புது SIM கார்டு ரூல்ஸ்.. இனிமே CALL, SMS-க்கு கட்டுப்பாடு.. 10-டிஜிட் நம்பருக்கு ஆப்பு.. 7 நாட்களுக்கு கெடு!
டிராய் (TRAI) என்று சொல்லப்படும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (Telecom Regulatory Authority of India) ஆனது புது சிம் கார்டு விதிகளை (New SIM Card Rules) கொண்டு வந்துள்ளது. இந்த விதிகள் கால்கள், எஸ்எம்எஸ்கள் மற்றும் 10 டிஜிட் மொபைல் நம்பர்களில் நேரடி மாற்றத்தை கொண்டுவர இருக்கிறது. ஆகவே, ஏர்டெல் (Airtel), ஜியோ (Jio), வோடபோன் ஐடியோ (Vodafone Idea), பிஎஸ்என்எல் (BSNL) போன்ற ஒட்டுமொத்த சிம் கார்டு கஸ்டமர்களுக்கும் இது பொருந்தும்.
டெலிகாம் நிறுவனங்கள், டெலிமார்கெட்டர்கள் மற்றும் டெலிகாம் கஸ்டமர்கள் ஆகியோர் நேரடியாக இந்த விதிகளுக்கு கட்டுப்பட வேண்டியிருக்கிறது. ஆனால், டெலிகாம் கஸ்டமர்களுக்கு இந்த விதிகளால் சிரமம் கிடையாது. ஏனென்றால், அவர்களுக்கு வரும் வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்களில் சாதகமான விதிகளையே இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் கொடுத்துள்ளது.

என்னென்ன விதிகள்? டெலிகாம் கஸ்டமர்களுக்கு வரும் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்களில் மாற்றம் கொண்டு வரப்படுகிறது. அதாவது, டெலிமார்கெட்டிங் அல்லது வணிக ரீதியாக உங்களுக்கு கால் செய்ய வேண்டுமானால், 10 டிஜிட் நம்பருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆகவே, புரொமோஷன் கால்களுக்கு 140 சீரிஸ், டிரான்சாக்சன் & சர்வீஸ் கால்களுக்கு 1600 சீரிஸ் ஒதுக்கப்பட்டுள்ளது.
இப்படி காலர் லைன் ஐடென்டிபிகேஷன் (Caller Line Identification) ஒதுக்கப்படுகிறது. ஆகவே, கால் வரும்போதே அந்த நம்பரை வைத்து எதற்காக கால் வருகிறது என்பதை கண்டுபிடிக்கலாம். அதேபோல எஸ்எம்எஸ்களிலும் கண்டுபிடிக்கும்படி விதிகள் இருக்கின்றன. அதாவது, பி (P), எஸ் (S), டி (T) மற்றும் ஜி (G) என்னும் எழுத்துகளை தலைப்புகளாக கொண்டு எஸ்எம்எஸ்கள் அனுப்பப்படும்.
இதில் பி என்றால் புரொமோஷன் எஸ்எம்எஸ், எஸ் என்றால் சர்வீஸ் எஸ்எம்எஸ், டி என்றால் டிரான்சாக்சன் எஸ்எம்எஸ் மற்றும் ஜி என்றால் கவர்மெண்ட் எஸ்எம்எஸ்கள் என்று பிரிக்கப்படுகிறது. வணிக ரீதியாகவோ அல்லது சேவை ரீதியாகவோ பதிவிடப்படாத நம்பர்களில் இருந்து உங்களது வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ்களை அனுப்பினால், இந்த விதிகள் மூலம் புகார் செய்யலாம்.
இதற்காக முன் விருப்ப பதிவை கஸ்டமர்கள் செய்ய வேண்டியது கிடையாது. அதேபோல டெலிகாம் புகார்களை 3 நாட்களுக்குள் செய்ய வேண்டும் என்ற வரம்பு இந்த விதிகளின்படி 7 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆகவே, 7 நாட்களுக்குள் புகார்களை கொடுக்க வேண்டும். இந்த புகார்களை கொடுக்க வழிவகை செய்ய டெலிகாம் நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆகவே, அந்தந்த டெலிகாம் நிறுவனங்களின் மொபைல் ஆப்களிலும், வெப்சைட்களிலும் புகார் அளிக்க வழிவகை செய்யப்படுகிறது. இந்த புகாரை 5 நாட்களில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், பதிவு செய்யப்படாத நம்பர்களில் இருந்து கஸ்டமர்களுக்கு செல்லும் கால்கள், எஸ்எம்எஸ்களை ரியல்-டைமில் டெலிகாம் நிறுவனங்கள் கண்காணிக்க வேண்டும்.
அதேபோல கஸ்டமர்களுக்கு கால்கள் அல்லது எஸ்எம்எஸ்களை அனுப்ப கோரும் நிறுவனங்களின் பிசிகல் வெரிபிகேஷன், பயோமெட்ரிங் வெரிபிகேஷன், டெலிமார்கெட்டர் பதிவு போன்றவற்றை உறுதி செய்ய வேண்டும் என்றும் டெலிகாம் நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் இல்லையென்றால், அபராதமும் விதிக்கப்பட இருக்கிறது.
ஆகவே, இந்த புதிய விதிகளின்படி சேவைகளை வழங்க வேண்டும். இல்லையென்றால், சேவை வழங்குநர்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட இருக்கிறது. அதுவே, இரண்டாவது முறை மீறினால் ரூ.5 லட்சமும், மூன்றாவது முறை மீறினால் ரூ.10 லட்சமும் அபராதம் விதிக்கப்பட இருக்கிறது. டிசிசிசிபிஆர் விதிகளில் (TCCCPR Rules) இவை குறிப்பிடப்பட்டு இருக்கின்றன.
இதேபோல முன்னதாக புது சிம் கார்டு வாங்குவதற்கும் விதிகள் கொண்டுவர பிஎம்ஓ (PMO) என்று அழைக்கப்படும் பிரதமர் அலுவலகம் (Prime Minister Office) அலுவலகத்தில் இருந்து இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்துக்கு ஒரு உத்தரவு சென்றுள்ளது. இதில் ஆதார் கார்டு பயோமெட்ரிக் விவரங்களை சரி பார்த்த பிறகே சிம் கார்டு வழங்க முன்மொழியப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications