா

கேமரா

எல்ஜி ஜி5 தற்பொழுது வைட் ஆங்கிள் கேமராவோடு வந்துள்ளது. இதில் இரண்டு கேமராக்கள் உள்ளன. ஒன்று 16 எம்பி கேமரா மற்றொன்று 8 எம்பி கேமரா. இதில் 8 எம்பி கேமராவில் 135 டிகிரி லென்ஸ் அம்சம் உள்ளது. இது ஸ்மார்ட்போனுக்கு கொஞ்சம் அதிகம்தான்.

ஒப்போவின் வேகமாக சார்ஜ் செய்யும் தொழில்நுட்பம்

ஒப்போ

தற்பொழுது ஒப்போ சூப்பர் கோக் ஸ்மார்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 15 நிமிடத்தில் முழு சார்ஜை இதனால் செய்ய முடியும். வரும் ஒப்போ ஸ்மார்ட்போன்களில் இந்த தொழில்நுட்பத்தை அனுபவிக்க முடியும்.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
New Smartphone Technologies introduced in 2016 till now Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot